வாரணாசி கியான்வாபி மசூதியின் வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் நிலையில், டெல்லியின் உத்தம் நகர்ப் பகுதியிலுள்ள பாஜக தலைவர் அச்சல் சர்மா என்பவர் ஔரங்கசீப்பின் பெயரைக் கழிவறைச் சுவரில் ஒட்டிவைத்து அதைப் பழிவாங்கும் நடவடிக்கை எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், "அனைத்துக் கழிப்பறைகளுக்கும் ஔரங்கசீப் முத்ராலே அல்லது சௌசலே எனப் பெயர் மாற்ற கேட்டுக்கொள்கிறேன். முஸ்லிம்கள் 400 முதல் 500 ஆண்டுகளாக கியான்வாபி மசூதியில் சிவபெருமானை மறைத்துவைத்துள்ளனர். கியான்வாபி மசூதியைப்போல டெல்லி ஜும்மா மசூதியையும் தோண்ட வேண்டும் என அரசிடம் வேண்டுகோள் வைக்கிறேன். அங்கும், இந்துக் கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் அமைப்புகள் காணப்படுகின்றன" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism