Published:Updated:

`யாரா இருந்தாலும் இதைவிட மோசமா பேசுவேன்!" - ஊராட்சித் தலைவரிடம் கொதித்தாரா கோவை திமுக பொறுப்பாளர்?

ஆடியோ ( மாதிரிப் படம் )

தி.மு.க கோவை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி, அரிசிபாளையம் ஊராட்சித் தலைவர் கணேசன் ஆகியோர் பேசுவதாகக் கூறப்படும் ஆடியோ கோவை தி.மு.க-வில் உஷ்ணத்தை அதிகரித்துள்ளது.

`யாரா இருந்தாலும் இதைவிட மோசமா பேசுவேன்!" - ஊராட்சித் தலைவரிடம் கொதித்தாரா கோவை திமுக பொறுப்பாளர்?

தி.மு.க கோவை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி, அரிசிபாளையம் ஊராட்சித் தலைவர் கணேசன் ஆகியோர் பேசுவதாகக் கூறப்படும் ஆடியோ கோவை தி.மு.க-வில் உஷ்ணத்தை அதிகரித்துள்ளது.

Published:Updated:
ஆடியோ ( மாதிரிப் படம் )

ஆட்சி மாறினாலும், மாறாத காட்சிகள் கோவை தி.மு.க உடன்பிறப்புகளின் மல்லுக்கட்டுகள். அமைச்சர் செந்தில் பாலாஜியை பொறுப்பாளராக நியமித்தும் அந்தப் பிரச்னை ஓயவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் தொடங்கி, உட்கட்சித் தேர்தல் வரை திரும்பிய பக்கமெல்லாம் உடன்பிறப்புகள் இடையே மோதல் வெடித்துக் கொண்டிருக்கிறது.

கோவை தி.மு.க
கோவை தி.மு.க

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்த வகையில் தி.மு.க கோவை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி, அரிசிபாளையம் ஊராட்சித் தலைவர் கணேசன் ஆகியோர் பேசுவதாகக் கூறப்படும் ஆடியோ கோவை தி.மு.க-வில் உஷ்ணத்தை அதிகரித்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இருவரும் பேசியதாகக் கூறப்படும் அந்த ஆடியோவில்...

கணேசன், ``நீங்க பணம் வாங்குனீங்கனு நான் யார்கிட்ட சொன்னேன். நீங்க இப்படி எல்லாம் சொல்லக் கூடாது. உங்களுக்கு யாரோ தவறான தகவல் கொடுத்துருக்காங்க. ஒரே நாள் போன் எடுக்கலனு சத்தம் போட்டேன்.

கணேசன்
கணேசன்

அவ்ளோதான்.” என்றபோது, எதிரில் கடுப்பான சேனாதிபதி, “எனக்கு இந்தப் பதவி ---க்கு சமம். எந்த --------- இருந்தாலும் பார்க்க மாட்டேன். ஒரு லிமிட்டுக்கு மேல மரியாதை கொடுக்க மாட்டேன். நிறைய பேர் கிட்ட நீங்க என்னைய பத்தி தப்பா சொல்லிட்டு இருக்கீங்க. நான் ஒரு நாளும் உங்களைப் பத்தித் தப்பா பேசினது இல்ல.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உங்களுக்கு வானளாவிய அதிகாரம் இருக்குனு என்ன வேணும்னாலும் பேசலாம்னு நினைக்காதீங்க. என்னைய சத்தம் போடற அதிகாரம் எந்த -------க்கும் இல்லை. எவனா இருந்தாலும் இதைவிட மோசமாக பேசுவேன். இப்ப பொறுமையா பேசிட்டு இருக்கேன்.” என்று கொதித்தார். அதற்கு கணேசன், ``அண்ணா என்ன வார்தைலாம் இப்படி பேசறீங்க. எதுக்கு வார்தைலாம் விடறீங்க.” என்கிறார்.

மருதமலை சேனாதிபதி
மருதமலை சேனாதிபதி

``லிமிட் தாண்டினா எந்த ------ இருந்தாலும் பயப்பட வேண்டிய அவசியம் இல்ல. 10 நிமிஷம் எவனா இருந்தாலும் வூடு ஏறிடுவன். மாவட்டச் செயலாளர் ஆனதுல இருந்து ரொம்ப அமைதியா இருக்கேன். எல்லாரும் என்னை -------- பேசினா 10 நிமிஷத்துல வூடு ஏறிடுவேன். எனக்கு மாவட்டச் செயலாளர் பதவி ------ க்கு சமம்.” என்று மீண்டும் கொந்தளிக்கிறார்.

மீண்டும் தொடர்ந்த கணேசன், ``பொறுப்புல இருக்கறவங்க கொஞ்சம் அனுசரிச்சு தான் போகனும். யாரோ பேசறாங்கனு என்கிட்ட பேசாதீங்க. நான் உங்களை எங்கயும் விமர்சனம் பண்ணல. பொறுத்து பேசுங்க.” என்றார். “பொறுத்து எல்லாம் பேச முடியாது. நான் உச்சகட்டத்துல இருக்கேன்.

ஆடியோ
ஆடியோ

5 இடத்துல நீங்க என்னைய பேசிருக்கீங்க. என்னைய பைத்தியக்காரன் ஆக்காதீங்க . இதுதான் கடைசி.” என்று சொல்லி சேனாதிபதி இணைப்பைத் துண்டிக்கிறார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து தி.மு.க-வினர் மற்றும் அரிசிபாளையம் மக்களிடம் கேட்டபோது, ``உட்கட்சி தேர்தலில் ஏராளமான பஞ்சாயத்துகள் நிலவுகிறது. மாவட்ட பொறுப்பாளர் சேனாதிபதி தன்னை எதிர்த்து யாருமே கேள்வி கேட்கக்கூடாது என்று நினைக்கிறார். அதே நேரத்தில், கணேசன் செயலும் விவாதத்துக்குரியது தான்.

திமுக
திமுக

இவர் இதேபோல பலரை தரக்குறைவாகப் பேசிவிட்டு, பிறகு கேட்டால் எனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை வாடிக்கையாக சொல்லி வருகிறார். எனவே, உண்மை என்னவென்று விசாரித்து தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றனர்.

இது குறித்து கணேசனிடம் விளக்கம் கேட்டபோது, ``அவர்தான் என்னை கூப்பிட்டு திட்டினார். பஞ்சாயத்து அலுவலக திறப்பு விழாவுக்கு அமைச்சரிடம் தேதி வாங்கிக் கொடுக்கக் கேட்டேன். அதுக்கு அவர், ‘அமைச்சர் தேதி கொடுக்க மாட்டார். நீயே போய் திறந்துக்கோ’னு சொன்னார்.

ஸ்டாலினுடன் கணேசன்
ஸ்டாலினுடன் கணேசன்

நான் சேனாதிபதிக்கு தொடர்ந்து அழைத்தேன் அவர் போன் எடுக்கவில்லை. அவர் வீட்டுக்கே சென்று மீண்டும் அமைச்சரிடம் தேதி வாங்கிக் கொடுங்க என கேட்டேன். அதற்கு அவர் ‘அமைச்சர் தேதி கொடுக்க மாட்டார். நீங்களே பண்ணிக்கோங்க.’ என்று கூறினார்.

பிறகு நாங்கள் வந்து நிகழ்ச்சியை நடத்திவிட்டோம். எங்கள் கட்சியில் உள்ள செயலாளர் ஒருவரே நான் யாரையும் அழைக்காமல் நிகழ்ச்சி நடத்திவிட்டேன் என்று புகார் அளித்திருக்கிறார். அதற்குதான் அவர் என்னை அழைத்துத் திட்டினார்.

தி.மு.க-அண்ணா அறிவாலயம்
தி.மு.க-அண்ணா அறிவாலயம்

நான்தான் இது குறித்து முதல்வரிடம் புகார் தெரிவித்தேன். சேனாதிபதிக்கு என் மகன் வயது. 5 பேரன், பேத்தி இருக்காங்க. 1972-ல இருந்து கட்சிக்காகப் பாடுபட்டு இந்த நிலைல இருக்கேன். கட்சி என்ன சொல்லுதோ அதுக்கு கட்டுப்படுவேன்.” என்றார்.

இது குறித்து மருதமலை சேனாதிபதியிடம் கேட்டபோது, “எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வாட்ஸப், ஃபேஸ்புக்-ல் நான் பேசுவது போல சித்தரித்து என் பெயருக்கும், கட்சிக்கும் அவப்பெயர் ஏற்படும் வகையில் ஒரு ஆடியோவை பரப்பி வருகின்றனர்.

ஸ்டாலினுடன் சேனாதிபதி
ஸ்டாலினுடன் சேனாதிபதி

ஊராட்சித் தலைவர் எந்த காழ்ப்புணர்ச்சில அப்படி பண்றார்னு தெரியல. அவர்கிட்ட பேச வேண்டிய அவசியமே இல்ல. நிகழ்ச்சி நடத்தறதுக்கு 4 நாளுக்கு முன்னாடிகூட அவர் எங்க வீட்டுக்கு வந்தார். நான் எப்படி அமைச்சர் தேதி இல்லனு சொல்ல முடியும்.

முதலில் இருந்தே அவருக்கும், எனக்கும் பெரிதாக பேச்சுவார்த்தை இருக்காது. இந்த நிகழ்ச்சிக்காகத்தான் வீடு தேடி வந்தார். அமைச்சரும், ‘அந்தப் பகுதியில் மொத்தமாக நிகழ்ச்சி நடத்தும்போது, இதையும் பார்த்துக் கொள்ளலாம்’ என்று கூறினார். யார் சொல்லி இப்படி செய்கிறார் என தெரியவில்லை.

சேனாதிபதி பதிவு
சேனாதிபதி பதிவு

நான் அரசுல எந்தப் பொறுப்புலயும் இல்ல. அரசு கூட்டங்கள்ல எல்லாம் நான் கலந்துக்கறதும் இல்ல. கட்சிக்காரன் என்கிற அடிப்படையில் சில இடங்களுக்கு செல்வோம். அவ்வளவுதான்.“ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism