Published:Updated:

புதுக்கோட்டை ஆட்சியர் குறித்து அவதூறு!- தி.மு.க எம்.எல்.ஏ மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

என்னுடைய தொகுதியில் நடைபெறும் குறைதீர் முகாமில், எனக்கு அழைப்பு விடுக்கவில்லை. கூட்டுறவு வாரவிழாவிலும் எம்.எல்.ஏ என்ற முறையில் பத்திரிகையில் பெயர் போடவில்லை.

 தி.மு.க எம்.எல்.ஏ ரகுபதி
தி.மு.க எம்.எல்.ஏ ரகுபதி

தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் சார்பில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கலந்தாய்வுக் கூட்டம் புதுக்கோட்டை தி.மு.க மாவட்ட அலுவலகத்தில் நடந்துள்ளது. கூட்டத்தில், கலந்துகொண்ட திருமயம் தொகுதி எம்.எல்.ஏ ரகுபதி, "என்னுடைய தொகுதியில் நடைபெறும் குறைதீர் முகாமில், எனக்கு அழைப்பு விடுக்கவில்லை.

மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி
மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி

கூட்டுறவு வாரவிழாவிலும் எம்.எல்.ஏ என்ற முறையில் பத்திரிகையில் பெயர் போடவில்லை. அழைப்பும் விடுக்கவில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம்தான் முறையிட முடியும். ஆனால், மாவட்ட ஆட்சியரோ அ.தி.மு.க மகளிரணி மாவட்டச் செயலாளர் போலச் செயல்படுகிறார்.

மாவட்ட ஆட்சியர் அப்படி இருக்க நான் யாரிடம் முறையிட முடியும்" என்று அவர் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

 தி.மு.க எம்.எல்.ஏ ரகுபதி
தி.மு.க எம்.எல்.ஏ ரகுபதி

இதனடிப்படையில், அ.தி.முக வழக்கறிஞர் ஷேக்திவான் என்பவர் அளித்த புகாரின் பேரில், புதுக்கோட்டை டவுன் போலீஸார் தி.மு.க எம்.எல்.ஏ ரகுபதி மீது 504, 506(1),294(பி) 637 ஐடி ஆக்ட் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.