Published:Updated:

`கட்சிக்குள் ரெளடிகள்...' - எல்.முருகன் விளக்கமும், பா.ஜ.க வழக்கறிஞர் வாதமும்!

எல்.முருகன் -
எல்.முருகன் -

அரசியலுக்காக அப்படிச் சொல்கிறார்கள். அப்படிக் குற்றம்சாட்டுகிற கட்சிகளை ஆராய்ந்தால், அங்கும் ஏகப்பட்ட பேர் குற்றப்பின்னணியுடன் இருப்பார்கள்."

கோவை மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில், மாங்கரைப் பகுதியில் ரிலாக்ஸாக ஆயுர்வேத சிகிச்சை எடுத்துவரும் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகனைச் சந்தித்தோம். அ.தி.மு.க கூட்டணி தொடர்பான கேள்விகளுக்கு மென்று விழுங்கிப் பேசும் முருகன், தி.மு.க தொடர்பான கேள்விகளுக்கு மட்டும் சீறிப் பாய்ந்து பதில் சொல்கிறார்.

''ஒருபக்கம் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கட்சியில் இணைகிறார். மறுபக்கம், குற்றப் பின்னணி இருப்பவர்களும் இணைகிறார்கள். என்னதான் உங்கள் திட்டம்?''

''தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகள் என்று பலதரப்பட்டவர்களும் எங்கள் கட்சிக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். ஏன்... மிஸ்டு கால் கொடுத்தால், யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால், கட்சியில் சேர்ந்த பிறகு அவர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதுதான் முக்கியம்."

''ஆனால், ரெளடிகளையெல்லாம் கட்சிக்குள் சேர்த்து, தேர்தலில் கலவரம் செய்யத் திட்டமிட்டிருப்பதாக அல்லவா எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன?"

"அரசியலுக்காக அப்படிச் சொல்கிறார்கள். அப்படிக் குற்றம்சாட்டுகிற கட்சிகளை ஆராய்ந்தால், அங்கும் ஏகப்பட்ட பேர் குற்றப்பின்னணியுடன் இருப்பார்கள்."

எல்.முருகன்
எல்.முருகன்

"சமீபத்தில் `டிசம்பர், ஜனவரியில் தமிழக அரசியலில் திருப்புமுனை ஏற்படும்' என்று கூறியிருந்தீர்கள். அப்படி என்னதான் மாற்றம் வரும்?''

''பொறுத்திருந்து பாருங்கள்... நிறைய அரசியல் மாற்றங்கள் வரும். பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்புகள் வரவிருக்கின்றன. அவை என்னென்ன வழக்குகள் என்பது எல்லோருக்குமே தெரியும். அது பி.ஜே.பி-க்கு மிகப்பெரிய ஓப்பன் கார்டாக அமையும்."

"உங்கள் ஆட்சியில் ஜி.டி.பி வீழ்ந்துகொண்டே போகிறதே... அதைப் பற்றியெல்லாம் உங்களுக்குக் கவலையே இல்லையா?"

''இது உலகளவில் கொரோனா ஏற்படுத்திய தாக்கம். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது நாம் நல்ல நிலையில்தான் இருக்கிறோம்."

- கூட்டணி, அ.தி.மு.க, தி.மு.க, மதவாதம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்த பல கேள்விகளுக்கும் எல்.முருகன் அளித்த பதில்களுடன் கூடிய முழுமையான நேர்காணலை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/3bYVcFS > "எடப்பாடி பாஸ், ஸ்டாலின் ஃபெயில்!" - மார்க் போடும் எல்.முருகன் https://bit.ly/3bYVcFS

``பாதுகாப்புக்காக இங்கு வருகிறார்கள்!" - பா.ஜ.க வழக்கறிஞர் பால் கனகராஜ்

''குற்றப் பின்னணிகொண்டவர்களைக் கட்சியில் சேர்ப்பதில் பா.ஜ.க தலைவர் எல்.முருகன் மிகுந்த ஆர்வம் காட்டிவருகிறார். இதற்கான அசைன்மென்ட் தமிழக பா.ஜ.க வழக்கறிஞர்கள் அணித் தலைவர் ஆர்.சி.பால் கனகராஜிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது'' என்கிறது பா.ஜ.க வட்டாரம். இந்நிலையில், பால் கனகராஜைத் தொடர்புகொண்டு சில கேள்விகளை முன்வைத்தோம்.

''கட்சிக்குள் ரௌடிகளைச் சேர்ப்பதே நீங்கள்தான் என்கிறார்களே?''

''கட்சிக்குள் வருபவர்கள் அனைவருமே எனக்குப் பழக்கமானவர்கள் என்று கூற முடியாது. குறிப்பாக, `கல்வெட்டு' ரவி என் மூலமாகக் கட்சியில் சேரவில்லை. அவர், எஸ்.சி பிரிவுத் தலைவர் மூலமாகக் கட்சியில் சேர வந்தார். எல்லோரும் வருகிறார்களென்றால், பா.ஜ.க மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையைத்தான் இது காட்டுகிறது. `இந்தக் கட்சியில் பாதுகாப்பு கிடைக்கும்' என நம்புகிறார்கள்.

''இத்தனை நாள்களாக இல்லாத நம்பிக்கை, இப்போது வருவது ஏன்?''

''பா.ஜ.க வளரும் கட்சி என்பதால், வாழ்க்கையில் ஏதாவது முன்னேற்றம் கிடைக்கும் என நம்பிச் சேர்கிறார்கள். எந்தக் கூட்டணி அமைந்தாலும், அதை பா.ஜ.க-தான் கட்டுப்படுத்தும் என்ற எண்ணமும் ஒரு காரணம். பொய் வழக்கு போடாமல் தடுக்க பா.ஜ.க-வால் முடியும்... இப்படிப் பல நம்பிக்கைகள் இருப்பதால்தான், பாதுகாப்புக்காக இங்கு வருகிறார்கள்.''

பால் கனகராஜ்
பால் கனகராஜ்

'' 'குற்றப் பின்னணி உள்ள நபர்களுக்குச் சட்டப் பாதுகாப்பும், வக்கீல்களாக இருந்தால் மத்திய அரசு வழக்கறிஞர் பதவியும் வழங்கப்படும்' எனப் பல வாக்குறுதிகள் கட்சியிலிருந்து கொடுக்கப்படுவதாகச் சொல்கிறார்களே?''

``இருக்கலாம். எதிர்பார்ப்பு யாருக்குத்தான் இல்லை... ஒரு சாதாரண ரௌடிக்கு இருக்கும் எதிர்பார்ப்பு மற்றவர்களுக்கும் இருக்கும்தானே. ஒரு வக்கீல் கட்சிக்குள் இணையும்போது, தொழில்சார்ந்த உயர்வை எதிர்பார்ப்பது இயல்புதானே. மத்திய அரசின் வக்கீல் பதவியை அனைவருக்குமே கொடுக்க முடியாது. சீனியாரிட்டி, கட்சிப் பணி ஆகியவற்றைக் கணக்கிட்டுத்தான் கொடுக்க முடியும்.''

> "என்ன மாதிரியான பாதுகாப்பு?"

> " `அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம்' என்கிற பெயரில், மக்களிடம் கட்சிப் பிரசாரம் செய்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளதே?"

> '' `பூத்'களைக் கைப்பற்றி, 2021 சட்டமன்றத் தேர்தலில் கலவரம் உருவாக்கத்தான் குற்றப் பின்னணிகொண்டவர்களைக் கட்சிக்குள் இழுக்கிறீர்கள் என்றொரு பேச்சு இருக்கிறதே?''

- இந்தக் கேள்விகளுக்கான பதில்களுடன் கூடிய முழுமையான பேட்டியை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/32nFuRr > "ரௌடிகள் சமூக சேவை செய்யவா கட்சிக்கு வருகிறார்கள்?" - பா.ஜ.க வழக்கறிஞர் பால் கனகராஜ் https://bit.ly/32nFuRr

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு