Published:Updated:

``இந்தியா, மன்மோகன் சிங்குக்குக் கடன்பட்டிருக்கிறது”- புகழ்ந்து தள்ளிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

மன்மோகன் சிங், நிதின் கட்கரி

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை வெகுவாகப் புகழ்ந்திருக்கிறார்.

``இந்தியா, மன்மோகன் சிங்குக்குக் கடன்பட்டிருக்கிறது”- புகழ்ந்து தள்ளிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை வெகுவாகப் புகழ்ந்திருக்கிறார்.

Published:Updated:
மன்மோகன் சிங், நிதின் கட்கரி

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எப்போதும் தனது மனதில் இருப்பதை வெளிப்படையாகப் பேசுபவர். மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சரான நிதின் கட்கரி நாடு முழுவதும் நெடுஞ்சாலைகள் அமைப்பதில் தீவிரம் காட்டிவருகிறார். டெல்லியிலிருந்து மும்பைக்கு 12 மணி நேரத்தில் கார்களில் செல்லும் வகையில் புதிய சாலை அமைக்கப்பட்டுவருகிறது. டெல்லியில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் நிதின் கட்கரி கலந்துகொண்டு உரையாற்றினார். இதில் பேசிய கட்கரி, ``இந்தியாவில் ஏழைகளுக்குப் பயனளிக்கக்கூடிய தாராளப் பொருளாதாரக் கொள்கை தேவை.

நிதின் கட்கரி
நிதின் கட்கரி

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நாட்டில் நிதியமைச்சராக இருந்தபோது 1991-ம் ஆண்டு பொருளாதாரச் சீர்திருத்ததைத் தொடங்கிவைத்து தாராளமயமாக்கல் கொள்கையைக் கொண்டுவந்து இந்தியாவுக்குப் புதிய பாதையைக் காட்டினார். தாராளமயாக்கல் பொருளாதாரக் கொள்கையை கொண்டு வந்து இந்தியாவின் புதிய பாதைக்கு வழி வகுத்த மன்மோகன் சிங்குக்கு இந்தியா கடன்பட்டு இருக்கிறது. மன்மோகன் சிங் கொண்டுவந்த பொருளாதாரச் சீர்திருத்தம் காரணமாகத்தான் நான் 1990-களின் மத்தியில் மகாராஷ்டிராவில் அமைச்சராக இருந்தபோது சாலை அமைக்க என்னால் நிதி திரட்ட முடிந்தது.

ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்குப் பொருளாதாரக் கொள்கை மிகவும் மகத்தானது. தாராளமயமாக்கல் கொள்கை ஒரு நாட்டை எப்படி மேம்படுத்தும் என்பதற்கு சீனா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. பொருளாதாரக் கொள்கையை விரைவுபடுத்த நாட்டுக்கு அதிக அளவில் முதலீடு தேவை. சாலைக் கட்டுமானப் பணிகளுக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை சாமானிய மக்களிடமிருந்தும் நிதி திரட்டுகிறது. எனது அமைச்சகம் நாடு முழுவதும் 26 பசுமை நெடுஞ்சாலைகளை அமைத்துவருகிறது. எனது துறையில் நிதிப்பற்றாக்குறை கிடையாது. தற்போது சாலை நுழைவு வரியாக ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி கிடைக்கிறது. இது 2024-ம் ஆண்டிலிருந்து 1.4 லட்சம் கோடியாக அதிகரிக்கும்” என்று தெரிவித்தார். மன்மோகன் சிங்கை, நிதின் கட்கரி புகழ்ந்து பேசியிருப்பது பாஜக-வுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.