Election bannerElection banner
Published:Updated:

`யாருடன் கூட்டணி?’ - விகடனுக்கு கமல் சொன்ன பதில் #DayWithALeader

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ்., மு.க.ஸ்டாலின், பிரபாகரன், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எனப் பலர் குறித்தும் கமல் தன்னுடைய கருத்துகளை மனம் திறந்து பகிர்ந்திருக்கிறார்.

தேர்தல் அரசியல் களம் பரபரவென்று அனலடிக்கத் தொடங்கிவிட்டது. ஒவ்வோர் அரசியல் கட்சியும், அதன் தலைவர்களும் தீயாக வேலைபார்க்கத் தொடங்கிவிட்டார்கள். தேர்தலில் வெற்றி சாத்தியமாக வேண்டுமல்லவா... இதற்காக தங்களுடைய பரப்புரைப் பயணத்தையும் பெரும்பாலான தலைவர்கள் தொடங்கி நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்த இடத்தில்தான் `தலைவர்களுடைய பரப்புரைப் பயணத்தில் நாமும் இணைந்துகொண்டு, களச் செய்திகளை சேகரித்தால் என்ன?' என்ற யோசனை நமக்கு ஏற்பட்டது.

`தலைவர்கள் எங்கே பயணிக்கிறார்கள்... என்ன பேசுகிறார்கள்... அவர்களின் பரப்புரையை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்... குறிப்பாக, வெளிப்படையாகத் தெரியும் பரப்புரை மட்டுமல்லாமல் திரைக்குப் பின்னால் அந்தப் பரப்புரைக்காக எப்படியெல்லாம் தயாராகிறார்கள்.... என்னவெல்லாம் நடக்கிறது?' என முழுமையான ஒரு தொகுப்பாகக் கொடுக்கலாம் என முடிவெடுத்தோம்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்
அந்த யோசனையின் செயல்வடிவம்தான் - `டே வித் எ லீடர்’

`சரி, பிளானெல்லாம் ஓகே... முதலாவதாக யாருடைய சுற்றுப்பயண கவரேஜ் கொடுக்கப் போறீங்க?' என நீங்கள் கேட்பது புரிகிறது... அது வேறு யாருமில்லை. வார இறுதி நாள்களில் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பும், வார நாள்களில் அரசியல் பயணமுமாக பிஸியாகவும், இதற்கிடையில் மே மாதத்துக்குள் ஒரு படத்தை ரிலீஸ் செய்தே தீருவேன் என பரபரப்பாக அதற்கான பணிகளையும் செய்துவரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் 'கமல்ஹாசன்'தான்.

கோவை, திருப்பூர், ஈரோடு என மூன்று மாவட்டங்கள், நான்கு நாள்கள். சுமார் 950 கி.மீ பயணம் என கமலின் மேற்கு மண்டலப் பரப்புரைப் பயணத்தில், நாம் `பிக் பாஸ்’ தளத்திலிருந்தே இணைந்துகொண்டோம். `பிக் பாஸ்’ பேக் ஸ்டேஜுக்குப் போகிற வழியே பிரமாண்டமாக இருந்தது. அங்கே கமலைச் சந்திக்கக் காத்திருந்த சில மணித்துளிகளில், பேக் ஸ்டேஜ் வழியாக வெளிய வந்த கமல், தன்னுடைய மேல்கோட்டை கழற்றியபடியே `ஆரம்பிக்கலாமா?' என்றார் நம்மிடம். அங்கு தொடங்கிய பயணம், அடுத்த நாள் கோவையில் முழுமையானது.

கோவை விமான நிலையத்திலேயே, நம்முடைய கேள்விகள் சிலவற்றை கமலிடம் முன்வைத்தோம். குறிப்பாக, `கொங்கு மண்டலம் என்றாலே ஆளும் கட்சியின் கோட்டை என்ற பார்வை இருக்கிறதே... இங்கு வந்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என நாம் கேட்ட கேள்விக்கு கமல் கொடுத்த பதில்..?

அதையடுத்து, கோவை மாநகரில் கமல் பரப்புரையைக்காண திரண்ட மக்கள், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொகுதியான தொண்டாமுத்தூரில் மக்கள் தெரிவித்த சுவாரஸ்யமான கருத்துகள் என நிறைய அனுபவங்கள்...

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

`நீங்கள் பா.ஜ.க அல்லது தி.மு.க-வின் பி டீமா?’ என்று நாம் கேட்டதற்கு கமலின் காரசாரமான ரியாக்‌ஷன், `புரியாத மாதிரியே பேசுறீங்களே... என உங்களை நோக்கி வரும் விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?' என்றதற்கு கமலின் சுவாரஸ்ய பதில், அடுத்து, `எந்தெந்தக் கட்சிகளெல்லாம் கூட்டணிக்காக உங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்... யாருடன் கூட்டணி?’’ என்று கேட்டதற்கு, ``எல்லோருமே எங்களிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எங்கள் கட்சி நிர்வாகிகளும் இது குறித்து கலந்தாலோசித்துக்கொண்டிருக்கிறார்கள். மேலும்...’’ - இந்த கேள்விக்குக் கமல் அளித்த விரிவான பதிலை வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்.

இவையல்லாமல், `தேர்தல் பரப்புரைக்காக எடுத்துக்கொள்ளும் உணவு வகைகள்’ பற்றிப் பகிர்ந்த கமல், தன்னுடைய உடற்பயிற்சியிலும் நம்மை இணைத்துக்கொண்டார். தன்னுடைய கால்வலி குறித்து சிலவற்றையும் பகிர்ந்தார். மேலும், கமலுடைய தினசரி காலை ரொட்டீன் என்ன, எப்படியெல்லாம் தன்னுடைய நாளை கட்டமைக்கிறார், பரப்புரைக்கு எப்படித் தயாராகிறார்? பரப்புரைக்காக காங்கேயத்தை கடந்தபோது, நம்முடைய தொன்மையான ஜல்லிக்கட்டு நாட்டு மாடுகள் பற்றியும், `விருமாண்டி’ சமயத்தில் தான் உயிர் தப்பியது பற்றியும் பல நாஸ்டால்ஜியா நினைவுகளை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

மிக முக்கியமாக, சசிகலா பற்றிய கேள்விக்கு கமல் சொன்ன பதில், அவருடைய உணர்வைப் படம் போட்டுக்காட்டியது. `விஸ்வரூபம்’ வந்தபோது நடந்த பிரச்னைகளையும் அசைபோட்டார் கமல். இவையெல்லாவற்றையும் கடந்து பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ்., மு.க ஸ்டாலின், பிரபாகரன், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எனப் பலர் குறித்தும் கமல் தன்னுடைய கருத்துகளை மனம் திறந்து பகிர்ந்திருக்கிறார்.

அப்படி என்னதான் கமல் பேசினார்... களத்தில் என்னதான் நடந்தது? முழு விவரங்களை அறிந்துகொள்ள அடுத்தடுத்து வரக்கூடிய காணொலிகளைப் பாருங்கள் மக்களே...

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு