Published:Updated:

``சிவசேனாவைப்போல அதிமுக சின்னம் முடக்கப்படுமா என்பது மோடியின் கையில்தான் உள்ளது" - திருநாவுக்கரசர்

எம்.பி திருநாவுக்கரசர்

``மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியின் சின்னம் முடக்கப்பட்டதைப்போல் தமிழ்நாட்டில் அ.தி.மு.க-வின் சின்னம் முடக்கப்படுமா என்பது பிரதமர் மோடியின் கையில்தான் இருக்கிறது." - திருநாவுக்கரசர் எம்.பி

``சிவசேனாவைப்போல அதிமுக சின்னம் முடக்கப்படுமா என்பது மோடியின் கையில்தான் உள்ளது" - திருநாவுக்கரசர்

``மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியின் சின்னம் முடக்கப்பட்டதைப்போல் தமிழ்நாட்டில் அ.தி.மு.க-வின் சின்னம் முடக்கப்படுமா என்பது பிரதமர் மோடியின் கையில்தான் இருக்கிறது." - திருநாவுக்கரசர் எம்.பி

Published:Updated:
எம்.பி திருநாவுக்கரசர்

புதுக்கோட்டை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் குழுவின் தலைவர் திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு மாவட்டத்தின் வளர்ச்சி குறித்து விவாதித்தனர்.

அதைத் தொடர்ந்து திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ``இந்தி மொழியை இந்தியா முழுவதும் பொது மொழியாக்க அமித் ஷா தலைமையிலான குழு பரிந்துரை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இந்தி மொழியை விருப்பப்பட்டு படிக்கலாம். ஆனால், அந்த மொழியைத் திணிக்கக் கூடாது. தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அது நடக்கவும் நடக்காது. ஒருவேளை இந்தி மொழி திணிக்கப்பட்டால் தமிழ்நாட்டில் மீண்டும் மொழிப்போர் ஏற்படும்.

திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்

வருகின்ற 17-ம் தேதி சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவிருக்கும் நிலையில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் விவகாரத்தில் சபாநாயகர் என்ன முடிவெடுப்பார் என்பதைத் தெரிந்துகொள்ள நானுமே ஆவலாகத்தான் இருக்கிறேன். மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியின் சின்னம் முடக்கப்பட்டதைப்போல் தமிழ்நாட்டில் அ.தி.மு.க-வின் சின்னம் முடக்கப்படுமா என்பது பிரதமர் மோடியின் கையில்தான் இருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்... போகலாம், மாலை அணிவிக்கலாம், மரியாதை செலுத்தலாம். சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்றவர், பலமுறை எம்.பி., எம்.எல்.ஏ-வாகவும் இருந்தவர் முத்துராமலிங்க தேவர்" என்றார்.