Published:Updated:

கோவா: துரிதமாகச் செயல்பட்ட காங்கிரஸ்... அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் பாஜக தாவல் தற்காலிகமாகத் தடுப்பு

திகம்பர் காமத்

கோவாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பாஜக-வுக்குத் தாவுவது தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

கோவா: துரிதமாகச் செயல்பட்ட காங்கிரஸ்... அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் பாஜக தாவல் தற்காலிகமாகத் தடுப்பு

கோவாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பாஜக-வுக்குத் தாவுவது தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

Published:Updated:
திகம்பர் காமத்

கோவாவில் காங்கிரஸ் கட்சிக்கு 11 எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர். அவர்களில் எட்டு பேர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி முன்னாள் முதல்வர் திகம்பர் காமத், எதிர்க்கட்சித் தலைவர் மிச்சேல் லோபோ ஆகியோர் தலைமையில் பாஜக-வில் இணைய திட்டமிட்டிருந்தனர். இதற்காக அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் முதல்வர் சாவந்த்தையும் சந்தித்துப் பேசினர். அதற்குள் காங்கிரஸ் சுதாரித்துக்கொண்டது. கட்சியின் கோவா பொறுப்பாளர் குண்டு ராவ் ஞாயிற்றுக்கிழமை கட்சி எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தை அவசரமாகக் கூட்டினார். இதில் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து லோபோ நீக்கப்பட்டார்.

அதோடு பாஜக ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் ரூ.40 கோடி கொடுக்கத் தயாராக இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் திங்கள்கிழமை கூடிய சட்டமன்றக் கூட்டத்தொடரில் திகம்பர் காமத், லோபோ ஆகியோரின் பதவியைப் பறிக்கும்படி சபாநாயகரிடம் காங்கிரஸ் கட்சி மனு கொடுத்திருக்கிறது.

முகுல் வாஸ்னிக்
முகுல் வாஸ்னிக்

இதனால் அதிர்ச்சியடைந்த மிச்சேல் லோபோ நேற்று மாலை காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு வந்தார். டெல்லியிலிருந்து காங்கிரஸ் தலைமை முகுல் வாஸ்னிக்கை கோவாவுக்கு அனுப்பிவைத்திருந்தது. முகுல் வாஸ்னிக்கை லோபோ சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு இரவு 11 மணி வரை நடந்தது. இதில் சபாநாயகரிடம் கொடுத்திருக்கும் கடிதத்தைத் திரும்பப் பெறும்படி கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதல்வர் பிரமோத் சாவந்த்
முதல்வர் பிரமோத் சாவந்த்

இந்தச் சந்திப்புக்குப் பிறகு குண்டு ராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ``காங்கிரஸ் பரந்த மனம் படைத்தது. இன்னும் சில பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டியிருக்கின்றன. அனைத்தையும் வெளியில் சொல்ல முடியாது” என்று தெரிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த லோபோ, ``எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாததற்காகப் பதவியைப் பறிக்க முடியாது. கட்சியை நீங்களே கேலி செய்கிறீர்கள் என்று தெரிவித்தேன். நாங்கள் எங்கேயும் செல்லவில்லை. கட்சியில் யார் தலைவர், யார் கட்சியை உடைக்க முயன்றது என்பது முக்கியமல்ல... நாங்கள் காங்கிரஸ் கட்சியில் வலுவாக இருக்கிறோம். கட்சியில் பிரச்னை இல்லை என்று சொல்ல முடியாது” என்று தெரிவித்தார்.

திகம்பர் காமத் காங்கிரஸ் தலைவர்களைச் சந்திக்க வரவில்லை. ஆனால் ஞாயிற்றுக்கிழமை நடந்த கூட்டத்துக்கு வராத எம்.எல்.ஏ-க்கள் முகுல் வாஸ்னிக்கை திங்கள் கிழமை சந்தித்துப் பேசினர். திகம்பர் காமத், லோபோ ஆகியோரின் எம்.எல்.ஏ பதவியைப் பறிக்க கொடுக்கப்பட்ட கடிதம் திரும்ப பெறப்படாது என்றும் இந்த விவகாரத்தில் சபாநாயகர்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சி தக்க நேரத்தில் விரைந்து செயல்பட்டதால் கட்சித்தாவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. ஆனால் இது எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்று தெரியவில்லை. தற்காலிகமாகத்தான் கட்சித்தாவல் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.