Published:Updated:

``சிவசேனாவைக் காப்பாற்ற காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியைக் கைவிட வேண்டும்” - ஏக்நாத் ஷிண்டே

உத்தவ் தாக்கரேயுடன் ஷிண்டே

``இயற்கைக்குப் பொருத்தமற்ற காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியை சிவசேனா கைவிட வேண்டும்” என்று ஏக்நாத் ஷிண்டே தெரிவித்திருக்கிறார்.

``சிவசேனாவைக் காப்பாற்ற காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியைக் கைவிட வேண்டும்” - ஏக்நாத் ஷிண்டே

``இயற்கைக்குப் பொருத்தமற்ற காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியை சிவசேனா கைவிட வேண்டும்” என்று ஏக்நாத் ஷிண்டே தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
உத்தவ் தாக்கரேயுடன் ஷிண்டே

மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருக்கும் சிவசேனாவில் கட்சித் தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருக்கும் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் அஸ்ஸாம் மாநிலம், கவுஹாத்தியில் தங்கியிருக்கிறார். தொடர்ச்சியாக எம்.எல்.ஏ-க்கள் அவருக்கு ஆதரவாக வந்தவண்ணம் இருக்கின்றனர். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று மாலையில் இந்தப் பிரச்னை குறித்து மக்களிடம் உரையாற்றினார். அதில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

அதைத் தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே அளித்த பேட்டியில், ``சிவசேனாவுடன் சமசரமாகச் செல்ல வேண்டுமானால் உடனே இயற்கைக்குப் பொருத்தமற்ற கூட்டணியைக் கைவிட வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ``கடந்த இரண்டரை ஆண்டுகளில் சிவசேனா அதிகமான இழப்பை சந்தித்திருக்கிறது. ஆனால், மற்ற கட்சிகள் பயனடைந்துள்ளன. இந்தக் கட்சிகள் (காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்) எங்கு பலமாக இருக்கின்றனவோ அங்கு சிவசேனா பலவீனமாக இருக்கிறது. எனவே, சிவசேனாவையும், தொண்டர்களையும் காப்பாற்ற வேண்டுமானால் உடனே இயற்கைக்கு மாறான கூட்டணியை உடனே கைவிட வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மகாராஷ்டிராவின் நலனைக் கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்படவேண்டியது முக்கியம். சிலர் நாங்கள் பாஜக-வுடன் செல்வோம் என்று சொல்கின்றனர். நாங்கள் எப்படி அவ்வாறு செய்வோம்... நாங்கள் அவர்களுடன் இருந்து பாதிக்கப்பட்டிருக்கிறோம். பிறகு எப்படி அவர்களுடன் செல்வோம்?” என்று தெரிவித்தார்.

தேவேந்திர பட்னாவிஸ்
தேவேந்திர பட்னாவிஸ்

ஏக்நாத் ஷிண்டேயிடம் இப்போது சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் 30 பேர் மட்டுமே இருக்கின்றனர். மேலும் ஏழு எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே கட்சித் தாவல் தடைச் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியும். இதற்காக சிவசேனா எம்.எல்.ஏ-க்களிடம் பாஜக பேரம் பேசும் பணியில் தீவிரமாக இறங்கியிருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதேசமயம் சிவசேனாவில் ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடியில் தங்களுக்குத் தொடர்பு இல்லை என்பது போன்று பாஜக நடந்துகொள்கிறது. முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இந்த விவகாரத்தில் ஒதுங்கியே இருக்கிறார். தனது வீட்டில் இருந்தபடியே திட்டங்களை வகுத்துக் கொடுத்துவருவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism