Published:Updated:

பொங்கல் பரிசாக குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்! - சி.பி.எம் வலியுறுத்தல் 

சிபிஎம்
News
சிபிஎம்

பிரதமர் மோடி வருகிற 12-ம் தேதி வருவதாக அறிவித்துள்ளார். எனவே பிரதமரிடம் பேசி மழை வெள்ள நிவாரணத்தை பெற்று இந்தப் பொங்கல் விழாவையொட்டி குடும்ப அட்டைக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற சி.பி.எம் மாவட்ட மாநாட்டில் பங்கேற்ற கே.பாலகிருஷ்ணன், நாடு முழுவதும் சிறுபான்மை மக்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடந்து வருகிறது. கிறிஸ்துமஸ் தினத்தன்று உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தேவாலயங்களை இடித்துத் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். ஏசு சிலையை உடைத்து பாதிரியார்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதேபோல ஹரித்துவார் என்ற இடத்தில் இந்துக்கள் பாராளுமன்றம் என்ற பெயரில் மடாதிபதிகள் மாநாடு நடத்தியுள்ளனர். அதில் நாங்கள் ஒவ்வொருவரும் நூற்றுக்கணக்கான முஸ்லீம்களை கொலை செய்வோம் என்று பகிரங்கமாக பேசியிருக்கிறார்கள். முஸ்லீம் பெண்களை பாலியில் வன்கொடுமைக்கு ஆளாக்குவதாகவும் பேசியிருக்கிறார்கள். அவர்களை இந்தியாவை விட்டு வெளியேற்றுவோம் என்றும் கூறியுள்ளனர். இந்தச் செயல்கள் மிகுந்த கவலையை அளிக்கிறது.

கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்

காலம் காலமாக மக்கள் ஒற்றுமையுடன் வாழும் மதசார்பற்ற இந்திய நாட்டில் பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ் சங்பரிவாரங்கள் கொலைவெறியோடு பேசுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை.

ஹரித்துவாரில் பேசிய பேச்சு குறித்து காவல்த்துறையினர் சாதாரணமாக ஜாமீனில் வெளிவருகிற வழக்குகளை போட்டுள்ளனர். இந்த கொலைவெறி சம்பவங்களுக்கு பின்னால் மத்திய பா.ஜ.க அரசே இருக்கிறது. எனவே இந்திய நாடு முழுவதும் உள்ள மதசார்பற்ற சக்திகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து பெரும்பான்மை சிறுபான்மை என்று மக்களை பாகுபடுத்தி கொலைவெறி தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்த முன்வரவேண்டும்.

எப்படி தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையில் மதச்சார்பற்ற கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்திருக்கிறார்கள். அதே போல காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எல்லா மதசார்ப்பற்ற கட்சிகளும் ஒன்று சேர்ந்து நாட்டுக்கு ஏற்பட்டிருக்கிற பேராபத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழக முதல்வர் பொங்கல் பரிசு திட்டத்தை அறிவித்துள்ளார். மழை வெள்ளம் வந்திருக்கிற சூழ்நிலையில் அவர்களுக்கு நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது. நிதி நெருக்கடி கடுமையாக உள்ளது என்பது உண்மை தான். அ.தி.மு.க கஜானாவை காலி செய்துவிட்டது. இருந்தாலும் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் கொடுக்க மறுத்துள்ளது. பிரதமர் மோடி வருகிற 12-ம் தேதி வருவதாக அறிவித்துள்ளார். எனவே பிரதமரிடம் பேசி மழை வெள்ள நிவாரணத்தை பெற்று இந்தப் பொங்கல் விழாவையொட்டி குடும்ப அட்டைக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.

சமீபத்தில் அ.தி.மு.க ஊழல்கள் குறித்து தி.மு.க நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் 20 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலங்களை தனியாருக்கு பட்டா போட்டு கொடுத்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் அப்போதைய அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு உள்ளது'' என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz