Published:Updated:

``அதிமுக குறித்த என் கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு விட்டது...!" - நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்
News
நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரனின் இந்த பேச்சுக்கு அ.தி.மு.க தரப்பிலிருந்து பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

``அதிமுக குறித்த என் கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு விட்டது...!" - நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரனின் இந்த பேச்சுக்கு அ.தி.மு.க தரப்பிலிருந்து பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

Published:Updated:
நயினார் நாகேந்திரன்
News
நயினார் நாகேந்திரன்

தஞ்சை பள்ளி மாணவியின் மரணத்துக்கு நீதிகேட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஹெச்.ராஜா, எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பா.ஜ.க-வினர் கலந்து கொண்டனர். உண்ணாவிரதப் போராட்டத்தின்போது பேசிய நயினார் நாகேந்திரன், ``சட்டமன்றத்தில் தைரியமாக ஆண்மையோடு, முதுகெலும்போடு பேசக்கூடிய அ.தி.மு.க-வினர் ஒருவரை கூட பார்க்க முடியவில்லை" என கடுமையாக விமர்சித்திருந்தார்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரனின் இந்த பேச்சுக்கு அ.தி.மு.க தரப்பிலிருந்து பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்தச் சம்பவம் பரபரப்பானதைத் தொடர்ந்து உடனடியாக நயினார் நாகேந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ``அ.தி.மு.க-வைப் பற்றி நான் கூறிய கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது, நான் கூறியதில் எந்த உள்நோக்கமும் இல்லை. இந்த போராட்டத்தின் மூலம் நீதி கிடைக்கவேண்டுமென்பதே எங்கள் எண்ணம்" என்று விளக்கமளித்திருந்தார்.

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி

இந்த நிலையில், நயினார் நாகேந்திரன் கூறிய கருத்து பா.ஜ.க-வின் நிலைப்பாடு இல்லை, எனத் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.