Published:Updated:

`என்னைக் கடத்திச் சென்று மனஉளைச்சல் கொடுத்தார்கள்!'- பெண் கவுன்சிலர் புகாரால் சிக்கலில் தி.மு.க ஒ.செ

அன்னவாசல் ஒன்றியத் தலைவர் பதவிக்கு நடந்த மறைமுகத் தேர்தலின்போது காங்கிரஸ் பெண் கவுன்சிலரை வாக்களிக்கவிடாமல் கடத்திச் சென்று வைத்திருந்ததாகப் புகார் எழுந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், மொத்தமுள்ள 20 ஒன்றியங்களில் அ.தி.மு.க 9 இடங்களையும், தி.மு.க 10 இடங்களையும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றிபெற்றது. இந்தமுறை அன்னவாசல் ஒன்றியத்தில் தி.மு.க ஒன்றியத் தலைவர் பதவியைக் கைப்பற்றும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே, அ.தி.மு.க-வினர் ஒன்றியத் தலைவர் பதவியைக் கைப்பற்றுவதற்காக எதிர்தரப்பைச் சேர்ந்தவர்களிடம் பல லட்ச ரூபாய் பேரத்தில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

புகார் மனு
புகார் மனு

இந்த நிலையில், ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. 20 வார்டுகளின் ஒன்றிய கவுன்சிலர்களும் வாக்களிக்க வந்திருந்தனர். இதில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயம் தங்கவேல் வாக்களிக்க உள்ளே சென்றபோது மயக்கமடைந்து கீழே சாய்ந்தார். உடனே, அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து, தேர்தலில் காங்கிரஸ் உறுப்பினர் வாக்களிக்கவில்லை, தி.மு.க-வின் ஒரு ஓட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.

அ.தி.மு.க 9, தி.மு.க 9 எனச் சரிசமமாக இருந்ததால், குலுக்கல் முறையில் அ.தி.மு.க கவுன்சிலர் ராமசாமி என்பவர் ஒன்றிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், தி.மு.க-வைச் சேர்ந்த அன்னவாசல் ஒன்றியச் செயலாளர் சந்திரன் மற்றும் தி.மு.க-வினர், தன் தாயாரை வாக்களிக்கவிடாமல் தடுத்துக் கடத்திச் சென்றதாக ஒன்றிய கவுன்சிலர் ஜெயம் தங்கவேலின் மகன் போலீஸில் புகார் அளித்தார்.

`விவாதங்கள் வந்து வந்து செல்லும்; ரஜினியின் ஒப்பீடு தவறு!’- ஸ்டாலினை சந்தித்த கே.எஸ். அழகிரி! #NowAtVikatan

`சட்டவிரோதமாக, என் தாயாரை அழைத்துச் சென்று மிகுந்த மன உளைச்சல் ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும், மாவட்டக் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கும் மனு அனுப்பினார். இதையடுத்து, தி.மு.க ஒன்றிய செயலாளர் சந்திரன் உட்பட 5 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்து தேடி வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு