Published:Updated:

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக... மதுரை மேயருக்கு ஆலோசகர் - மாநகராட்சியில் கிளம்பிய எதிர்ப்பு குரல்

மேயர் இந்திராணி

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பொறுப்பேற்றுள்ள மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்துக்கு ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக... மதுரை மேயருக்கு ஆலோசகர் - மாநகராட்சியில் கிளம்பிய எதிர்ப்பு குரல்

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பொறுப்பேற்றுள்ள மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்துக்கு ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
மேயர் இந்திராணி

மதுரை மாநகர, மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை மீறி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சிபாரிசில் பகுதிச் செயலாளர் பொன் வசந்தின் மனைவி இந்திராணி மதுரை மேயராகத் தேர்வுசெய்யப்பட்டார்.

மாமன்றக் கூட்டம்
மாமன்றக் கூட்டம்

இந்திராணி மேயராக நியமிக்கப்பட்டது கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்திவந்த நிலையில் அவரை சுயமாகச் செயல்படவிடாமல் கணவர் பொன் வசந்தே ஆக்டிங் மேயராகச் செயல்படுவதாக புகார் எழுந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதற்கிடையே கடந்த பட்ஜெட் கூட்டத்தில் ஊடகத்தினர்மீது மேயர் தரப்பினர் தாக்குதல் நடத்தியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எதிர்ப்பு கோஷமிட்ட அ.தி.மு.க உறுப்பினர்கள்
எதிர்ப்பு கோஷமிட்ட அ.தி.மு.க உறுப்பினர்கள்

அது மட்டுமல்லாமல் அமைச்சர் பழனிவேல் தியாகாரஜன் அலுவலகத்தில் பணியாற்றிய அர்ச்சனா என்பவர், மேயர் இந்திராணி எங்கு சென்றாலும் நிழல்போல் உடன் வருவதும், மேயர் அறையில், அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதும் சர்ச்சையானது. பத்திரிகையாளர்களை மாமன்றக் கூட்டங்களில் அனுமதிப்பதிலும் பல பிரச்னைகள் எழுந்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேயரின் செயல்பாட்டை அமைச்சர் கண்காணிக்கிறார் என்று சொல்லப்பட்ட நிலையில், அரசுப் பதவியிலிருக்கும் மேயருடன் விதிகளை மீறி ஒருவர் செயல்படுவதும், கோப்புகளைப் பார்ப்பதும், ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் என்ற விமர்சனமும் எழுந்தது.

மேயர் இந்திராணி
மேயர் இந்திராணி

இந்த நிலையில்தான் மாமன்றக் கூட்ட அஜெண்டா 4-ல், 'மதுரை மாநகராட்சி மேயர் அலுவலகத்தில் சிறப்பு ஆலோசகர் ஒருவரை நியமனம் செய்ய மாண்புமிகு மேயர் கேட்டுக்கொண்டிருக்கிறார். மேயர் அவர்களின் அன்றாடப் பணிகளுக்கு உறுதுணையாக இருந்து ஆலோசனைகள் வழங்குதல், மாநகராட்சி கொள்கைகள், செயல்முறை மற்றும் திட்டங்கள் குறித்து மேயருக்கு ஆலோசனை வழங்குதல், ஆய்வுகள், தணிக்கைகள் மற்றும் கூட்டங்கள் ஆகியவற்றில் மேயர் அவர்களுடன் கலந்துகொள்ளுதல், அரசுத் துறை மற்றும் உயர் அலுவலர்கள், முக்கியப் பிரமுகர்களுடன் பணிகள் தொடர்பான மேயர் தெரிவிக்கும் தகவல்களை வழங்கி தகவல் பரிமாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகளை அவர் மேற்கொள்வார் எனவும், ஊதியமோ மாநகராட்சிக்கு செலவினமோ ஏதும் இன்றி அவரை நியமனம் செய்யலாம் எனவும், இந்த நியமனத்துக்குப் பொருத்தமானவராக செல்வி. அ.அர்ச்சனா தேவி, M.A. (Public Policy) என்பவரை நியமனம் செய்ய மேயர் அவர்களிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில், அவரை இப்பொறுப்பில் ஐந்து ஆண்டுகள் வரை அல்லது மேயரின் பதவிக் காலத்தில் மேயர் விரும்பும் காலம் வரை இவற்றில் எது முந்தையதோ அதுவரை நீடிக்கலாம் என்ற நிபந்தனையுடன், ஊதியமோ, மாநகராட்சிக்கு செலவினமோ ஏதும் இன்றி நியமனம் செய்வதற்கு மாமன்றத்தின் ஒப்புதலைக் கோருவதாக' குறிப்பிட்டுள்ளனர்.

இப்படி தனிப்பட்ட நபர் மேயரின் ஆலோசகராக எந்த மாநகராட்சியிலும் நியமிக்கப்படவில்லை என்று தி.மு.க-அ.தி.மு.க மாமன்ற உறுப்பினர்கள் ஆதங்கப்பட்டனர்.

நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வைச் சேர்ந்த மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா, "எங்களுடைய எந்த கோரிக்கையையும் கேட்கவில்லை. வரியைக் குறைக்கச் சொன்னோம். அதையும் கேட்கவில்லை. மேயருக்கு ஆலோசகர் நியமிக்கப்படுவதை இப்போதுதான் கேள்விப்படுகிறோம். இதற்கு முன்பு இங்கிருந்த எந்த மேயரும் ஆலோசகர் வைத்துக்கொண்டதில்லை" என்றார்.

மாமன்றக் கூட்டம்
மாமன்றக் கூட்டம்

இதற்கிடையே மனு அளித்தும், தனக்குப் பேச வாய்ப்பளிக்கவில்லை என்று மாநகர தி.மு.க-வின் முக்கிய நிர்வாகியும் மாமன்ற உறுப்பினருமான ஜெயராம் புகார் எழுப்பியதும், அவருக்கு ஆதரவாகச் சில மாமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பியதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாநகராட்சியில் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் சர்ச்சைகளைத் தொடர்ந்து ஏற்படுத்திவருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism