Published:Updated:

தஞ்சை: `கையெழுத்து வாங்கி பணத்தைக் கொடுத்திருக்கிறேன்’ - வேட்பாளர்கள் புகாருக்கு பாஜக நிர்வாகி பதில்

பா.ஜ.க நிர்வாகி பண்ணவயல் இளங்கோ ( ம.அரவிந்த் )

தேர்தல் செலவுக்குக் கொடுத்த பணம் வேட்பாளர்களுக்குக் கொடுக்கப்பட்டதா இல்லை பண்ணவயல் இளங்கோ எடுத்துக்கொண்டாரா என்பதைக் கண்டுபிடிக்க அண்ணாமலை ரகசியமாக உத்தரவிட்டுள்ளதாகவும், அது தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருவதாகவும் சொல்லப்படுகிறது.

தஞ்சை: `கையெழுத்து வாங்கி பணத்தைக் கொடுத்திருக்கிறேன்’ - வேட்பாளர்கள் புகாருக்கு பாஜக நிர்வாகி பதில்

தேர்தல் செலவுக்குக் கொடுத்த பணம் வேட்பாளர்களுக்குக் கொடுக்கப்பட்டதா இல்லை பண்ணவயல் இளங்கோ எடுத்துக்கொண்டாரா என்பதைக் கண்டுபிடிக்க அண்ணாமலை ரகசியமாக உத்தரவிட்டுள்ளதாகவும், அது தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருவதாகவும் சொல்லப்படுகிறது.

Published:Updated:
பா.ஜ.க நிர்வாகி பண்ணவயல் இளங்கோ ( ம.அரவிந்த் )

தஞ்சாவூர் மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்குத் தேர்தல் செலவுக்குக் கொடுக்க வலியுறுத்தி பாஜக தலைமை கொடுத்த பணத்தை மாவட்ட அளவில் முக்கியப் பொறுப்பில் உள்ள நிர்வாகி ஒருவர் வேட்பாளர்களிடம் கொடுக்காமல் தானே வைத்துக்கொண்டதாக கட்சியினர் சிலரே தலைமைக்குப் புகார் அனுப்பியுள்ளனராம், இது குறித்து மாநிலத் தலைவரான அண்ணாமலை ரகசியமாக விசாரிக்க உத்தரவிட்டிருப்பதாகவும் வெளியான தகவல் தஞ்சை மாவட்ட பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலை
அண்ணாமலை

பாஜக-வில் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவராக இருப்பவர் பண்ணவயல் இளங்கோ. தென்னை மேம்பாட்டு வாரிய உறுப்பினராகவும் பதவி வகித்துவருகிறார். நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தஞ்சாவூர் மாநகராட்சியில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்குத் தேர்தல் செலவுக்காகக் கொடுக்க சொல்லி பாஜக தலைமை பண்ணவயல் இளங்கோவிடம் பணம் கொடுத்திருக்கிறதாம். அந்தப் பணத்தை ஒருசில வேட்பாளர்களுக்கு மட்டும் கொடுத்துவிட்டு, மீதியை அவரே வைத்துக்கொண்டதாக வேட்பாளர்களாகப் போட்டியிட்ட சிலர் தலைமைக்கும், மாநிலத் தலைவரான அண்ணாமலைக்கும் புகார் அனுப்பியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தப் புகார் குறித்து ரகசியமாக விசாரிக்க அண்ணாமலை உத்தரவிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அத்துடன், மாநில அளவில் பொறுப்பிலுள்ள இருவர் இதை விசாரித்துவருவதாக பாஜக வட்டத்தில் பேசப்பட்டுவருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பாஜக வட்டாரத்தில் விசாரித்தோம். ``தஞ்சாவூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 51 வார்டுகளில் பி.ஜே.பி வேட்பாளர்கள் 27 வார்டுகளில் போட்டியிட்டனர். தேர்தல் செலவுக்காக முதற்கட்டமாக வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் பாஜக தலைமை அவர்களுடைய வங்கிக் கணக்கில் ரூ 25,000 செலுத்தியது.

