Published:Updated:

தொடரும் அதிமுக - பாஜக கூட்டணி... யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம்?!

மோடியுடன் எடப்பாடி, பன்னீர்
News
மோடியுடன் எடப்பாடி, பன்னீர்

லாப, நஷ்டக் கணக்குகள் தொழிலில் மட்டுமல்ல, அரசியலிலும் பார்க்கப்படுகின்றன. லாபத்தை மட்டுமே விரும்பும் கட்சிகளுக்கு மத்தியில், நஷ்டத்தையே தொடர்ச்சியாகத் தாங்கிக்கொண்டிருக்கிறது அ.தி.மு.க.

தொழில் நடத்தும் ஒவ்வொருவருக்குமே லாபமும் நஷ்டமும் மாறி மாறி ஏற்படும். அதுபோலத்தான் அரசியலிலும் கூட்டணி அமைவதையும், தொகுதிகளில் வெற்றிபெறுவதையும் வைத்து லாப, நஷ்டக் கணக்குகளைப் போட்டுவருகிறார்கள். தி.மு.க., தனது கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட்டுகள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளை இன்னமும் வைத்திருக்கிறது என்றால், அதில் பல லாபக் கணக்குகள் உள்ளன. அதுவே எதிர்க்கட்சி வரிசையில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இன்னும் வலுவாகவே நீடித்துவருகிறது. இந்தக் கூட்டணியால் அ.தி.மு.க-வுக்கு லாபமா, பா.ஜ.க-வுக்கு லாபமா, இல்லை யாருக்கு நஷ்டம் என்பது குறித்து பிரபல வியூக அமைப்பாளர் ஒருவரிடம் பேசினோம்.

எடப்பாடி - பன்னீர் - மோடி
எடப்பாடி - பன்னீர் - மோடி

``காங்கிரஸ் கட்சிக்குத் தனிப்பட்ட அளவில் பெரிய செல்வாக்கு எதுவும் கிடையாது. சிறுபான்மை வாக்குகள் கொஞ்சம் இருக்கக்கூடும். எனினும், எத்தகைய விமர்சனம் வந்தாலும் காங்கிரஸைக் கழற்றிவிடாமல் கூட்டணியில் தக்கவைத்துக்கொள்கிறார் தி.மு.க தலைவரும், முதல்வருமான ஸ்டாலின். ஏனெனில், காங்கிரஸ் கூட இருப்பது சிறு லாபத்தையாவது கொடுக்கும். இதுவேதான் வி.சி.க உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கும் பொருந்தும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
தி.மு.க கூட்டணி கட்சிகள்
தி.மு.க கூட்டணி கட்சிகள்

கூட்டணிக் கட்சிகளால் தி.மு.க-வுக்கு ஓரளவுக்கு லாபம் என்றாலும், கூட்டணிக் கட்சிகளுக்குத்தான் தி.மு.க-வுடன் இருப்பது அதிக லாபம். ஒருவேளை இந்தக் கட்சிக்கு இந்தத் தொகுதியில், இந்த வார்டில் சீட் கொடுத்தால் நிச்சயம் தோற்கும் என்கிற ரிப்போர்ட் வந்தால், கண்டிப்பாக நஷ்டம் என்று தெரிந்தும் அந்தக் காரியத்தை தி.மு.க செய்யாது. சீட் கொடுக்காமல் ஒதுக்குவார்களே தவிர, முழுமையாகக் கூட்டணியைவிட்டு விலக்கிவிட மாட்டார்கள்.

அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி - பன்னீர்
அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி - பன்னீர்

அதுவே இந்தப் பக்கம் பார்த்தோமேயானால், அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க நீடிப்பதால், அ.தி.மு.க-வுக்கு ஆரம்பத்திலிருந்தே நஷ்டம்தான் ஏற்பட்டுவருகிறது. ஜெயலலிதா மறைந்ததிலிருந்து, அ.தி.மு.க-வைத் தன் பாக்கெட்டில் போட்டுவைத்திருக்கிறது டெல்லி பா.ஜ.க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பா.ஜ.க-வுக்கு அ.தி.மு.க கூட்டணி என்பது மிகப்பெரிய லாபம். 2001-ல் தி.மு.க கூட்டணியில் இருந்துகொண்டு தமிழக சட்டமன்றத்தில் முதன்முறையாக நுழைந்தது பா.ஜ.க. 20 ஆண்டுகள் கழித்து இப்போது அ.தி.மு.க கூட்டணி மூலம் சட்டசபைக்குள் என்ட்ரி கொடுத்திருக்கிற.

பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள்
பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள்

தமிழகத்தில் காலூன்றவே முடியாது, ஜீரோதான் என்று சொல்லப்பட்ட ஒரு கட்சிக்கு நான்கு எம்.எல்.ஏ-க்கள் கிடைப்பது என்பது மிகப்பெரிய விஷயம். இதுதான் பா.ஜ.க-வுக்கான லாபம். `குறைந்த முதலீட்டில் அதிக லாபம்’ என்ற டெக்னிக், தொழில்துறையில் கூட சிலருக்குத்தான் தெரியும். அரசியலில் அந்த டெக்னிக்கை லாகவமாகக் கையாண்டுவருகிறது பா.ஜ.க. இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றி பா.ஜ.க-வுக்குக் கிடைக்கவில்லை என்கிறபோதும், அவர்களின் எண்ணமே அடுத்து வரக்கூடிய 2024 நாடாளுமன்றத் தேர்தல்தான்.

தமிழகத்தில், 2019 எம்.பி தேர்தலிலும், தொடர்ந்து நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் தோல்வியைத் தழுவினாலும் 2021 சட்டமன்றத் தேர்தலில் அடித்தது ஜாக்பாட். இத்தனைக்கும் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவுகளைக்கூட அ.தி.மு.க-வை கவனிக்கவைத்துவிடுகிறதாம் பா.ஜ.க. மேலும், தற்போது பா.ம.க-வும் கூட்டணியில் இல்லாததால், 2024 எம்.பி தேர்தலில் கூடுதல் தொகுதிகளைப் பெறுவதற்கு பா.ஜ.க முயலும். ஆதலால், இந்தக் கூட்டணி தொடர்வது முற்றிலும் பா.ஜ.க-வுக்குத்தான் லாபம்.

அண்ணாமலை - நரேந்திர மோடி
அண்ணாமலை - நரேந்திர மோடி

அதுவே அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை, பா.ஜ.க-வுடனான கூட்டணியால் சிறுபான்மையினரின் நம்பிக்கையையும், வாக்கு சதவிகிதத்தையும், தொகுதிகளையும் இழந்து நிற்கிறது அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதும் சரி, இப்போதும் சரி... டெல்லி பா.ஜ.க-வின் சொல்லைக் கேட்டுத்தான் நடக்கிறது அ.தி.மு.க. அதனால், தொடர்ந்து பா.ஜ.க என்கிற சுமையால், நஷ்டம் ஏற்பட்டுவருகிறதே என கூட்டணியைவிட்டு கழற்றிவிடவும் வாய்ப்பில்லை. தமிழக பா.ஜ.க அவர்களாகவும் கழன்றுகொள்ளாது. இப்படியே நிலை நீடித்தால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும், 2024 எம்.பி தேர்தலிலும் கூட்டணி தொடருமேயானால், வெற்றிக்கு பாதிப்பு என்று தெரிந்தும்கூட புலிவாலைப் பிடித்த கதையாக அ.தி.மு.க திணறுகிறது. அதனால், அ.தி.மு.க-வுக்கு இது பெருத்த நஷ்டமே!” என்று முடித்தார்.