Published:Updated:

பா.ஜ.க தலைவர் எல்.முருகனை அன்றே எதிர்த்த திமுக... ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்!

எல்.முருகன்
எல்.முருகன்

பா.ஜ.க தலைவராகப் பொறுப்பேற்கவுள்ள முருகனுக்கும் தமிழகத்தின் முக்கிய கட்சியான தி.மு.க-வுக்கும் சில மாதங்களுக்கு முன்பே ஒரு முட்டல் மோதல் உள்ளது. அது பற்றிய சின்ன ஃப்ளாஷ்பேக்.

தமிழிசை ஆளுநரான பிறகு, தமிழக பா.ஜ.க தலைவர் பதவி காலியாக இருந்தது. பல மாதங்களாகப் புதிய தலைவர் அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இந்தப் பதவிக்கு பல தலைவர்கள் போட்டிபோட்டதாகச் செய்திகள் வெளியான வண்ணம் இருந்த நிலையில், தற்போது `தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய'த்தின் துணைத் தலைவராக உள்ள எல்.முருகனை தலைவராக நியமித்து மத்திய பா.ஜ.க தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எல்.முருகன்
எல்.முருகன்

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக உள்ள முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். 15 வருடம் வழக்கறிஞர் அனுபவம் உள்ளவர். இதற்கிடையே, தலைவர் நியமனம் தொடர்பாகப் பேசியுள்ள முருகன், ``என் மீது நம்பிக்கை வைத்து பதவி தந்துள்ளார்கள். அதற்கேற்றவாறு செயல்படுவேன்" என்கிறார். புதிய பா.ஜ.க தலைவராகப் பொறுப்பேற்கவுள்ள முருகனுக்கும் தமிழகத்தின் முக்கிய கட்சியான தி.மு.க-வுக்கும் சில மாதங்களுக்கு முன்பே ஒரு முட்டல் மோதல் உள்ளது. அது பற்றிய சின்ன ஃப்ளாஷ்பேக்.

`இதுவே அனைவருக்குமான எனது இறுதி பதில்! ’ - முரசொலி நில விவகாரத்தில் தகித்த ஸ்டாலின்

`அசுரன்' படம் வெளிவந்த சமயத்தில், அந்தப் படத்தை தி.மு.க தலைவர் ஸ்டாலின். படத்தைப் பார்த்ததோடு நிற்காமல் பஞ்சமி நிலம் தொடர்பாகப் படம் பேசியதைப் பாராட்டி ட்வீட்டும் செய்தார். இதைத் தொடர்ந்து பா.ம.க தலைவர் ராமதாஸ், `முரசொலி அலுவலகம் அமைந்திருக்கும் இடம் பஞ்சமி நிலம். உடனடியாக ஸ்டாலின் உரியவர்களிடம் இடத்தை ஒப்படைக்க வேண்டும்’ எனக் கொளுத்திப்போட பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது.

முரசொலி அலுவலகம்
முரசொலி அலுவலகம்

இதுதொடர்பாக, ராமதாஸுக்குப் பதில் அளித்த ஸ்டாலின், `முரசொலி அலுவலகம் இருக்கும் இடம் பட்டா இடம்' என்றும் அதற்கான ஆதாரமாகச் சில அரசு ஆவணங்களையும் வெளியிட்டார். ஆனால் ராமதாஸ், `வெளியிட வேண்டியது மூலப் பத்திரம். அதை ஏன் வெளியிடவில்லை’ எனக் கேள்வி எழுப்பினார். இந்நிலையில், `முரசொலி அலுவலக இடத்தை மீட்டு உரியவர்களிடம் வழங்க வேண்டும்' எனத் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பா.ஜ.க சார்பாக ஸ்ரீனிவாஸ் என்பவர் புகார் அளித்தார்.

``அப்போதைய சூழல்... அப்படி பேசியிருக்கலாம்..!” - முரசொலி நில விவகாரத்தில் வைகோ

இந்தப் புகாரை விசாரணை செய்தவர் தற்போது பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் முருகன்தான். புகாரைப் பெற்றுக்கொண்ட முருகன் முதல்வேலையாக உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பி வைத்தார். ஆனால், உதயநிதி அப்போது ஆஜராகவில்லை. அவருக்குப் பதிலாக ஆர்.எஸ்.பாரதி ஆஜராகி விளக்கம் கொடுத்தார். இதன் பின் இந்த விவகாரத்தில் ஸ்டாலின் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் முருகன். முதலில் டெல்லி அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறியவர், பின்னர் சென்னை அலுவலகத்தில் ஆஜரானால் போதும் என்று உத்தரவிட்டார். ஆனால், தி.மு.க தரப்போ, விசாரணைக்குத் தடை கேட்டு சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்தது.

முருகன்
முருகன்

வழக்கு விசாரணையின்போது முருகன் மீது நேரடி குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது தி.மு.க தரப்பு. ``தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவராக உள்ள முருகன் அரசியல் கட்சிகளுடன் தொடர்புடையவர். அவர் தி.மு.க-வுக்கு எதிராக உள்நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார். அவர் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து வருகிறார்" என்று தி.மு.க தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.வில்சன் வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார்.

இதை ஏற்ற நீதிமன்றம், ``ஆணையத்தின் விசாரணைக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக விலக்கு அளிக்கப்படுகிறது. அவருக்குப் பதிலாக அவருடைய பிரதிநிதி ஆஜராகலாம். மேலும், ஆணைய துணைத்தலைவர் முருகன் மீது நேரடியாகக் குற்றச்சாட்டு கூறப்படுவதால், இந்த நிலம் தொடர்பான விசாரணையை முருகனுக்குப் பதில் வேறு ஒருவரை நியமித்து விசாரிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

`ஈரேழு லோகத்திலும் ஒரே கம்பெனின்னா, அது நம்ம முரசொலிதான்!'- ஸ்டாலினை மீண்டும் சீண்டிய ராமதாஸ்
அடுத்த கட்டுரைக்கு