Published:Updated:

``மக்கள் நாடாளுமன்றத்தின் தீர்மானம் மத்திய கேபினட் அமைச்சகத்துக்கு அனுப்பப்படும்’’ - டெல்டா மக்கள்

மக்கள் நாடாளுமன்றம்
மக்கள் நாடாளுமன்றம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டெல்டா மாவட்டங்களில் நடத்தப்படும் மக்கள் நாடாளுமன்றம், மக்களின் கவனத்தை ஈர்த்துவருகிறது.

மத்திய அரசின் நடவடிக்கைகள் மீதான தங்களது விமர்சனங்களை மக்களிடம் கொண்டுசெல்ல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மக்கள் நாடாளுமன்றம் நடைபெற்றுவருகிறது. குறிப்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அதன் கூட்டணிக் கட்சிகளான தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் செல்வாக்குபெற்ற டெல்டா மாவட்டங்களில் நடத்தப்படும் மக்கள் நாடாளுமன்றம் மக்களின் கவனத்தை ஈர்த்துவருகிறது.

``மக்கள் நாடாளுமன்றத்தின் தீர்மானம் மத்திய கேபினட் அமைச்சகத்துக்கு அனுப்பப்படும்’’ - டெல்டா மக்கள்

இந்த மக்கள் நாடாளுமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளூர் பிரமுகர் சபாநாயகராக நியமிக்கப்படுகிறார். மத்திய கேபினெட் அமைச்சர், இணை அமைச்சர்களாகவும் சில பிரமுகர்கள் நியமிக்கப்படுகிறார்கள். மத்திய பா.ஜ.க அரசின் மூன்று வேளாண் சட்ட மசோதாக்கள், தொழிலாளர் சட்ட மசோதாக்களை இவர்கள் முன்மொழிந்து பேச, மக்கள் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசுகிறார்கள். இதுபோல் இன்னும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற மக்கள் நாடாளுமன்றத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிர்வாகிகள் மட்டுமல்லாமல், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றுவருகிறார்கள்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற மக்கள் நாடாளுமன்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் முத்தரசன், ``இந்திய நாடாளுமன்றத்தின் கூட்டம் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஆகஸ்ட் 11-ம் தேதியே முடித்துவைக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்கள், தொழிலாளர் சட்டங்கள் திருத்தம், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குதல், செல்போன்கள் ஒட்டுக்கேட்பு போன்ற பல்வேறு மக்கள் பிரச்னைகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. அதேநேரத்தில், நாடாளுமன்றம் நடைபெறாமலேயே 25-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நாடாளுமன்றம்
மக்கள் நாடாளுமன்றம்
"எம்.எல்.ஏ மாரிமுத்துவை அமைச்சர்கள் உட்காரச் சொல்லியிருக்கலாம்"-இந்திய கம்யூனிஸ்ட் பிரமுகர் வருத்தம்

இதையடுத்துதான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 23 முதல் ஆகஸ்ட் 27 வரை தமிழ்நாடு முழுவதும் 5,000-க்கும் அதிகமான இடங்களில் மக்கள் நாடாளுமன்ற கூட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. இதில், அனைத்து அரசியல் கட்சியினர், விவசாயிகள், தொழிலாளர்கள் பங்கெடுத்துவருகின்றனர். அவர்கள்தான் இதை வழிநடத்துகின்றனர். மக்கள் நாடாளுமன்றத்தில் முதல் நிகழ்வாகத் தேசியக்கொடி ஏற்றப்படுகிறது. ஒருமனதாகத் தேந்தெடுக்கப்பட்ட சபாநாயகர் இந்தக் கூட்டத்தை வழிநடத்துகிறார். புதிய வேளாண் சட்டங்கள், வேளாண்துறை அமைச்சரால் முன்மொழியப்படுகின்றன. அவற்றின் மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பங்கேற்று, தங்களின் கருத்துகளை எடுத்துக் கூறிவருகிறார்கள்" எனத் தெரிவித்தார். இங்கு நிறைவேற்றப்படும் தீர்மானம், டெல்லியில் நிஜமாகவே பதவி வகிக்கும் மத்திய கேபினெட் அமைச்சகத்தின் செயலாளர்களுக்கு அனுப்பப்படுகிறது

அடுத்த கட்டுரைக்கு