Published:Updated:

`அடையாள அட்டையில் பார்கோடு; டிஜிட்டல் முறையில் தலைவர் தேர்தல்!’ - தயாராகும் காங்கிரஸ்

சோனியா காந்தி
சோனியா காந்தி

சமீபத்தில் நடைபெற்ற பீகார் மற்றும் பிற மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்த பின் எழுந்த கருத்து வேறுபாடு காரணமாகவும், வாரிசு அரசியலை தொடர்ந்து விமர்சிப்பதாலும், ​​காங்கிரஸ் கட்சி இந்த தேர்தல் திட்டத்தை கையிலெடுத்துள்ளது.

கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்பு செயல்முறையை, முதன்முறையாக டிஜிட்டல் முறையில் நடத்தத் திட்டமிட்டுள்ளது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி. இதற்கென காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கு டிஜிட்டல் வாக்காளர் அட்டைகள் வழங்கப்பட உள்ளன.

கடந்த வருடம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியை தழுவியது. அதைத்தொடர்ந்து, தன் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி. அவர் ராஜினாமா செய்ததையடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக பொறுப்பேற்றார் சோனியா காந்தி .

சோனியாவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10 -ம் தேதியோடு முடிவடைந்ததையடுத்து, ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பிற்கு தான் வரப்போவதில்லை என்று மறுத்துவிட, வேறு வழியின்றி மீண்டும் 'கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தியே தொடர்வார்’ என முடிவெடுக்கப்பட்டது.

காங்கிரஸ்
காங்கிரஸ்

இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பதால் அங்கு தங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. சில நாள்களுக்கு டெல்லியிலிருந்து வெளியேறி கோவா அல்லது சென்னையில் சோனியா காந்தி தங்குவார் என்று தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அவர் கோவா சென்றிருக்கிறார்.

டெல்லியைவிட்டு வெளியேறிய சோனியா காந்தி... கோவாவில் வசிக்கத் திட்டம்! - என்ன காரணம்?

நீண்ட நாட்களாக, இடைக்கால தலைமையின் கீழ் இயங்கி வரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில், கட்சியின் தலைவர் யார்? என்ற கேள்வி நிர்வாகிகளிடையே எழுந்து புது புது குழப்பங்களையும், பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் தலைவரை டிஜிட்டல் முறையில் தேர்வு செய்ய புது முயற்சியை மேற்கொண்டு வருகிறது காங்கிரஸ் கமிட்டி.

இந்தியாவில் பழமையான அரசியல் கட்சிகளில், முதன்முறையாக தன் கட்சித் தலைவரை ஆன்லைன் தேர்தல் மூலம் டிஜிட்டல் முறையில் நடத்தும் காங்கிரஸ் கட்சி, தன் கட்சி பிரதிநிதிகளுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகள் வழங்க முடிவு செய்துள்ளது. சுமார் 1,500 காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் மற்றும் அனைத்து மாநில பிரிவுகளிலிருந்தும் டிஜிட்டல் புகைப்படங்களைக் கேட்டுள்ளது.

சோனியா காந்தி
சோனியா காந்தி

இந்த தேர்தல் முறை குறித்து காங்கிரஸ் கட்சி, "நாங்கள் ஒரு முழுமையான பயிற்சிக்கு தயாராகி வருகிறோம், எந்தவொரு நிகழ்விற்கும் தயாராக இருப்போம். இரண்டு மாநிலங்களைத் தவிர, நாட்டின் பிற பகுதிகளிலிருந்து வந்த பிரதிநிதிகளின் பட்டியலை நாங்கள் பெற்றுள்ளோம், சில வாரங்களுக்குள் காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுத்து அறிவிப்போம்" என்று தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் அடையாள அட்டை என்பதால் ஒவ்வொரு அட்டையிலும், ஒரு பார்கோடு (Barcode) இருக்கும், அது வாக்காளரின் அனைத்து விவரங்களையும் சேமித்து வைத்து கொள்ளவும், தேர்தல் முறையில் நடக்கும் தவறுகளை குறைக்கவும் உதவியாக இருக்கும்.

சமீபத்தில் நடைபெற்ற பீகார் மற்றும் பிற மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்த பின் எழுந்த கருத்து வேறுபாடு காரணமாகவும், வாரிசு அரசியலை தொடர்ந்து விமர்சிப்பதாலும், ​​காங்கிரஸ் கட்சி இந்த தேர்தல் திட்டத்தை கையிலெடுத்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் குழுவில் அரவிந்தர் சிங் லவ்லி, நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேஷ் மிஸ்ரா, முன்னாள் கர்நாடக மந்திரி கிருஷ்ணா பைரே கவுடா மற்றும் மக்களவை எம்.பி. ஜோதிமணி, மதுசூதனன் ஆகியோர் உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு