Published:Updated:

கடலூர்: `பட்டியல் வெளியாவதற்கு முன்பே மனுத்தாக்கல்’ – தலைமைக்கு 'ஷாக்' கொடுத்த திமுக நகரச் செயலாளர்

தி.மு.க துண்டுடன் வேட்புமனு தாக்கல் செய்யும் சுந்தரி

வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன்பாகவே மாநகராட்சி தேர்தலுக்கு தி.மு.க நகரச் செயலாளரின் மனைவி வேட்புமனு தாக்கல் செய்த விவகாரம் அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடலூர்: `பட்டியல் வெளியாவதற்கு முன்பே மனுத்தாக்கல்’ – தலைமைக்கு 'ஷாக்' கொடுத்த திமுக நகரச் செயலாளர்

வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன்பாகவே மாநகராட்சி தேர்தலுக்கு தி.மு.க நகரச் செயலாளரின் மனைவி வேட்புமனு தாக்கல் செய்த விவகாரம் அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
தி.மு.க துண்டுடன் வேட்புமனு தாக்கல் செய்யும் சுந்தரி

நகராட்சியாக இருந்த கடலூர், மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்ட பின்பு முதல் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது. வரும் 19-ம் தேதி நடக்கவிருக்கும் தேர்தலுக்காக, கடந்த ஜனவரி மாதம் 28-ம் தேதி முதல் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுவருகின்றன. புதிதாகத் தரம் உயர்த்தப்பட்டிருக்கும் கடலூர் மாநகராட்சியில் இருக்கும் 45 வார்டுகளைச் சேர்ந்த 42,479 வாக்காளர்கள் வாக்களிக்கவிருக்கின்றனர். நேற்று முன்தினம் 30-ம் தேதி கடலூர் மாநகராட்சி, ஆறு நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க வெளியிட்டது. அதையடுத்து அந்த வேட்பாளர்கள் பிரசாரத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

கடலூர் தி.மு.க நகரச் செயலாளர் கே.எஸ்.ராஜா
கடலூர் தி.மு.க நகரச் செயலாளர் கே.எஸ்.ராஜா

அதேசமயம் ஆளுங்கட்சியான தி.மு.க சார்பில் இன்னும் வேட்பாளர்கள் வெளியிடப்படவில்லை. கடலூர் மாநகராட்சியின் முதல் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், அதைக் கைப்பற்றுவது யார் என்பதில் தி.மு.க நகரச் செயலாளர் கே.எஸ்.ராஜா (எ) பழக்கடை ராஜா மற்றும் மாவட்ட பொருளாளர் வி.எஸ்.எல்.குணசேகரன் இருவருக்குமிடையே கடும் போட்டி நிலவிவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அ.தி.மு.க-வின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகிவிட்டதால் தி.மு.க-வின் வேட்பாளர் பட்டியலும் உடனே வெளியாகலாம் என்று தகவல் பரவியது. ஆனால், தற்போதுவரை வேட்பாளர் பட்டியல் வெளியாகவில்லை. இன்று மதியம் 3 மணிக்கு மாவட்டச் செயலாளரான அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவார் என்று எதிர்பர்க்கப்பட்டது. `கடலூர் தி.மு.க நகரச் செயலாளர் கே.எஸ்.ராஜாவின் மனைவி சுந்தரி கண்டிப்பாக நமக்குத்தான் சீட் என்று நினைத்தாரோ என்னவோ, அமாவாசை முடிவதற்குள் வேட்புமனுவைத் தாக்கல் செய்துவிடலாம்' என்று முடிவெடுத்ததாகக் கூறுகிறார்கள் தி.மு.க-வினர்.

அதன்படி கே.எஸ்.ராஜாவின் மனைவி சுந்தரி இன்று காலையில் கட்சித்துண்டை அணிந்துகொண்டு தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தி.மு.க-வினர் மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், அந்த விவகாரம் குறித்து தலைமைக்குத் தெரிவித்தார். ``நகரச் செயலாளராக இருக்கும் ஒருவர், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி வேட்புமனுவைத் தாக்கல் செய்தாரா அல்லது கட்சியில் சீட் கிடைக்கவில்லையென்றால் கட்சிக்கு எதிராகப் போட்டியிடுவேன் என்று தலைமையை பயமுறுத்துவதற்காக வேட்பு னுவைத் தாக்கல் செய்தாரா?” என்று கேள்வி எழுப்பிவருகின்றனர் தி.மு.க நிர்வாகிகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism