Published:Updated:

`மைனஸ் டிகிரி குளிர்; வேட்டி, சட்டை!' - சிகாகோவில் ஓ.பி.எஸ்

அமெரிக்காவில் ஓ.பி.எஸ்.
அமெரிக்காவில் ஓ.பி.எஸ்.

`உங்க அமைதி ரொம்ப பிடிக்கும் சார். வீட்டுலயும் இப்படித்தான் அமைதியா இருப்பீங்களா?’ எனப் பெண் ஒருவர் ஓ.பி.எஸ்ஸிடம் கேட்க, அருகிலிருந்த தன் மனைவி விஜயலட்சுமியைப் பார்த்து சிரித்த ஓ.பி.எஸ் வெட்கத்தில் சிவந்துவிட்டார்.

வீட்டுவசதிவாரியத்தில் செயல்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ளவும் தொழில்முதலீடுகளை ஈர்ப்பதற்கான கூட்டத்தில் கலந்துகொள்ளவும் பத்து நாள்கள் அரசுமுறைப் பயணமாக துணை முதல்வர் ஓ.பி.எஸ் அமெரிக்கா சென்றுள்ளார். இன்று அதிகாலை சிகாகோ நகரில் தரையிறங்கிய ஓ.பி.எஸ்ஸுக்கு, அங்குள்ள தமிழ்ச்சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

`மைனஸ் டிகிரி குளிர்; வேட்டி, சட்டை!' - சிகாகோவில் ஓ.பி.எஸ்
அமெரிக்காவில் ஓ.பி.எஸ்.
அமெரிக்காவில் ஓ.பி.எஸ்.

சிகாகோ தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்த அருட்செல்வம் நம்மிடம் பேசுகையில், ``வாரவிடுமுறை என்பதால், சிகாகோ விமானநிலையத்தில் வழக்கத்தைவிட கூட்டம் கூடுதலாக இருந்தது. ஓ.பி.எஸ் எந்த வழியாக வருகிறார் என்பது தெரியாமல், நாங்கள் குழம்பிய வேளையில், எங்களுடன் வந்திருந்த சிறுவன் ஒருவன் சத்தமாக, `அதோ, ஓ.பி.எஸ் அங்கிள் வர்றார் பாருங்க’ என்று உற்சாகமானான். தூரத்தில் நூறு பேருக்கு மத்தியில் தனி ஆளாக ஓ.பி.எஸ் நடந்துவந்து கொண்டிருந்தார். `எப்படிப்பா அவரை அடையாளம் கண்டுபிடிச்ச?’ என நாங்கள் அவனிடம் கேட்டதற்கு,`அவரைத்தான் டி.வி.ல வேட்டி சட்டையோட பார்க்குறேனே. எனக்குத் தெரியாதா?`’ என்றான். ஓ.பி.எஸ்-ன் அடையாளம் சிறுவர்கள் முதற்கொண்டு ஈர்த்துள்ளது. எங்களுடைய வரவேற்பில் ஓ.பி.எஸ் நெகிழ்ந்துவிட்டார்” என்றார் உற்சாகம் குறையாமல்.

அமெரிக்காவில் ஓ.பி.எஸ்.
அமெரிக்காவில் ஓ.பி.எஸ்.
`மைனஸ் டிகிரி குளிர்; வேட்டி, சட்டை!' - சிகாகோவில் ஓ.பி.எஸ்
அமெரிக்காவில் ஓ.பி.எஸ்.
அமெரிக்காவில் ஓ.பி.எஸ்.

ஓ.பி.எஸ்ஸுடன் வெளிநாட்டுப் பயணத்திலுள்ள உயரதிகாரி ஒருவர், நம்மிடம் வாட்ஸ் அப் மூலம் சுவையான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். ``சிகாகோ வாழ்தமிழர்கள் இத்தனைபேர் கூடி வரவேற்பு அளிப்பார்கள் என ஓ.பி.எஸ் எதிர்பார்த்திருக்கவில்லை. `உங்க அமைதி ரொம்ப பிடிக்கும் சார். வீட்டுலயும் இப்படித்தான் அமைதியா இருப்பீங்களா?’ எனப் பெண் ஒருவர் ஓ.பி.எஸ்ஸிடம் கேட்க, அருகிலிருந்த தன் மனைவி விஜயலட்சுமியைப் பார்த்து சிரித்த ஓ.பி.எஸ் வெட்கத்தில் சிவந்துவிட்டார்.

கேன்சலான டெல்லிப் பயணம்... மலப்புரம் ஜோதிடர் ஆரூடம்! - ஓ.பி.எஸ் `யூ டர்ன்’ பின்னணி

சிகாகோவில் தற்போது மைனஸ் 2 டிகிரி குளிர் இருக்கிறது. விமானநிலையத்திற்கு உள்ளே குளிர்காற்று பெரிதாக தெரியவில்லை. ஆனால், வெளியே வந்தபோது குளிரால் நடுங்கிவிட்டோம்.`என்னப்பா இப்படி குளுருது.. மக்கள் இந்த குளிர்லயுமா வசிக்குறாங்க?’ என ஓ.பி.எஸ் கேட்கவும், அருகிலிருந்த தமிழ்ச்சங்கத்தினர் இந்நகரின் சீதோஷ்ண நிலையைப் பற்றி விவரித்தனர். இங்குள்ள தொழில் கட்டமைப்புகள், தமிழர்களின் வாழ்வாதாரத்தையும் ஓ.பி.எஸ் கேட்டறிந்தார். முட்டிவரை போட்டுக் கொள்ளும் ஓவர் கோட்டை ஓ.பி.எஸ் மனைவி விஜயலட்சுமி எடுத்துக்கொடுத்த பின்னர்தான், ஓ.பி.எஸ் முகத்தில் இதம் தெரிந்தது. சூடாக காபியைப் பருகியவர், `நம்மூரு டேஸ்ட்லயே காபி போட்டிருக்காங்க’ எனப் பாராட்டிவிட்டு நகர்ந்தார். வேட்டி சட்டையில் கையில் கையுறை, ஓவர்கோட் சகிதம் ஓ.பி.எஸ்ஸையை முதல்முறையாகப் பார்த்தபோது வித்தியாசமாக இருந்தது.

அமெரிக்காவில் ஓ.பி.எஸ்.
அமெரிக்காவில் ஓ.பி.எஸ்.
அமெரிக்காவில் ஓ.பி.எஸ்.
அமெரிக்காவில் ஓ.பி.எஸ்.
அமெரிக்காவில் ஓ.பி.எஸ்.
அமெரிக்காவில் ஓ.பி.எஸ்.

நாளை சிகாகோவின், `அமெரிக்கன் மல்டி எத்னிக் கோயலிஷன்’ சார்பாக நடத்தப்படும் குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கர்ஸ்-2019 விழாவில் சிறப்பு விருந்தினராக ஓ.பி.எஸ் கலந்துகொள்கிறார். இவ்விழாவில் ஓ.பி.எஸ்க்கு சர்வதேச ரைசிங் ஸ்டார் விருது வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் தேனி எம்.பி.யும், ஓ.பி.எஸ். மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத்தும் கலந்து கொள்கிறார்” என்றார்.

பின் செல்ல