Published:Updated:

`தேசிய அளவில் இரண்டு குழுக்கள்!’- பா.ஜ.க வுக்கு சவால் அளிக்க காங்கிரஸ் கட்சியின் புது பிளான்

இதன் மூலம் வரும் காலங்களில் தேர்தல்களில் பா.ஜ.க வுக்குக் கடுமையாக போட்டி அளிக்கலாம் என்று காங்கிரஸ் தரப்பில் நம்பப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி

`காங்கிரஸ் இல்லாத இந்தியா’ எனும் முழக்கத்தை பா.ஜ.க தேர்தல் பிரசாரத்தில் பலமுறை கேட்டிருப்போம். 2014 -ம் ஆண்டு மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின்னர் காங்கிரஸ் தொடர்ச்சியாக தோல்விகளைச் சந்தித்து வந்தது. பல மாநிலங்களில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஒன்றன்பின் ஒன்றாக அதை இழந்தது.

மோடி
மோடி

காங்கிரஸ் கட்சி பெரிதும் எதிர்பார்த்த 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் அக்கட்சி தோல்வியைச் சந்தித்தது. இதைத் தொடர்ந்து தலைமையில் மாற்றங்கள் நடந்தன. நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து நடைபெற்ற இரு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் அக்கட்சி தோல்வியைச் சந்தித்தது.

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவர் சோனியா காந்தி தேசிய அளவில் இரு குழுக்களை அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒன்று தேர்தல் மேலாண்மைக் குழு என்றும் மற்றொன்று திட்டமிடுதல் தொடர்பான குழு என்றும் கூறப்படுகிறது.

சோனியா காந்தி
சோனியா காந்தி

தேர்தல் மேலாண்மை குழு கட்சியின் மத்திய செயற்குழு போன்றது. அதற்கென்று தனியாக தலைவர் மற்ற பொறுப்புகள் வழங்கப்படும் எனத் தெரிகிறது. தகவல் திரட்டுவது, சமூக வலைதளம் மூலம் மக்களைச் சென்றடைவது தேர்தல் நேரத்தில் யுத்திகளை வகுப்பது உள்ளிட்ட பணிகளை இந்தக் குழு கவனித்துக் கொள்ளும்.

மற்றொரு குழு வளர்ந்துவரும் அரசியல் சூழ்நிலைகளில் கட்சி எவ்வாறு செயல்பட வேண்டும், மக்களிடம் எப்படி கட்சி சென்றடைய வேண்டும் உள்ளிட்ட பணிகளைக் கவனிக்கும். குறிப்பாக இந்தக் குழு நாடு முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்கள் மக்கள் நலன் சார்ந்த அரசு சாரா நிறுவனங்கள் உள்ளிட்டவையுடன் தொடர்பில் இருக்கும்.

சோனியா காந்தி
சோனியா காந்தி

இதன் மூலம், வரும் காலங்களில் தேர்தல்களில் பா.ஜ.க வுக்குக் கடுமையாகப் போட்டி அளிக்கலாம் என்று காங்கிரஸ் தரப்பில் நம்பப்படுகிறது.

News Credit: Hindustan Times