Published:Updated:

கோவா: `காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றிக்குப் பிறகு பாஜக-வுக்குத் தாவிவிடுவர்!’- சொல்கிறார் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்

``கோவாவில் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடுபவர்கள் தேர்தலுக்குப் பிறகு பாஜக-வுக்குச் சென்றுவிடுவர்: என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

கோவா: `காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றிக்குப் பிறகு பாஜக-வுக்குத் தாவிவிடுவர்!’- சொல்கிறார் கெஜ்ரிவால்

``கோவாவில் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடுபவர்கள் தேர்தலுக்குப் பிறகு பாஜக-வுக்குச் சென்றுவிடுவர்: என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
அரவிந்த் கெஜ்ரிவால்

கோவாவில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, சிவசேனா கூட்டணி என்று நான்குமுனைப் போட்டி நிலவுகிறது. கடந்த தேர்தலில் வெற்றிபெற்ற பெரும்பாலான காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பாஜக-வுக்குச் சென்றுவிட்டனர். இதனால் இம்முறை காங்கிரஸ் கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்கள், தேர்தலுக்குப் பிறகு கட்சி மாற மாட்டோம் என்று வாக்குறுதி எடுத்துக்கொண்டு களத்தில் குதித்துள்ளனர். ஆனால் `அவர்கள் தேர்தலுக்குப் பிறகு நிச்சயம் பாஜக-வுக்கு சென்றுவிடுவர்’ என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரத்துக்காக அரவிந்த் கெஜ்ரிவால் மூன்று நாள் பயணமாக கோவா வந்துள்ளார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ``கோவா மக்களுக்கு இரண்டு வாய்ப்புகள்தான் இருக்கின்றன. ஒன்று, நேர்மையான கட்சிக்கு வாக்களித்து நேர்மையான ஆட்சியை அமைப்பது அல்லது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாஜக-வுக்கு வாக்களிப்பது.

அர்விந்த் கெஜ்ரிவால்
அர்விந்த் கெஜ்ரிவால்

வேறு எந்தக் கட்சிக்கு வாக்களித்தாலும் அவர்கள் நிச்சயம் பாஜக-வுக்குச் சென்றுவிடுவர். கடந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் வாக்களித்தனர். ஆனால் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ-க்கள் பாஜக-வுக்குச் சென்றுவிட்டனர். இம்முறை பாஜக தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் கட்சியில் போட்டியிட வாய்ப்பு பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கேட்டுபட்டேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தேர்தலுக்குப் பிறகு எளிதாக அவர்களைத் தங்கள் பக்கம் இழுத்துவிடலாம் என்று கருதி பாஜக இது போன்று செய்கிறது. தெற்கு கோவாவிலுள்ள சல்சடே பகுதியில் வெற்றி பெறாமல் ஆட்சியமைக்க முடியாது என்பதை பாஜக உணர்ந்துள்ளது. எனவே, அங்கு காங்கிரஸ் பெயரில் பாஜக தங்களது வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது” என்று தெரிவித்தார்.

கெஜ்ரிவால்
கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சியின் கோவா தேர்தல் பொறுப்பாளர் ஆதிஷி இது தொடர்பாக அளித்த பேட்டியில், ``காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் விலைக்குக் கிடைப்பார்கள் என்று பாஜக-வுக்குத் தெரியும். அதனால் காங்கிரஸ் வேட்பாளர்களுடன் ஏற்கெனவே பாஜக ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.

பின்னர், தெற்கு கோவாவில் உள்ள சல்சடே பகுதியில் கெஜ்ரிவால் உரையாற்றினார். இந்தப் பகுதியில் ஏழு தொகுதிகள் இருக்கின்றன. ஆனால் இங்கு பெரும்பாலும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இருக்கின்றனர். எனவே, இங்கு பாஜக-வால் வெற்றி பெற முடியாது. அதை கவனத்தில்கொண்டே கெஜ்ரிவால் இப்பகுதியை குறிவைத்து பிரசாரம் செய்துவருகிறார். இப்பகுதி எப்போதுமே காங்கிரஸ் கோட்டையாக இருந்துவருகிறது. தேர்தலுக்குப் பிறகு, காங்கிரஸ் வேட்பாளர்கள் செய்துகொண்ட உறுதிமொழியைக் காப்பாற்றுவார்களா என்ற சந்தேகத்தில் காங்கிரஸ் இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism