Published:Updated:

`மூழ்கும் படகில் சவாரி செய்கிறீர்கள்!' - அ.தி.மு.கவை விமர்சித்த திருநாவுக்கரசர் எம்.பி

திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்

``பா.ஜ.க மூழ்கும் படகு ஆகும். அதில் ஏறி சவாரி செய்துவரும் அ.தி.மு.க அடுத்த தேர்தலில் பா.ஜ.கவுடன் சேர்ந்து மூழ்கத்தான் போகிறது'.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் புதுக்கோட்டை வந்திருந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,``தமிழக மீனவர்களுக்கு, இலங்கைக் கடற்படையினரால் ஏற்படும் அத்துமீறல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதில், இலங்கை அரசை, மத்திய அரசு கண்டிப்பதுடன், தடுக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் 35 சதவிகிதம்தான் முடிந்துள்ளது.

திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்

இன்னும் 9 மாவட்டங்கள், மாநகராட்சி, நகராட்சிக்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். 65 சதவிகிதம் தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலை வைத்து கூட்டணிக்குள் சில கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டது. தற்போது, தி.மு.க தலைவர் ஸ்டாலின் மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரியால் இந்தப் பிரச்னை முடித்து வைக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றது. ப.சிதம்பரத்திற்கோ, எனக்கோ, கே.எஸ்.அழகிரிக்கோ இந்தக் கூட்டணியை முறிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடர வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.

திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்

தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் என்று கருத்து கூறும் அமைச்சர் ஜெயக்குமார், அ.தி.மு.க பா.ஜ.கவுடன் கூட்டணியில் உள்ளதா? இல்லை கூட்டணியிலிருந்து விலகிவிட்டதா என்பதை முதலில் கூறட்டும். பா.ஜ.க மூழ்கும் படகு, அதில் ஏறி சவாரி செய்துவரும் அ.தி.மு.க, அடுத்த தேர்தலில் பா.ஜ.கவுடன் சேர்ந்து மூழ்கப்போகிறது. துக்ளக் விழாவில் ரஜினி கூறிய கருத்தை, என்னைப் பொறுத்தவரை விமர்சனம் செய்ய விருப்பமில்லை" என்றார்.

பின் செல்ல