Published:Updated:

``அரசியலில் எதிரிகளாக இருப்பதால் அண்ணன்-தங்கை உறவுகூட இல்லை!" - தேசியவாத காங்கிரஸின் தனஞ்செய் முண்டே

பங்கஜா, தனஞ்செய்

அரசியலில் எதிரிகளாக இருப்பதால் அண்ணன் தங்கை உறவுகூட இல்லை என்று பா.ஜ.க-வின் பங்கஜா முண்டே குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தனஞ்செய் முண்டே தெரிவித்திருக்கிறார்.

``அரசியலில் எதிரிகளாக இருப்பதால் அண்ணன்-தங்கை உறவுகூட இல்லை!" - தேசியவாத காங்கிரஸின் தனஞ்செய் முண்டே

அரசியலில் எதிரிகளாக இருப்பதால் அண்ணன் தங்கை உறவுகூட இல்லை என்று பா.ஜ.க-வின் பங்கஜா முண்டே குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தனஞ்செய் முண்டே தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
பங்கஜா, தனஞ்செய்

அரசியலால் எத்தனையோ குடும்பத்தில் பிளவு ஏற்பட்டிருப்பதை பார்த்திருக்கிறோம். தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குடும்பம், பீகாரில் லல்லு பிரசாத் குடும்பம், மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே குடும்பம், கோபிநாத் முண்டே குடும்பம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். எவ்வளவுதான் அரசியலால் எதிரிகளாக இருந்தாலும் நல்லது கெட்டதுக்கு வந்து கலந்துகொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். ஆனால், மகாராஷ்டிராவில் மறைந்த பா.ஜ.க தலைவர் கோபிநாத் முண்டேவின் சகோதரர் மகன் தனஞ்செய் முண்டேவும், கோபிநாத் முண்டே மகள் பங்கஜா முண்டேவும் வேறு வேறு அரசியல் கட்சியில் இருப்பதால் அவர்களுக்கு இடையிலான உறவு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

பங்கஜா, தனஞ்செய்
பங்கஜா, தனஞ்செய்

தனஞ்செய் முண்டே பா.ஜ.க-விலிருந்து விலகி தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார். கடந்த முறை நடந்த சட்டமன்றத் தேர்தலில் தனஞ்சே முண்டேவும், பங்கஜா முண்டேவும் ஒரே தொகுதியில் மோதிக்கொண்டனர். இதில் பங்கஜா முண்டே தோல்வியடைந்தார். இந்த தோல்வியால் பங்கஜா முண்டேவுக்கு பா.ஜ.க-வில் செல்வாக்கு சரிந்திருக்கிறது. கட்சி தன்னை ஓரங்கட்டி வருவதாக நினைக்கிறார். இதனால் பங்கஜா பா.ஜ.க-விலிருந்து விலகப் போவதாகக்கூட செய்தி வெளியானது. சமீபத்தில் சட்டமேலவைத் தேர்தல் நடந்தது. அதில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று பங்கஜா முண்டே எதிர்பார்த்தார். ஆனால் தோல்வியடைந்தவர்களுக்கு இதில் வாய்ப்பு கிடையாது என்று தேவேந்திர பட்னாவிஸ் கறாராகக் கூறிவிட்டார். தற்போது ஆட்சி மாற்றம் நிகழ்ந்த போது அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். அதுவும் கிடைக்கவில்லை. அந்த கோபத்தில் அடிக்கடி தன் சகோதரன் தனஞ்செய் முண்டேவுக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். இது குறித்து தனஞ்செய் முண்டே தனியார் டிவி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ``எனக்கும், பங்கஜா முண்டேவுக்கும் இருக்கும் உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பது உண்மைதான்.

இனி எங்களுக்குள் அண்ணன்-தங்கை உறவு கிடையாது. அரசியலில் நாங்கள் எதிரிகள். உறவுக்குள் அரசியல் விரோதத்தை உண்டுபண்ணியிருக்கிறது. அரசியலால்தான் விரோதம் ஏற்படுகிறது. எனவே அறிக்கைகள் வெளியிடும் முன்பு அவற்றால் என்ன விளைவு ஏற்படும் என்பதை சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டும். அவை சரியா தவறா என்பதை புரிந்து கொண்டு வெளியிடவேண்டும். இவை அரசியல் அறிக்கைகள். என்ன பேசவேண்டும் என்பதை அவர்தான் முடிவு செய்யவேண்டும்" என்று தெரிவித்தார்.