Published:Updated:

``மருத்துவக்கல்லூரிகள் கட்டப்பட்டதில் ஊழல்; எடப்பாடி மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன்?” - புகழேந்தி

புகழேந்தி

​``எடப்பாடி மு​தல்வராக இருந்தபோது புதிதாகக் கட்டப்பட்ட 11 ​அரசு மருத்துவக் கல்லூரி​​களில்​​ மிகப்பெரிய ஊழல் நடைபெற்றதற்கான முகாந்திரம் இருப்பதாகத் தெரிவித்த தற்போதைய தி​.​மு​.​க அரசு, வழக்கு பதிவுசெய்வதற்கு ஏன் தாமதிக்கிறது?” - புகழேந்தி

``மருத்துவக்கல்லூரிகள் கட்டப்பட்டதில் ஊழல்; எடப்பாடி மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன்?” - புகழேந்தி

​``எடப்பாடி மு​தல்வராக இருந்தபோது புதிதாகக் கட்டப்பட்ட 11 ​அரசு மருத்துவக் கல்லூரி​​களில்​​ மிகப்பெரிய ஊழல் நடைபெற்றதற்கான முகாந்திரம் இருப்பதாகத் தெரிவித்த தற்போதைய தி​.​மு​.​க அரசு, வழக்கு பதிவுசெய்வதற்கு ஏன் தாமதிக்கிறது?” - புகழேந்தி

Published:Updated:
புகழேந்தி

அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் வரவிருக்கும் நிலையில், கடந்த இரு தினங்களாக தேனி பெரியகுளத்திலுள்ள பண்ணை வீட்டில்வைத்து ஓ.பன்னீர்செல்வம், தன் ஆதரவாளர்களைச் சந்தித்துவருகிறார். 

திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க-வினர்
திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க-வினர்

நேற்று​ திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ​மாவட்டச் செயலாளர் சண்முகம் தலைமையில், ​​அ​.​தி​.​மு​.​க நிர்வாகிகள் ​ஓ.பன்னீர்செல்வத்தைச்​ சந்தித்தனர். மேலும், எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த தாராபுரம் நகர அ​.​தி​.​மு​.​க செயலாளர் காமராஜ், எடப்பாடி அணியிலிருந்து விலகி 100 நிர்வாகிகளுடன் ஓ​.​பி​.​எஸ் அணியில் இணைந்தார்.

நேற்று கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் இளங்கோவன் தலைமையி​ல், புதிதாக நியமிக்கப்பட்ட ஓ‌.பி.எஸ் ஆதரவு கரூர் மேற்கு மாவட்ட நகர், ஒன்றியம் மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள், சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் தினேஷ் தலைமையி​லான ஆதரவாளர்கள் ​​​​​ஓ.பி.எஸ்-ஸை சந்தித்தனர். அப்போது ஓ.பி.எஸ் அணியில் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள புகழேந்தியும், பெரியகுளம் பண்ணை வீட்டில்வைத்து ஓ.பி.எஸ்-ஸைச் சந்தித்தார்.

புகழேந்தி
புகழேந்தி

​இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த புகழேந்தி, ​``அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான வழக்கு மீது உச்ச நீதிமன்றத்தில் எங்களுக்கு ஆதரவான தீர்ப்பு வழங்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ​​எடப்பாடி மு​தல்வராக இருந்தபோது புதிதாகக் கட்டப்பட்ட 11 ​அரசு மருத்துவக் கல்லூரி​​களில்​​ மிகப்பெரிய ஊழல் நடைபெற்றதற்கான முகாந்திரம் இருப்பதாகத் தெரிவித்த தற்போதைய தி​.​மு​.​க அரசு, வழக்கு பதிவுசெய்வதற்கு ஏன் தாமதிக்கிறது...​ ​விரைவில் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிந்து அவரைச் சிறையில் அடைக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.‌ அ​.​தி​.​மு​.​க-வை எம்ஜிஆர்., ஜெயலலிதா மீட்டெடுத்ததைப்போ​ல​ தற்போதுள்ள சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ​.​தி​.​மு​.​க மீட்டெடுக்கப்படும்” என்றார்.