Published:Updated:

மறுக்கப்பட்ட கவுன்சிலர் சீட்; காங்கிரஸ் அலுவலகத்தில் அறவழிப் போராட்டம் நடத்திய முன்னாள் கவுன்சிலர்!

சத்தியமூர்த்தி பவனில் அறவழிப் போராட்டம்

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் வார்டு கவுன்சிலர் ஒருவர் தேர்தலில் தனக்கு சீட் வழங்கப்படாததால், சத்தியமூர்த்தி பவனில் சுமார் 20 மணி நேரத்துக்கும் மேலாக அறவழிப் போராட்டம் நடத்தினார்.

மறுக்கப்பட்ட கவுன்சிலர் சீட்; காங்கிரஸ் அலுவலகத்தில் அறவழிப் போராட்டம் நடத்திய முன்னாள் கவுன்சிலர்!

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் வார்டு கவுன்சிலர் ஒருவர் தேர்தலில் தனக்கு சீட் வழங்கப்படாததால், சத்தியமூர்த்தி பவனில் சுமார் 20 மணி நேரத்துக்கும் மேலாக அறவழிப் போராட்டம் நடத்தினார்.

Published:Updated:
சத்தியமூர்த்தி பவனில் அறவழிப் போராட்டம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்ததைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகள் கூட்டணிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு, வேட்புமனுத் தாக்கல் என படுபிஸியாக தேர்தல் பணிகளை மேற்கொண்டுவருகின்றன. அந்த வகையில், வேட்புமனுத் தாக்கலின் கடைசி நாளான இன்று தமிழகம் முழுவதும் அதிக அளவில் அரசியல் கட்சியினரும், சுயேச்சைகளும் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

வேட்புமனுத் தாக்கல்!
வேட்புமனுத் தாக்கல்!

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் வார்டு கவுன்சிலர் ஒருவர், தேர்தலில் தனக்கு சீட் வழங்கப்படாததால் அந்தக் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் சுமார் 20 மணி நேரத்துக்கும் மேலாக அறவழிப் போராட்டம் நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், சென்னை 91-வது வார்டு கவுன்சிலராக 2011-2016 வரை பதவிவகித்திருக்கிறார். தமிழ்ச்செல்வன் இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 91-வது வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டதால், பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 92-வது வார்டில் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட கட்சித் தலைமையிடம் விருப்பம் தெரிவித்திருக்கிறார். தலைமை, தனக்கு வார்டு கவுன்சிலர் சீட் வழங்கும் என்று மிகவும் உறுதியாக இருந்துவந்திருக்கிறார் தமிழ்ச்செல்வன். ஆனால், அவருக்குக் கட்சித் தலைமை சீட் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

தமிழ்ச்செல்வன்
தமிழ்ச்செல்வன்

இதனால் அதிருப்தியடைந்த தமிழ்ச்செல்வன், தனக்கு சீட் வழங்கப்படாததைக் கண்டித்து நேற்று மாலை சுமார் 5:30 மணியளவில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டார். கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் பலரும் அவருடன் பேச்சுவார்த்தை நடத்திச் சமாதானப்படுத்த முயன்றும், தமிழ்ச்செல்வன் `உரிமை கேட்டுப் போராடுகிறேன்!' என்ற பதாகையுடன் தனது போராட்டத்தைத் தொடர்ந்தார். நேற்று மாலை இந்த அறவழிப் போராட்டத்தைத் தொடங்கியவர், இன்று மதியம் வரை கையில் பதாகையை வைத்துக்கொண்டு போராடினார்.

இதைக் கேள்விப்பட்ட காங்கிரஸ் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, சத்தியமூர்த்தி பவனுக்கு விரைந்து தமிழ்ச்செல்வனைச் சமாதானப்படுத்தி அவருடன் தேநீர் அருந்தியபடி உரையாடினார். அதையடுத்து, தமிழ்ச்செல்வன் தனது அறவழிப் போராட்டத்தைக் கைவிட்டார். பின்னர் இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ரமேஷ் சென்னிதலா, ஶ்ரீ வெல்ல பிரசாத், அழகிரி ஆகியோர் என்னை அழைத்துப் பேசினார்கள். உங்களுக்கு நல்ல அரசியல் எதிர்காலம் இருக்கிறது, தொடர்ந்து நீங்கள் இந்திய மக்களுக்காப்க பணியாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தப் போராட்டத்தை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்" என்றார்.

சமாதானப்படுத்திய கே.எஸ்.அழகிரி
சமாதானப்படுத்திய கே.எஸ்.அழகிரி

அதையடுத்து, தமிழ்ச்செல்வனைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்துப் பேசினோம். ``நான் தமிழக காங்கிரஸ் கட்சியில் பல ஆண்டுகளாகப் பணியாற்றிவருகிறேன். 2011 முதல் 2016 வரை 91-வது வார்டு கவுன்சிலராக மக்கள் பணியாற்றியிருக்கிறேன். என்னுடைய வார்டு மக்களுக்குத் தேவையானவற்றை செய்துகொடுத்து அவர்களின் நன்மதிப்பைப் பெற்றிருக்கிறேன். அதனால், இந்தத் தேர்தலிலும் கவுன்சிலர் சீட் கேட்டேன். ஆனால், 91-வது வார்டு பெண்கள் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. இருந்தாலும், தி.மு.க கூட்டணியில் 92-வது வார்டு எங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், அங்கும் எனக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்பதால் கட்சித் தலைமையிடம் சீட் கேட்டேன். ஆனால், கட்சித் தலைமை எனக்கு சீட் வழங்க மறுத்துவிட்டது.

சத்தியமூர்த்தி பவன்
சத்தியமூர்த்தி பவன்

காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 92-வது வார்டில் நான் போட்டியிடும்பட்சத்தில் நிச்சயமாக வெற்றிபெறுவேன் என்பதில் உறுதியாக இருந்தேன். இந்த நிலையில், தலைமை வாய்ப்பளிக்க மறுத்தது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அதனால், மகாத்மா காந்தி, ஐயா காமராஜர் ஆகியோரின் வழியில் அறவழிப் போராட்டம் நடத்துவதென்று முடிவுசெய்து, சத்தியமூர்த்தி பவனில் சுமார் 20 மணி நேரம் நீதி கேட்டுப் போராட்டம் செய்தேன்.

பிறகு, மாநில அளவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் கட்சியின் மூத்த தலைவர்கள் என்னை நேரிலும் செல்போனிலும் அழைத்து சமாதானம் பேசினார்கள். அதனால், அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க என் போராட்டத்தைக் கைவிட்டேன். இருந்தும், கட்சியின் அகில இந்தியத் தலைமை என்னுடைய நியாயமான கோரிக்கையைப் பரிசீலிக்கும் என்ற நம்பிக்கையில் கடைசி நாளான இன்று மனுத்தாக்கல் செய்திருக்கிறேன். மற்றபடி கட்சித் தலைமை என்ன முடிவெடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்வேன்" என்றார்.