Published:Updated:

``காங்கிரஸ் சாதியப் பாகுபாடு நிறைந்த கட்சி!" - ஹர்திக் படேல் விமர்சனம்

ஹர்திக் படேல் - காங்கிரஸ்

`ராகுல் காந்தியின் `தாஹோத் ஆதிவாசி சத்தியாகிரகப் பேரணி'யில் சுமார் 25 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். ஆனால் 70 ஆயிரம்பேர் கலந்துகொண்டதாக கணக்குக் காட்டியிருக்கிறார்கள்.' - ஹர்திக் படேல்

``காங்கிரஸ் சாதியப் பாகுபாடு நிறைந்த கட்சி!" - ஹர்திக் படேல் விமர்சனம்

`ராகுல் காந்தியின் `தாஹோத் ஆதிவாசி சத்தியாகிரகப் பேரணி'யில் சுமார் 25 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். ஆனால் 70 ஆயிரம்பேர் கலந்துகொண்டதாக கணக்குக் காட்டியிருக்கிறார்கள்.' - ஹர்திக் படேல்

Published:Updated:
ஹர்திக் படேல் - காங்கிரஸ்

ஹர்திக் படேல் 2015-ம் ஆண்டு, குஜராத் மாநிலத்தில் படிதார் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரிய போராட்டத்துக்கு தலைமை தாங்கியப் பிறகு அரசியலில் முக்கியத்துவம் பெற்றார். அதன்பிறகு அவர் ஜூலை 2020-ல் குஜராத் காங்கிரஸின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், ``காங்கிரஸ் கட்சியைச் சரியான திசையில் வழிநடத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அந்தக் கட்சி தொடர்ந்து சமூக நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டுவருகிறது" எனக் கூறி நேற்று காங்கிரஸ் கட்சியிலிருந்து ஹர்திக் படேல் விலகினார்.

காங்கிரஸ்
காங்கிரஸ்

குஜராத் படிதார் சமூகத்தின் தலைவராக இருக்கும் ஹர்திக் படேல் இது தொடர்பாக அகமதாபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``காங்கிரஸ் சாதியப் பாகுபாடு நிறைந்த கட்சி. அந்தக் கட்சியில் இரண்டு ஆண்டுகளாக எனக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. ஆனால், நான் இன்னும் பா.ஜ.க-வில் இணைவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹர்திக் படேல்
ஹர்திக் படேல்

மூத்த படிதார் தலைவர்கள் மற்றும் நண்பர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். காங்கிரஸில் சேரக்கூடாது என அவர்கள் என்னை எச்சரித்திருந்தனர். அதன் காரணத்தை இன்று நான் உணர்ந்துவிட்டேன். ராகுல் காந்தியின் `தாஹோத் ஆதிவாசி சத்தியாகிரகப் பேரணி'யில் சுமார் 25 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். ஆனால் 70 ஆயிரம்பேர் கலந்துகொண்டதாக கணக்குக் காட்டியிருக்கிறார்கள். இதுதான் காங்கிரஸ் கட்சியின் ஊழல்'' எனக் கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism