Published:Updated:

கலெக்டர்கள் பந்தாடப்படுவது எப்படி? - அடுத்தடுத்து 'முன்னுதாரண' சம்பவங்கள்!

மதுரையைவிட மோசமாக இருக்கிறது அரியலூர். கடந்த மூன்று ஆண்டுகளில் ஐந்து ஆட்சியர்களைப் பார்த்திருக்கிறது அரியலூர் மாவட்டம்.

கலெக்டர்
கலெக்டர்

'நேர்மையான ஆட்சியர்களை ஏனோ ஆளுங்கட்சியினருக்குப் பிடிப்பதேயில்லை. மெத்த படித்துவிட்டு மாவட்டத்தின் ஆட்சியராக அமர்பவர்களை, ஆளுங்கட்சியினர் தங்கள் அடிமைகளாக நினைக்கின்றனர். மதுரையிலும் அரியலூரிலும் அடுத்தடுத்து நடக்கும் மாவட்ட ஆட்சியர் மாற்றம், அப்படித்தான் நினைக்கவைக்கிறது'' என்று கொதிக்கின்றனர் இரு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2pj3Paj

மதுரையில் சகாயம் முதல் நாகராஜன் வரை பந்தாடப்படும் படலம் நீண்டுவந்த நிலையில், ஊரக வளர்ச்சித் துறையின் கூடுதல் இயக்குநராக இருந்த டி.எஸ்.ராஜசேகர் மதுரை கலெக்டராக கடந்த ஜூலை 1-ம் தேதி நியமிக்கப்பட்டார். ஆளுங்கட்சிப் புள்ளிகளைப் பொருட்படுத்தாமல் வேலைசெய்த அவர், குடிமராமத்துப்பணி, ஆற்றில் சவுடுமணல் அள்ளுவதைத் தடுப்பது போன்றவற்றில் தீவிரம் காட்டினார். அதனால் ஆளுங்கட்சியினர் கோபமாகினர். அதையடுத்து, அவர் விடுப்பில் சென்றார். அவர் விடுப்பில் இருக்கும்போதே, அரியலூரில் இருந்த டாக்டர் வினய் மதுரைக்கு மாற்றப்பட்டார்.

குடிமராமத்துப்பணியில் ஆளுங்கட்சி நிர்வாகிகள் செய்த கோல்மால்களைக் கண்டுபிடித்தார். அதனால், அவரை மாற்றியிருக்கின்றனர்.

அக்டோபர் 14-ம் தேதி மதுரை ஆட்சியராகப் பொறுப்பேற்ற டாக்டர் வினய், ''நீர்நிலையைப் பாதுகாப்பேன். மழைநீர் சேகரிப்பு மற்றும் மக்கள் பிரச்னைகளை உடனே தீர்ப்பேன்'' என்றார். இவர் ஏற்கெனவே பக்கத்து மாவட்டமான திண்டுக்கல்லில் இத்தகைய பணிகளைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் என்பது மதுரை மக்களுக்கும் ஓரளவு தெரியும். அதனால், இவரையும் வேறு இடத்துக்கு மாற்றிவிடுவார்களோ என்ற கவலையில் இருக்கிறார்கள் மதுரை மக்கள்.

இதற்கு ஒரு காரணமும் உண்டு. திண்டுக்கல்லில் ஆட்சியராகப் பணியாற்றிய வினய், கடந்த ஜூலை 1-ம் தேதிதான் அரியலூர் ஆட்சியராக மாற்றப்பட்டார். மூன்றே மாதத்தில் மதுரைக்கு மாற்றப்பட்டுவிட்டார். 'அரியலூர் தொகுதி எம்.எல்.ஏ-வும் அரசு கொறடாவுமான தாமரை ராஜேந்திரனுடன் வினய்க்கு மோதல். அதனால்தான் மதுரைக்கு மாற்றப்பட்டுவிட்டார்' எனும் தகவல்தான், 'நேர்மையாகப் பணியாற்றும் அதிகாரிகளை விட்டுவைக்கவே மாட்டார்களா?' என்று மதுரை மக்களின் கவலையை அதிகரித்திருக்கிறது.

மதுரையைவிட மோசமாக இருக்கிறது அரியலூர். கடந்த மூன்று ஆண்டுகளில் ஐந்து ஆட்சியர்களைப் பார்த்திருக்கிறது அரியலூர் மாவட்டம். ''அரசு கொறடா தாமரை ராஜேந்திரனுடனும், அவரின் அக்கா மகன் பிரேமுடனும் அனுசரித்துப்போகவில்லை என்றால், அரியலூரில் கலெக்டராக இருக்க முடியாது'' என்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.

கலெக்டர்கள் பந்தாடப்படுவது எப்படி? - அடுத்தடுத்து 'முன்னுதாரண' சம்பவங்கள்!

சரவண வேல்ராஜ், லட்சுமி பிரியா மற்றும் விஜயலட்சுமி ஆகியோருக்குப் பிறகு, திண்டுக்கல்லில் இருந்து மாற்றப்பட்ட டாக்டர் வினய், அரியலூரில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக 45 லட்சம் பனைமரத்தை நடவேண்டும் என்ற குறிக்கோளோடு கடுமையாக உழைத்தார். அப்போது குடிமராமத்துப்பணியில் ஆளுங்கட்சி நிர்வாகிகள் செய்த கோல்மால்களைக் கண்டுபிடித்தார். அதனால், அவரை மாற்றியிருக்கின்றனர். அதன் பின்னணியிலும் கொறடாதான் இருக்கிறார்'' என்கிறார்கள் அரியலூரில் உள்ள சமூகச்செயற்பாட்டாளர்கள்.

மக்கள் சேவை இயக்கத் தலைவர் தங்க.சண்முகசுந்தரம், ''கமிஷன் அடிக்க தடைபோடும் அதிகாரிகளால், இந்த அரசுடன் இணைந்து பணியாற்றவே முடியாது. அரியலூரில் சிறப்பாகச் செயல்பட்ட வினய்யை மாற்றியதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சிமென்ட் ஆலைகளுக்குச் சொந்தமான சுரங்க உரிமத்தை ரத்துசெய்தார். குடிமராமத்துப்பணியில் வேலையே செய்யாமல் பணம் எடுக்க திட்டமிட்டு இருந்த அ.தி.மு.க-வினருக்கு செக் வைத்தார். அதனால்தான் அவரை மாற்றிவிட்டார்கள்'' என்றார்.

- கலெக்டர்கள் பந்தாடப்படுவதன் பின்னணியில் உள்ள ஆளும் கட்சியினரின் உள்ளரசியலை விரிவாகச் சொல்லும் ஜூனியர் விகடன் செய்திக் கட்டுரையை முழுமையாக வாசிக்க > ஆளுங்கட்சியினரின் ஆதிக்கம்... பந்தாடப்படும் கலெக்டர்கள்! https://www.vikatan.com/government-and-politics/politics/madurai-and-ariyalur-collectors-transfer-issue

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய> http://bit.ly/2MuIi5Z |