Published:Updated:

``கொள்கை ரீதியாகத்தான் திமுக-வை ஆதரிக்கிறோம், ஆனால்..!" - கோவையில் முத்தரசன் பேச்சு

முத்தரசன்
News
முத்தரசன்

``நாங்கள் கொள்கைரீதியாக தி.மு.க-வை ஆதரிக்கிறோம். ஆனால், அதற்காக மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதாக எண்ணக் கூடாது." - முத்தரசன்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கோவை கட்சி அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``மத்திய அரசு ஜனநாயக விரோதமான முறையில் நடந்துவருகிறது. ஆர்.எஸ்.எஸ் விருப்பத்தின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுவருகின்றன.

முத்தரசன்
முத்தரசன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்ற விவகாரத்தில் மோடி பதவி விலகியிருக்க வேண்டும். தற்போது நீதிமன்றங்கள், அரசியலமைப்பு சட்டத்துக்கு மாறாக ஆர்.எஸ்.எஸ் துணை அமைப்புகளாக மாறிவிட்டன.

ஸ்ரீபெரும்புதூர் ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள் போராட்டத்தின்போது தொழிலாளர்கள்மீது காவல்துறை தாக்குதல் நடத்தியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். நாங்கள் கொள்க ரீதியாக தி.மு.க-வை ஆதரிக்கிறோம். ஆனால், அதற்காக மென்மையான போக்கை கடைப்பிடிப்பதாக எண்ணக் கூடாது.

ஃபாக்ஸ்கான்
ஃபாக்ஸ்கான்

இல்லம் தேடி கல்வி, செவிலியர் இட ஒதுக்கீடு தொடர்பாகவெல்லாம் கண்டனம் தெரிவித்திருக்கிறோம். தன்மீது குற்றம் இல்லையென்றால், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏன் ஓடி ஒளிய வேண்டும்... இந்த விஷயத்தில் காவல்துறை இவ்வளவு கால தாமதம் செய்யவேண்டியதில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உலகில் எந்த மீனவருக்கும் நடக்காத துன்பம் தமிழக மீனவர்களுக்கு நடந்துவருகிறது. தமிழக மீனவர்கள், இந்திய மீனவர்கள் இல்லையா என்று மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும். சொந்த நாட்டு மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத அரசாக மத்திய அரசு உள்ளது.

மீனவர்கள்
மீனவர்கள்

உங்களால் பாதுகாப்பு அளிக்க முடியாவிட்டால், தமிழக மீனவர்கள் தற்காப்புக்காகத் துப்பாக்கிகள் வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும்" என்றார்.