Published:Updated:

அமரீந்தர் சிங் vs சித்து vs சன்னி... பதவிக்கான சண்டையில் வீழ்ந்த பஞ்சாப் காங்கிரஸ்

சன்னி vs சித்து vs அமரீந்தர் சிங்

பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் முக்கிய தலைவர்களே தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அமரீந்தர் சிங் vs சித்து vs சன்னி... பதவிக்கான சண்டையில் வீழ்ந்த பஞ்சாப் காங்கிரஸ்

பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் முக்கிய தலைவர்களே தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Published:Updated:
சன்னி vs சித்து vs அமரீந்தர் சிங்

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் முதல்வர் பதவிக்காக போட்டி போட்டுக்கொண்ட முதல்வர் சன்னி, மாநில காங்கிரஸ் தலைவர் சித்து ஆகிய இரண்டு பேருமே தேர்தலில் தொடர்ந்து பின் தங்கியே இருக்கின்றனர். முதல்வர் சன்னி தான் போட்டியிட்ட சம்கவுர் மற்றும் பத்கவுர் ஆகிய இரண்டு தொகுதியிலுமே பின் தங்கி இருக்கிறார். அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட கிரிக்கெட் வீரர் சித்துவும் பின் தங்கியே இருக்கிறார். இதே போன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிகார மோதல் காரணமாக வெளியேறிய அமரீந்தர் சிங்கும் தான் போட்டியிட்ட பாட்டியாலா தொகுதியில் பின் தங்கி இருக்கிறார்.

சித்து, சன்னி
சித்து, சன்னி

அம்ரிந்தர் சிங்குடன் கூட்டணி சேர்ந்த பாஜக-வும் இத்தேர்தலில் சொற்ப இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. பஞ்சாப் விவசாயிகள் ஆண்டுக்கணக்கில் டெல்லியில் போராட்டம் நடத்தினர். அதனை பாஜக கண்டுகொள்ளவே இல்லை. அப்படி இருந்தும் அமரீந்தர் சிங் பாஜகவுடன் சென்று கூட்டணி அமைத்து தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். இதே போன்று அகாலி தளத்தின் சுக்விந்தர் சிங் பாதலும் பின் தங்கியே இருக்கிறார்.

5 மாநில சட்டமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேசம், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இந்த தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு மேலும் ஒரு தோல்வியாகவே அமைந்துள்ளது. சரியான தலைமை இல்லாதது, சமூக வலைத்தளங்களில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பிரசாரம் என்று தோல்விக்கான காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். கூடவே கட்சி தலைவர்களின் அதிகார மோதல் காங்கிரஸ் கட்சியின் பெரும் தோல்விக்கான காரணமாக சொல்லப்படுகிறது. கோவாவை காங்கிரஸ் நம்பி இருந்தது. அங்கும் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை என்பதே நிதர்சனம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism