Published:Updated:

`20 வயசுல இருந்தே என் பின்னாடி சுத்திகிட்டிருந்தார்!' -அ.தி.மு.க எம்.எல்.ஏ-வை விளாசிய மகளிரணி ஒ.செ.

சண்முகநாதன் எம்.எல்.ஏ.,
சண்முகநாதன் எம்.எல்.ஏ.,

ஸ்ரீவைகுண்டம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ சண்முகநாதன், அவதூறாகப் பேசி மிரட்டினார் எனப் பெண் நிர்வாகி ஒருவர் பேசிய ஆடியோ வைரலாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் அ.தி.மு.க எம்.எல்.ஏ-வாக இருப்பவர் எஸ்.பி.சண்முகநாதன். இவர், மாவட்டச் செயலாளராகவும் கைத்தறித்துறை, இந்துசமய அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை, பால்வளத்துறை ஆகிய துறைகளில் முன்னாள் அமைச்சராகவும் இருந்தவர். `இவரது அமைச்சர் பதவியும் மா.செ பதவியும் கட்சியின் உள்குத்துப் பிரச்னைகளால் காலியானதைவிட, பெண் விவகாரத்தில் எழுந்த புகாரால் காலியானதுதான் அதிகம்' எனக் கட்சியினரே கமென்ட் அடிப்பது வழக்கம்.

சண்முகநாதன்
சண்முகநாதன்

இந்த நிலையில், `முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் விவகாரம்' என்று தலைப்பிடப்பட்டு சமூக வளைதளங்களில் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய மகளிரணிச் செயலாளர் ஏரல் சரஸ்வதி என்பவரிடம் ஒருவர் பேசும் 12.05 நிமிட உரையாடல்தான் அது.

``அவரோட (சண்முகநாதன்) டூவீலருக்கு பெட்ரோல் போட ஒரு காலத்தில் எங்க அப்பா சுப்பிரமணியத்திடம் பணம் வாங்கிவிட்டுப் போவார்.

கடன்காரர்கள் அவரது கழுத்தைப் பிடிக்க என் கழுத்தில் கிடந்த தங்கச் செயினை விற்று பணத்தைக் கொடுத்து அவரது மானத்தை காப்பாற்றினேன். அவர் மனைவி ஆஷா விவகாரத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விசாரணை நடத்தியபோதும் நான்தான் அவரைக் காப்பாற்றினேன். `இருபது வயசுல இருந்து என்னைச் சுற்றிச்சுற்றி வந்துவிட்டு இப்போ எனக்கு 45 வயசு ஆகிவிட்டதென்று எனக்கு சீட் தர மாட்டியா?' எனக் கேட்டேன்' என்பது தொடங்கி நீளும் அந்த உரையாடலில்,

சண்முகநாதன்
சண்முகநாதன்

இறுதியாக ``அவர் மூலமா 25 வயசுல எனக்கு ஒரு மகன் இருக்கான். பார்ப்பதற்கு அச்சு அசலா அவரைப் போலவே இருப்பான். என் மேல உள்ள கோபத்துல அவனை எதுவும் செய்திடுவாரோன்னு பயமா இருக்கு” எனப் பேசுவதாக முடிகிறது அந்த ஆடியோ.

எம்.எல்.ஏ., சண்முகநாதன் வீட்டுக்குப் பேசப் போன, பெண் நிர்வாகியை ஆட்களை வைத்து வெளியே தள்ளி மிரட்டி அனுப்பினார் என்ற தகவலும் பரவியது.

ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய மகளிரணிச் செயலாளர் ஏரல் சரஸ்வதியிடம் பேசினோம், ``நான் எங்க அப்பா காலத்துல இருந்தே கட்சிக்கு விசுவாசமா இருக்கேன். நான் கட்சியில 30 வருசமா இருக்கேன். 28 வருசமா ஒன்றிய மகளிரணிச் செயலாளரா இருக்கேன். ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு, அ.தி.மு.க சார்பில் போட்டியிட சீட் கேட்டேன். சீட் தர்றேன்னு சொல்லி கடைசி வரைக்கும் தரலை.

சண்முகநாதன்
சண்முகநாதன்

பேப்பர்ல பார்த்தா, இந்த ஒன்றியத்தின் முன்னாள் துணைச் சேர்மன் வசந்தாவுக்கே சீட் கொடுத்தது தெரிய வந்துச்சு. உடனே, அவரோட சொந்த ஊரான பண்டாரவிளையில் உள்ள வீட்டுக்குப் போனேன். அவரோட ஆதரவாளர்கள் ரெண்டு பேர் வழிமறிச்சு, `நீங்க அண்ணாச்சி வீட்டுக்குப் போகாதீங்க. உங்களுக்குப் பணம் வாங்கித் தர்றோம்'னு சொன்னாங்க. `பணத்துக்கா அலையுறேன்' னு சொல்லிட்டு வீட்டுக்குப் போனேன்.

Vikatan

`எதுக்கு இங்க வந்தே?' என சண்முகநாதன் கேட்டார். ``கடைசி வரைக்கும் எனக்கு சீட் தர்றேன்னு சொல்லிட்டு எவளோ ஒருத்திக்கு சீட்டும் கொடுத்து, அவ தேர்தல்ல ஜெயிக்க பணமும் கொடுத்திருக்கியே. 20 வயசுல இருந்து எங்கூடதான சுத்திக்கிட்டு இருந்த.. இப்போ ஏன் விரட்டுற. 47 வயசு ஆகிட்டுன்னு என்னை விரட்டுறியா. பணமா கேட்டேன்'னு சத்தம் போட்டேன்.

`20 வயசுல இருந்தே என் பின்னாடி சுத்திகிட்டிருந்தார்!' -அ.தி.மு.க எம்.எல்.ஏ-வை விளாசிய மகளிரணி ஒ.செ.

அதுக்கு அவர், `உன்னால முடிஞ்சதை செஞ்சுக்கோ'ன்னு சொல்லி, தகாத வார்த்தைகளால் பேசினார். உடனே, அவர் வீட்டுல நின்ற அடியாட்களை ஏவி என் கையப் பிடிச்சு இழுத்து வெளியே தள்ளிட்டாங்க. கொஞ்ச நேரத்துல போலீஸும் வந்து என்னை மிரட்டி விரட்டினாங்க. அந்த வசந்தாவை ஜெயிக்க வைக்குறதுக்காக, சாக்குமூட்டையில பணத்தையும் கொடுத்து, லெட்சுமிபுரத்துல உள்ள மண்டபத்தில் வச்சு சத்தமே இல்லாம, பணப்பட்டுவாடாவை நடத்தி முடிச்சுட்டார்.

இதுசம்பந்தமா தேர்தல் முடிஞ்சதும் எனக்கு நியாயம் கேட்டு, முதல்வரிடமும் துணை முதல்வரிடமும் எஸ்.பி-யிடமும் புகார் கொடுக்கப்போறேன்” என்றார் கொதிப்புடன்.

ஏரல் சரஸ்வதியின் குற்றச்சாட்டு குறித்து எம்.எல்.ஏ சண்முகநாதனிடம் பேசினோம், ``அந்தப் பெண் நிர்வாகி உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டார். சீட் கொடுக்கவில்லை என்பதற்காக இப்படியெல்லாம் பேசுகிறார்.

சண்முகநாதன்
சண்முகநாதன்

அவர் சொல்லும் புகாரில் எதுவும் உண்மையில்லை. எனக்கு எதிரானவர்களின் தூண்டுதல்தான் இதற்குக் காரணம். யாருக்கு மக்களிடம் செல்வாக்கு இருக்கிறது, யாருக்கு சீட் கொடுத்தால் எளிதாக வெற்றி பெறுவார்கள் என்பதன் அடிப்படையில்தான் சீட் கொடுக்கப்பட்டுள்ளது” என்றதோடு முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு