Election bannerElection banner
Published:Updated:

``டெல்லி என் பக்கம்!" - பவருக்கு வரும் பன்னீர்... `மெளனம்' காக்கும் எடப்பாடி தரப்பு!

எடப்பாடி - எடப்பாடி
எடப்பாடி - எடப்பாடி

அ.தி.மு.க தலைமைக்கழக நிர்வாகிகளின் அவசரக் கூட்டம், செப்டம்பர் 18-ம் தேதி மாலை சென்னை ராயப்பேட்டையிலுள்ள தலைமைக்கழகத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் நடந்தவற்றை சீனியர் நிர்வாகிகள் சிலர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள்.

அ.தி.மு.க தலைமைக்கழக நிர்வாகிகளின் அவசரக் கூட்டம், செப்டம்பர் 18-ம் தேதி மாலை சென்னை ராயப்பேட்டையிலுள்ள தலைமைக்கழகத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் நடந்தவற்றை சீனியர் நிர்வாகிகள் சிலர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள்.

"முன்பெல்லாம் எடப்பாடி, பன்னீர் தரப்பில் அவரவர் ஆதரவாளர்கள் அமைதியாகக் கட்சிக் கூட்டங்களுக்கு வந்து செல்வார்கள். 'பிரச்னை வேண்டாம்' என்று இருதரப்பினரும் நினைத்ததே இதற்குக் காரணம். இப்போது இருதரப்பிலும் பகிரங்கமாக மோதிக்கொள்ள முடிவெடுத்து விட்டார்கள்" என்றனர்.

இந்த நிகழ்வுகளை யெல்லாம் உன்னிப்பாக கவனித்துவருகிறது டெல்லி பா.ஜ.க தலைமை. கூட்டம் நடந்த மறுநாளான செப்டம்பர் 19-ம் தேதி டெல்லியிலிருந்து மத்திய அமைச்சர் ஒருவர், பன்னீர் தரப்பிடம் நீண்டநேரம் பேசினாராம்.

பல மாதங்களுக்குப் பிறகு தெம்பூட்டும்படி டெல்லியிலிருந்து தனக்கு வந்த தகவலால் உற்சாகமாக இருக்கிறார் பன்னீர். மறுபுறம் எடப்பாடி தரப்பிடமும் பா.ஜ.க-விலிருந்து பேசியிருக்கிறார்கள். அது குறித்து விசாரித்தால், `செப்டம்பர் 20-ம் தேதி அன்று ராஜ்யசபாவில் தாக்கலாகவிருந்த விவசாயிகள் மசோதாவுக்கு ஆதரவு கேட்டுப் பேசினோம்" என்றார்கள்!

எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம்

இந்த விவகாரத்தையும் தனக்குச் சாதகமாக பன்னீர் தரப்பு ஸ்கோர் செய்ததுதான் ஹைலைட். செப்டம்பர் 19-ம் தேதியன்றே அ.தி.மு.க ராஜ்யசபா உறுப்பினர்களைத் தொடர்புகொண்ட பன்னீர் தரப்பு, 'வேளாண் மசோதாவில் பா.ஜ.க-வை ஆதரிக்க வேண்டும். இது கட்சியின் உத்தரவு' என்று சொல்லியிருக்கிறது. அதன் பிறகு, இதே கருத்தை எடப்பாடி தரப்பில் உறுப்பினர்களிடம் தெரிவித்தபோது, "அதான் அண்ணன் முன்னமே சொல்லிட்டாரே..." என்று சொல்ல, ஜெர்க் ஆகியிருக்கிறது எடப்பாடி டீம்!

அ.தி.மு.க-வின் செயற்குழுக் கூட்டம் செப்டம்பர் 28-ம் தேதி நடைபெறும் என்று கட்சித் தலைமை அறிவித்திருக்கிறது. அ.தி.மு.க கட்சி விதிகளின்படி செயற்குழுவுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் கிடையாது. செயற்குழுவில் ஒரு விஷயத்தைப் பேசி முடிவு செய்துவிட்டு, அந்த முடிவை பொதுக்குழுவில் நிறைவேற்றினால் மட்டுமே அது செல்லுபடியாகும்.

இது பற்றியும் பேசியவர்கள், "இடைப்பட்ட நாள்களில் அதிகாரப் பங்கீடு முடிந்துவிடும். பன்னீருக்கான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப் பட்டுவிடும். இதனால், செயற்குழுவில் இரு தரப்பினரும் பேசிவிட்டுக் கலைந்து சென்றுவிடுவார்கள். முதல்வர் வேட்பாளர் பற்றி இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படாது" என்றார்கள்.

- மூன்றரை ஆண்டுகளாகப் பெட்டிப் பாம்பாக பதுங்கியிருந்த பன்னீர் படமெடுத்து ஆடுகிறார். அவர் முகத்தில் பவ்யம் தெளிந்து, ரெளத்திரம் தெறிக்கிறது. டெல்லி தொடங்கி தினகரன் முகாம் வரை எதிர்பார்த்திராத ஆட்களெல்லாம் வரிசையாக வந்து வணக்கம் வைக்க... அவர்களை வரவேற்கும் பன்னீர் முகாமில் 'பன்னீர்' மணக்கிறது. எடப்பாடி முகாமிலோ உடனிருந்தவர்களே மெளனம் காக்க... கலங்கிப்போயிருக்கிறார் மனிதர். வேறு வழியில்லாமல் எதிர் முகாமுடன் சேர்ந்து பயணிக்கும் முடிவுக்கு இறங்கிவந்திருக்கிறது எடப்பாடி தரப்பு!

> பகிரங்க மோதல்... பலத்த கோஷம்! > "கட்சிக்கு என்ன செய்தீர்கள்?" - பன்னீர் > வைத்தியின் அதிர்ச்சி வைத்தியம்! > தினகரன் பிளான்! > "எப்போ, என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும்!"

மேற்கண்ட 'சம்பவங்கள்' உடன் ஜூனியர் விகடன் கவர்ஸ்டோரியை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/3i0gRi1 > சேர்ந்தே விளையாடுவோம்... வாப்பா! - டெல்லியே என் பக்கம்... போப்பா! - உச்சத்தில் ஆடு புலியாட்டம்! https://bit.ly/3i0gRi1

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு