Published:Updated:

"கொலை மிரட்டல்!" சசிகலா மற்றும் ஆதரவாளர்கள்மீது சி.வி.சண்முகம் காவல் நிலையத்தில் புகார்!

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்

சசிகலாவின் தூண்டுதலின்பேரில் அவரின் ஆதரவாளர்கள் 500 பேர் தன்னைத் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கின்றனர்.

சசிகலா ஆட்கள் தன்னைக் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுவதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சசிகலா மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மீது ரோசனை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

சசிகலா
சசிகலா

"சசிகலாவின் தூண்டுதலின்பேரில் அவரின் ஆதரவாளர்கள் 500 பேர் என்னைத் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கின்றனர். அவர்கள் என்னையும் என் குடும்பத்தினரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார்கள். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ரோசனை காவல் நிலையத்தில் இன்று மதியம் புகார் அளித்துள்ளார். இதனால் கட்சியினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

`கருவாடு கூட மீன் ஆகும்.. சசிகலா, அதிமுக உறுப்பினர் ஆக  முடியாது!’ - சி.வி.சண்முகம் காட்டம்
அடுத்த கட்டுரைக்கு