Published:Updated:

அதெல்லாம் அண்ணாமலை அள்ளிவீசும் பொய்! - சுளீர் சு.வெங்கடேசன்

சு.வெங்கடேசன்
பிரீமியம் ஸ்டோரி
சு.வெங்கடேசன்

ஸ்டேட் வங்கி தொடக்கநிலைத் தேர்வு முடிவுகளில், இட ஒதுக்கீடு நெறி முறைகள் தொடர்ந்து மீறப்படுகின்றன.

அதெல்லாம் அண்ணாமலை அள்ளிவீசும் பொய்! - சுளீர் சு.வெங்கடேசன்

ஸ்டேட் வங்கி தொடக்கநிலைத் தேர்வு முடிவுகளில், இட ஒதுக்கீடு நெறி முறைகள் தொடர்ந்து மீறப்படுகின்றன.

Published:Updated:
சு.வெங்கடேசன்
பிரீமியம் ஸ்டோரி
சு.வெங்கடேசன்

நாடாளுமன்றத்தில் உரிமைக்குரல் எழுப்புவதோடு, களப் போராட்டம், மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்படவேண்டிய விஷயங்கள் குறித்துத் தொடர்ந்து கடிதங்கள்... என தடதடத்துவருகிறார் மதுரை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழருமான சு.வெங்கடேசன். அவரிடம் அண்மைக்கால அரசியல் கள நிலவரங்கள் குறித்துப் பேசினோம்...

“உத்தரப்பிரதேசம், கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தால் தேர்வுசெய்யப்பட்டவர்களை சென்னையில் நியமித்து, சென்னையில் தேர்வுசெய்யப்பட்டவர்களைக் காத்திருப்போர் பட்டியலில்வைத்து இந்திய ரயில்வே உத்தரவிட்டிருக்கிறதே?’’

“விண்ணப்பதாரர்கள் எந்த ரயில்வேக்குத் தேர்வு எழுதுகிறார்களோ அந்த ரயில்வேக்குத்தான் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், இவர்கள் செய்தது சட்டவிரோதம். ஏற்கெனவே தொழில் நுட்பப் பிரிவில், தெற்கு ரயில்வேக்கு விண்ணப்பித்தவர்களில், 60% பேர் இந்தியில் தேர்வு எழுதியவர்கள் வந்திருக்கிறார்கள் என்று ரயில்வே அமைச்சர் எனக்குக் கொடுத்த பதிலில் கூறியுள்ளார். இந்தநிலையில், தெற்கு ரயில்வேயில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களைப் புறக்கணித்து, உ.பி-யில் தேர்வு செய்யப்பட்டவர்களை நியமிப்பதென்பது, தெற்கு ரயில்வே விண்ணப்பதாரர்களின் வேலைவாய்ப்பை பாதிப்பதோடு, ஜனநாயக அமைப்பைச் சீர்குலைப்பதாகவும் இருக்கிறது.’’

“ஸ்டேட் வங்கிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதிலும், இட ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்படுவதில்லை என்ற புகார் தொடர்ச்சியாக இருந்துவருகிறதே..?’’

“ஆமாம்... ஸ்டேட் வங்கி தொடக்கநிலைத் தேர்வு முடிவுகளில், இட ஒதுக்கீடு நெறி முறைகள் தொடர்ந்து மீறப்படுகின்றன. இது குறித்து நிதி மற்றும் சமூகநீதி அமைச்சகங்களுக்கு நான் கடிதம் எழுதியபோதெல்லாம், அந்தக் கடிதங்களை ஸ்டேட் வங்கிக்கு அனுப்புவதும், தாங்கள் இட ஒதுக்கீடு நடைமுறையைக் கடைப்பிடிப்பதாக பதில் தருவதும் வாடிக்கையாக உள்ளது. குற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக்கொள்ளலாமா? தற்போதைய முடிவிலும் பொதுப் போட்டி, ஓ.பி.சி., எஸ்.சி பிரிவினருக்கு ஒரே கட் ஆஃப் 61.75 இருப்பது எப்படி? பொதுப் போட்டியில் தேர்வான இட ஒதுக்கீட்டுப் பிரிவினரை இட ஒதுக்கீட்டு கணக்கில் சேர்ப்பது அப்பட்டமான மீறல். பொதுப் பட்டியல் கட் ஆஃப்-க்கு, அதிகமான மதிப்பெண் பெற்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் பொதுப் பட்டியலிலேயே கணக்கு வைக்கப்பட வேண்டும். இது குறித்து, மீண்டும் அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளேன். அதில், ‘இதற்கு ஸ்டேட் வங்கி பதில் அளிக்க வேண்டாம். சமூகநீதி அமைச்சகம் இட ஒதுக்கீடு நெறிமுறைகளில் கற்றுத் தேர்ந்த நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்து விசாரிக்கட்டும். அதில் இட ஒதுக்கீடு பிரிவைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களும், சமூகநீதி ஆர்வலர்களும் இடம்பெற வேண்டும்’ என்று கோரியுள்ளேன்.’’

“அகில இந்திய அளவில், அஞ்சல்துறைப் பணியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெறும்போது, பல்வேறு மாநிலத்தினரும் தமிழக அஞ்சல் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவது என்பது இயல்பானதுதானே... இதை ஏன் எதிர்க்கிறீர்கள்?’’

“அஞ்சல் உதவியாளர், அஞ்சல் பிரிப்பு உதவியாளர், ஆய்வாளர்கள் ஆகிய பணிகளைச் செய்யும் ஊழியர்களுக்கான தேர்வுகளை அலுவலர் நியமன ஆணையம் (Staff Selection Commission) நடத்தும்போது, தமிழில் அவர்கள் உரையாடக்கூடியவர்களா என்றுகூட சோதித்துப் பார்ப்பதில்லை. உதாரணமாக, கிராமப்புற அஞ்சல் அலுவலகங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பவர்கள்தான் ஆய்வாளர்கள். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் ஆய்வாளர் பணிக்கு நடைபெற்றுள்ள நேரடி நியமனங்களில் தேர்வுசெய்யப்பட்ட 60 பேரில் 57 பேர் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று அறியவருகிறேன். தமிழ் மட்டுமே தெரிந்திருக்கும் கிராமப்புற மக்களுக்கு இது எவ்வளவு சிரமம் கொடுக்கும்... எனவே தபால் ஊழியர் நியமன முறையில் தமிழ்த் தேர்ச்சிக்கான தேர்வு இணைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளேன்.’’

அதெல்லாம் அண்ணாமலை அள்ளிவீசும் பொய்! - சுளீர் சு.வெங்கடேசன்

“ `நீட் தேர்வை ரத்துசெய்வோம்’ எனத் தேர்தல் வாக்குறுதி கொடுத்த தி.மு.க அரசைக் கேள்வி கேட்காமல், நீட் தேர்வு விலக்கு தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்களே கம்யூனிஸ்ட்டுகள்?’’

“நீட் தேர்வு ரத்துசெய்யப்பட்ட வேண்டும் என்ற அரசியல் போராட்டத்தின் பகுதியே சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். எனவே கம்யூனிஸ்ட்டுகள் ஆதரித்தோம். மாநில அரசால் ரத்துசெய்ய முடியாத சட்டங் களுக்கெல்லாம் அடிபணிந்து போவது என்றால், கூட்டாட்சித் தத்துவத்துக்கு அர்த்தமேதும் இல்லாமல் போய்விடும். அரசியல் உறுதிப்பாடும், வெகுமக்களின் திறன்மிகு வெளிப்பாடுமே நீட் தேர்வைக் கைவிடவைக்கும்.’’

“ ‘150 மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி தரும் வாய்ப்பைத் தமிழக அரசு மறுத்திருப்பது ஏன்?’ எனக் கேட்டுள்ள பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் கேள்விக்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்?’’

“இந்தக் கேள்விக்கு பதில் சொல்லி, அவரின் கூற்று பொய் என்பதை வெளிப்படுத்திவிட்டோம். அதன் பிறகு அவர்தான் கருத்தேதும் தெரிவிக்காமல் இருக்கிறார். `மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ள பின்னணியில் கட்டுமானப் பணிகள் முடிவடைய தாமதம் ஆகுமென்பதால், மருத்துவக் கல்லூரியைத் தொடங்க தற்காலிக இடம் ஒன்றைத் தமிழ்நாடு அரசு ஒதுக்கித் தர வேண்டும்’ என்று கோரி, ஒன்றிய அரசு தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது. இதில் ‘50 மாணவர்களுக்கான தற்காலிகக் கல்லூரி’ என்றுதான் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள், ‘150 மாணவர்கள்’ என்பதெல்லாம் அண்ணாமலை அள்ளிவீசும் பொய். மேலும், இந்த 50 மாணவர்கள் சேர்க்கைக்கு முறையான அனுமதியை ஒன்றிய அரசின் மருத்துவ கவுன்சில்தானே தர வேண்டும்? ஒற்றைச் செங்கல்லை வைத்து மூன்று ஆண்டுகள் ஓட்டியதைப்போல, மொட்டையாக ஒரு கடிதத்தை எழுதி அடுத்த சில ஆண்டுகளை ஓட்ட நினைக்கிறது பா.ஜ.க தலைமை!’’