Published:Updated:

``மகாராஷ்டிரா 5,000 ஆண்டுகளில் கண்டிராத `பிசாசு' முதல்வர் ஷிண்டே!" - சிவசேனா தாக்கு

சிவசேனா தாக்கு

`மகாராஷ்டிரா 5,000 ஆண்டுகளில் கண்டிராத பிசாசு முதல்வர்’ என்று ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனா கடுமையாக விமர்சித்திருக்கிறது.

``மகாராஷ்டிரா 5,000 ஆண்டுகளில் கண்டிராத `பிசாசு' முதல்வர் ஷிண்டே!" - சிவசேனா தாக்கு

`மகாராஷ்டிரா 5,000 ஆண்டுகளில் கண்டிராத பிசாசு முதல்வர்’ என்று ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனா கடுமையாக விமர்சித்திருக்கிறது.

Published:Updated:
சிவசேனா தாக்கு

மகாராஷ்டிராவில் சிவசேனாவின் சின்னமான வில் அம்பை தேர்தல் கமிஷன் முடக்கியிருக்கிறது. இதற்கு சிவசேனா அதிருப்தி கோஷ்டித் தலைவரும், முதல்வருமான ஏக்நாத் ஷிண்டேதான் காரணம் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கருதுகிறார். இதையடுத்து சிவசேனாவின் சாம்னா பத்திரிகையில் ஏக்நாத் ஷிண்டேவை உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்திருக்கிறார். அதில், ``சத்ரபதி சிவாஜியைக் கொலைசெய்ய முகாலய மன்னன் டெல்லியிலிருந்து அப்சல் கானை மகாராஷ்டிராவுக்கு அனுப்பிவைத்தான். அதே போன்று மத்தியிலிருக்கும் பா.ஜ.க., சிவசேனாவை அழிக்க ஏக்நாத் ஷிண்டேவின் உதவியைக் கோரியிருக்கிறது. பாலாசாஹேப் தாக்கரே தொடங்கிய சிவசேனாவுக்கு ஏக்நாத் ஷிண்டே களங்கம் ஏற்படுத்தியிருக்கிறார். ஷிண்டே மற்றும் அவர் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சிவசேனாவை காயப்படுத்தியிருக்கின்றனர். இதன் மூலம் மகாராஷ்டிராவை முடக்கி மராத்தியர்களை பலவீனப்படுத்தியிருக்கின்றனர்.

உத்தவ் - ஷிண்டே
உத்தவ் - ஷிண்டே

கட்சிக்கான எங்கள் போராட்டம் இதோடு முடிந்துவிடாது. இந்தப் போராட்டம் எழுச்சி பெற்று எதிரியின் நெஞ்சில் எங்கள் கால்கள் முத்திரை பதிக்கும். ஏக்நாத் ஷிண்டே ஒரு பிசாசு. மகாராஷ்டிரா கடந்த 5,000 ஆண்டுகளில் இது போன்ற ஒரு பிசாசு முதல்வரைக் கண்டதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வழக்கமாக சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத்-தான் சாம்னா பத்திரிகையில் தலையங்கம் எழுதுவார். அவர் தற்போது பண மோசடி வழக்கில் அமலாக்கப் பிரிவால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இதையடுத்து தற்போது உத்தவ் தாக்கரே சாம்னா பத்திரிகையில் தலையங்கம் எழுதிவருகிறார். ஏக்நாத் ஷிண்டே கடந்த 4-ம் தேதி தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதி தங்களுக்கு சிவசேனாவின் வில் அம்பு சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் தேர்தல் கமிஷன் வில் அம்பு சின்னத்தை முடக்கியிருக்கிறது. அதோடு புதிய சின்னம் மற்றும் கட்சியின் பெயரைத் தேர்வு செய்யும்படி ஷிண்டே, உத்தவ் தாக்கரே அணியிடம் கேட்டுக்கொண்டிருக்கிறது.