Published:Updated:

தமிழக ஆளுநர் தன்னிச்சையாக செயல்படுகிறார்! - முத்தரசன் குற்றச்சாட்டு

முத்தரசன்
News
முத்தரசன்

``தன்னிச்சையாகச் செயல்படக் கூடிய தேர்தல் ஆணையம், தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் மறைமுகமாகக் கொண்டுவரப்பட்டு விட்டது." -முத்தரசன்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற கட்சி ஆலோசனைக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், ``அதிகாரிகள் முறையாகக் கண்காணிப்பு பணியில் ஈடுபடாததாலேயே திருநெல்வேலியில் பள்ளி கழிவறை கட்டடம் இடிந்து விழுந்து, மாணவர்கள் உயிரிழந்து விட்டார்கள். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது, கைது நடவடிக்கையுடன், பள்ளி நிர்வாகத்திடமிருந்து உரிய இழப்பீட்டை மாணவர்களுக்குப் பெற்றுத்தர வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு மத்திய அரசு விற்று வருவது ஜனநாயகத்துக்கு மிகவும் ஆபத்தானது.

முத்தரசன்
முத்தரசன்

வடகிழக்குப் பருவமழை சேதங்கள் தொடர்பாக, கணக்கீடு செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசு அதிகாரிகள், பார்வையிட்ட பிறகே அதிக அளவு சேதம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, புதிதாக ஒரு கணக்கெடுப்பை நடத்த வேண்டும். காரணம் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பயிர்களுக்கு அரசு வழங்கிய நிவாரண அறிவிப்பு போதுமானதாக இல்லை.

நிவாரணத்தைக் கூடுதலாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கூட்டுறவுச் சங்கங்களில் உர விற்பனை விலைக்கும், தனியார் விற்கும் விலைக்கும் அதிக விலை வித்தியாசம் காணப்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கூட்டுறவுகளில் உரங்கள் இல்லாததால் தான், தனியாரில் விவசாயிகள் அதிக விலை கொடுத்து வாங்கக் கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தடையின்றி உரம் கிடைக்கவும் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு உரம் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக ஆளுநர் தன்னிச்சையாகச் செயல்பட்டு போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறார். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் தவிர மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுக்கு எதிராக ஆளுநர்கள் செயல்பட்டு வருகின்றனர். இது ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல.

பத்திரிகையாளர்கள் சந்திப்பு
பத்திரிகையாளர்கள் சந்திப்பு

தமிழகத்தில் ஒப்பந்தங்களில் 60 சதவிகிதம் கமிஷனாக பெறுவதால், 40 சதவிகித பணிகள் தான் நடைபெற்று வருகின்றன. அதுவும் பணிகள் நடப்பதற்கு முன்பாகவே கமிஷன் தொகை வாங்கப்படுகிறது, இது எல்லா ஆட்சிகளிலும் தொடர்கிறது.

தன்னிச்சையாகச் செயல்படக் கூடிய தேர்தல் ஆணையம் தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் மறைமுகமாகக் கொண்டுவரப்பட்டு விட்டது. தமிழகத்தில் தொலைநோக்குத் திட்டம் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை வரும் கூட்டத்தொடரில் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்"என்றார்.