Published:Updated:

கூட்டணிக் கட்சிகளுக்குள் புகைச்சலை ஏற்படுத்தியதா ராகுல் பேச்சு? - ஓர் அலசல்!

ராகுல் காந்தி

தன்னை ஒரு தேசியத் தலைவராக முன்னெடுக்காமல், ஒரு மாநிலத் தலைவர் அளவுக்குள் ராகுல் சுருக்கிக் கொள்வதால், அவரது சித்தாந்தம், பேச்சு, நடவடிக்கை எல்லாமே சுருங்கிவிடுகிறது.

கூட்டணிக் கட்சிகளுக்குள் புகைச்சலை ஏற்படுத்தியதா ராகுல் பேச்சு? - ஓர் அலசல்!

தன்னை ஒரு தேசியத் தலைவராக முன்னெடுக்காமல், ஒரு மாநிலத் தலைவர் அளவுக்குள் ராகுல் சுருக்கிக் கொள்வதால், அவரது சித்தாந்தம், பேச்சு, நடவடிக்கை எல்லாமே சுருங்கிவிடுகிறது.

Published:Updated:
ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வுக் கூட்டம் சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடந்து முடிந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய அந்தக் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ``பா.ஜ.க ஒருபோதும் மாநிலக் கட்சிகளைப் பற்றி பேசாது. ஏனென்றால், மாநிலக் கட்சிகளின் நிலை என்னவென்பது அவர்களுக்குத் தெரியும். மாநில கட்சிகளுக்கு கொள்கைகள் கிடையாது. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்-ஐ எதிர்த்து மாநில கட்சிகளால் போரிட முடியாது. காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே அது சாத்தியம்" என்றிருந்தார். அவரின் இந்தக் கருத்து, மாநிலக் கட்சிகளிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியிலிருக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்டக் கட்சிகள்கூட ராகுலின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. ``மாநிலங்களில் தாங்கள் பிழைத்திருக்க மாநிலக் கட்சிகளையே காங்கிரஸ் நம்பியிருக்கிறது. இதை மறந்துவிட வேண்டாம்" என ஜார்க்கண்ட் முக்தி மோர்சா காட்டமாகவே பேசியிருக்கிறது.

குமாரசாமி
குமாரசாமி

கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமி, "ராஜிவ் கொலை வழக்கில் தி.மு.க.,மீது ஜெயின் கமிஷன் குற்றச்சாட்டு சுமத்தியதை அடுத்து, அக்கட்சி கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஐ.கே.குஜ்ரால் தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸ் கட்சி கவிழ்த்தது. பிறகு, தி.மு.க-வுடன் கூட்டணி போட்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்கிற பெயரில் மன்மோகன்சிங் தலைமையில் ஆட்சியமைத்தனர். 10 ஆண்டுகள் தி.மு.க-வுடன் ஆட்சியைப் பகிர்ந்து கொண்டனர். இதெல்லாம் கொள்கையா? மாநிலக் கட்சிகளின் தயவால்தான், அந்த 10 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தை காங்கிரஸ் அனுபவித்தது. இதெல்லாம் ராகுலுக்கு மறந்துவிட்டதா?" என்று காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த விமர்சனங்களிலிருந்து காங்கிரஸ் கட்சியின் எம்.பி சசிதரூர் விளக்கமளித்தாலும், சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"மாநிலக் கட்சிகள் மீதான ராகுல் காந்தியின் இந்தப் பார்வையை எப்படி புரிந்து கொள்வது?" என வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியிடம் கேட்டோம். ``2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, இந்தியாவில் இரண்டாவது பெரிய கட்சி காங்கிரஸ்தான். அகில இந்திய அளவில் 19.7 சதவிகித வாக்குகளை காங்கிரஸ் வைத்திருக்கிறது. மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 4.7 சதவிகித வாக்குகளே உள்ளன. தவிர, பா.ஜ.க-வின் சித்தாந்தத்தை தேசிய அளவில் எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும். 138 ஆண்டுகள்பழைமையான கட்சி, 55 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட கட்சி என காங்கிரஸுக்கு இருக்கும் பலம் பா.ஜ.க-வுக்கு எப்போதுமே ஒரு சவால்தான்.

ஜான் ஆரோக்கியசாமி
ஜான் ஆரோக்கியசாமி

வேறெந்த மாநிலக் கட்சிகளாலும் பா.ஜ.க-வுக்கு எதிராக இந்த சவாலை முன்னிறுத்த முடியாது. மாநிலக் கட்சிகளுக்கு அந்தந்த மாநில எல்லைகளை தாண்டினால் முகமில்லை. திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி ஆகியவை சில மாநிலங்களில் வேட்பாளர்களை நிறுத்துகின்றன. ஆனால், மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வாக்குகள் எதையும் அவர்கள் பெறுவதில்லை. இதன்படி பார்த்தால், காங்கிரஸ் கட்சிதான் தேசிய அளவில் பா.ஜ.க-வுக்கு ஒரு சவாலாக முன் நிற்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உதய்பூரில் நடந்த சிந்தனையாளர்கள் கூட்டத்தில், இந்தக் கருத்தைத்தான் ராகுல் காந்தி பேச முயன்றுள்ளார். ஆனால், அவர் பேசிய விதம் தவறு. தங்களுடைய பலத்தை எடுத்துரைத்து, 'பா.ஜ.க-வுக்கு எதிரான போரில் எங்கள் கரத்தை மாநிலக் கட்சிகள் வலுப்படுத்த வேண்டும்' என்று கோரியிருக்க வேண்டும். அதற்கு மாற்றாக, மாநிலக் கட்சிகளில் சுயமரியாதையைச் சீண்டும் வகையில் அவர் பேசியிருப்பது கூட்டணிக்குள்ளேயே புகைச்சலை உருவாக்கிவிட்டது. காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் அடிப்படைப் பிரச்னை ராகுலின் சிந்தனை ஓட்டம்தான். தன்னை ஒரு தேசியத் தலைவராக முன்னெடுக்காமல், ஒரு மாநிலத் தலைவர் அளவுக்குள் ராகுல் சுருக்கிக் கொள்வதால், அவரது சித்தாந்தம், பேச்சு, நடவடிக்கை எல்லாமே சுருங்கிவிடுகிறது. இந்தக் குழப்பங்களுக்கெல்லாம் விடை ராகுலின் மனமாற்றத்தில்தான் இருக்கிறது" என்றார் விரிவாக.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ராகுல் தன்னுடைய நடவடிக்கை, செயல்திட்டத்தை மாற்றிக் கொண்டால்கூட, தேசிய அளவில் பா.ஜ.க-வுக்கு எதிரான வலுவான எதிர் சக்தியாக காங்கிரஸ் கட்சியை முன்னிறுத்த முடியுமா? என்பது கேள்விக்குறிதான். 2019-ம் ஆண்டுக்குப் பிறகு 19 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வியைத் தழுவியிருக்கிறது காங்கிரஸ். சமீபத்தில் நடந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில்கூட, தங்கள் ஆளுகைக்குள் இருந்த பஞ்சாப் மாநிலத்தை புதிய வரவான ஆம் ஆத்மி கட்சியிடம் பறிகொடுத்தது. இந்த இடர்பாடுகளையெல்லாம் சந்தித்து காங்கிரஸ் கட்சியை ராகுல் காந்தி கரைசேர்ப்பது சவாலான காரியம்தான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism