Published:Updated:

`அடிக்கடி உடல்நலக் குறைவு; மருத்துவப் பரிசோதனை' - ஓய்வெடுக்க தேனி திரும்பும் ஓ.பி.எஸ்?

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மருத்துவ பரிசோதனைகள் முடிந்து, இன்று மாலை வீடு திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

`மனசு அவ்வளவு வலியா இருக்கு...!' -கருகும் கோழிக்கொண்டைப் பூக்களால் கலங்கும் தேனி விவசாயிகள்

இதுதொடர்பா் அவரது நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தோம். ``நேற்று இரவு சூளைமேட்டில் உள்ள மருத்துவமனையில் ஓ.பன்னீர்செல்வம் அனுமதிக்கப்பட்டார். அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படுவதாகக் கூறியதையடுத்து, இன்று காலை 6 மணிக்கு, அவருக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை எனத் தெரியவந்துள்ளது.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

மூன்று மணிநேரத்தில் அவர் வீடு திரும்பலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இன்று மாலை வீடு திரும்புவார்" என்றனர்.

அவருடன் மருத்துவமனையில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களிடம் பேசினோம். ``நேற்று இரவுதான் ஓ.பி.எஸ்ஸின் இளைய மகன் ஜெயபிரதீப் சென்னை சென்றார். ரவீந்திரநாத்குமார் உட்பட அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தேனியில்தான் உள்னர். ஜெயபிரதீப் மட்டுமே அவருடன் தற்போது இருக்கிறார். இன்று மாலை சென்னை இல்லத்துக்கு வரும் ஓ.பி.எஸ், இரண்டு நாள்களில் தேனி வீட்டிற்கு வந்து ஓய்வெடுப்பார் என எதிர்பார்க்கலாம்" என்றனர்.

`தாராவி டு தேனி; 30 பயணிகள்; போலி இ-பாஸ்!’ - அதிரவைத்த ஆம்னி பேருந்து மோசடி

மேலும், ஓ.பி.எஸ் உடல்சார்ந்து இதற்கு முன்னால் என்னென்ன பிரச்னைகளைச் சந்தித்தார் என அவரது சகாக்கள் சிலரிடம் பேசினோம். ``2017-18 காலகட்டத்தில் முகுதுத் தண்டுவட பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காகக் கோவையில் உள்ள தனியார் ஆயுர்வேத மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொள்வார். அங்கு அவருக்கு ஆயில் மசாஜ், மண் குளியல், எண்ணெய்க் குளியல், ஸ்டீம்பாத் உட்பட முழுக்க கேரள முறைப்படி ஆயுர்வேதப் புத்துணர்வு சிகிச்சைகள் தரப்படும். எவ்வளவு வேலை இருந்தாலும் அதனை ஒதுக்கி வைத்துவிட்டு இரண்டு நாள்கள் அங்கே தங்கி சிகிச்சை மேற்கொள்வார். வருடத்திற்கு இரு முறை அங்குச் சென்று வருவார். ஆனால், சமீப காலமாக அவர் அங்கு செல்லவில்லை." என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு