Published:Updated:

`காங்கிரஸ் கட்சியில் செலவு செய்ய ஒரு பைசா கூட இல்லை!' - கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் கட்சியில் செலவு செய்ய ஒரு பைசா கூட இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

KS Alagiri
KS Alagiri

கோவையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தைப் பழிவாங்கும் நோக்கில் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம்,

Congress Meet
Congress Meet

இந்தி மொழி திணிப்புக்கு கண்டனம், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் தோல்வியடைந்த பா.ஜ.க-வைக் கண்டித்து, நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும் உட்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பேசிய கே.எஸ்.அழகிரி, ``இந்தியா ஒரு நாடு கிடையாது. இது பல்வேறு மொழி, கலாசாரம் கொண்ட நாடுகளின் தொகுப்பு. இங்கே ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாசாரம் என்பது சாத்தியமாகாது.

salman khurshid
salman khurshid

காஷ்மீர் இந்தியாவோடு இணையக் காரணம் நேரு கொடுத்த வாக்குறுதிதான். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்படாததற்கு நேரு காரணமல்ல. மவுண்ட்பேட்டன் பிரபு தான் காரணம்.

`வசந்தகுமார் அளித்த வாக்குறுதி!’ - நாங்குநேரி வேட்பாளராக ரூபி மனோகரன் தேர்வானது எப்படி?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதாரத்தில் நிபுணர் கிடையாது. அமித் ஷா மோடியின் அடியாள். காங்கிரஸார் சரியாக செயல்படாததால்தான் பா.ஜ.க ஆட்சியில் உள்ளனர்.

Congress Meet
Congress Meet

நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச்செய்ய, நாம் கடுமையாகப் பாடுபட வேண்டும். வாக்குச்சாவடியை கைப்பற்றும் சக்தி இல்லையென்றாலும், காப்பாற்றும் சக்தி காங்கிரசாருக்கு வேண்டும். இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு கோடிக்கணக்கான பணம் புரளும். ஆனால், காங்கிரஸ் கட்சியில் செலவு செய்ய ஒரு பைசா கூட இல்லை. காங்கிரஸ் நிர்வாகிகள் கடுமையாக உழைத்துதான், இடைத்தேர்தலில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றார்.