அண்ணாமலை அருகில் பண்ணவயல் இளங்கோ
அண்ணாமலை அருகில் பண்ணவயல் இளங்கோ

அதன் பிறகு தெற்கு மாவட்டத் தலைவர் பண்ணவயல் இளங்கோவிடம் வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்குக் கொடுப்பதற்காக ரூ.30 லட்சம் வழங்கியது. இதை பண்ணவயல் இளங்கோ கையெழுத்து போட்டு பெற்றுக்கொண்டார். பணம் வாங்கும்போது முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனராம். வேட்பாளர்களை ஆதரித்து அண்ணாமலை பிரசாரம் செய்துவிட்டு சென்ற பிறகு தனக்கு நெருக்கமான சில வேட்பாளர்களுக்கு மட்டும் இளங்கோ பணம் கொடுத்தார். இதன் மூலம் மொத்தம் ரூ.5 லட்சம் மட்டுமே செலவாகியிருக்கும். மீதமிருந்த 25 லட்சம் பணத்தை வேட்பாளர்களுக்குக் கொடுக்காமல் தானே வைத்துக்கொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விவரம் அறிந்த சிலர் பணம் கேட்டதற்கு செலவாகிவிட்டது எனச் சொல்லியிருக்கிறார். தேர்தலில் ஜெயிக்கிறார்களோ இல்லையோ தலைமை கொடுத்த பணத்தை அந்தந்த வேட்பாளர்களிடம் அவர் கொடுத்திருக்கலாம். ஆனால் அதைச் செய்யாமல் பணத்தைத் தானே எடுத்துச் சென்றார். மூன்று வார்டுகளுக்கு ஒருவர் வீதம் தேர்தல் பணிகள் செய்வதற்கு நிர்வாகிகள் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கும் செலவுக்கு ஒத்த பைசாகூடத் தரவில்லை.

தேர்தல் நேரத்தில் தஞ்சாவூரில் பிரசாரம் செய்த அண்ணாமலை
தேர்தல் நேரத்தில் தஞ்சாவூரில் பிரசாரம் செய்த அண்ணாமலை

இது தொடர்பாக பாஜக தலைமை அலுவலம் கமாலலயத்துக்குச் சிலர் புகார் அனுப்பியுள்ளனர். மேலும் இந்த விவகாரத்தை அண்ணாமலை கவனத்துக்கும் கொண்டு சென்றனர். இதைத் தொடர்ந்து தேர்தல் செலவுக்குக் கொடுத்த பணம் வேட்பாளர்களுக்குக் கொடுக்கப்பட்டதா இல்லை பண்ணவயல் இளங்கோ எடுத்துக்கொண்டாரா என்பதைக் கண்டுபிடிக்க அண்ணாமலை நிர்வாகிகள் சிலரிடம் ரகசியமாக வலியுறுத்தியிருக்கிறார்.

இந்நிலையில் மாநில நிர்வாகிகள் இருவர் இதை விசாரித்துவருகின்றனர். கட்சித் தலைமை கொடுத்த பணத்தை வேட்பாளர்களுக்குக் கொடுக்காதது கண்டுபிடிக்கப்பட்டால் பண்ணவயல் இளங்கோ மீது நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் கமலாலயம் வட்டாரத்தில் பேசப்படுகிறது” எனத் தெரிவித்தனர்.

பண்ணவயல் இளங்கோ
பண்ணவயல் இளங்கோ

இது குறித்து பண்ணவயல் இளங்கோவிடம் பேசினோம். ``தேர்தல் செலவுக்கான முதல் தவணை வேட்பாளர்களின் வங்கிக் கணக்கின் மூலம் செலுத்தப்பட்டது. அதன் பிறகு வேட்பாளர்களுக்குக் கொடுப்பதற்காக தலைமை மூலமாக என்னிடம் பணம் கொடுத்தனர். ஒவ்வொரு வேட்பாளரிடமும் நோட்டில் கையெழுத்து பெற்றுக்கொண்டு நான் பணத்தைக் கொடுத்திருக்கிறேன். கட்சிப் பணிகளைச் சரியாகச் செய்யாத சிலர், கட்சியின் வளர்ச்சி குறித்து கவலைப்படாத விஷமிகளான சிலர் இது போன்ற பொய்ப் புகார்களை பரப்பிவருகின்றனர்.தெற்கு மாவட்டப் பொருளாளரை உடன் வைத்துக்கொண்டே வேட்பாளர்களிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது. ஒருசிலர் கட்சி வேலையைத் தவிர மற்ற அனைத்து வேலைகளையும் செய்வதுடன் இது போன்ற பொய்யான புகார்களைக் கிளப்பிவருகின்றனர்” என விளக்கம் அளித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism