Published:Updated:

அரசு நிதி ரூ.97 கோடியை கட்சி விளம்பரத்துக்குப் பயன்படுத்தியதா ஆம் ஆத்மி?! - நடந்தது என்ன?

கெஜ்ரிவாலுடன் சக்சேனா
News
கெஜ்ரிவாலுடன் சக்சேனா

அரசு நிதி ரூ.97 கோடியை கட்சி விளம்பரத்துக்குப் பயன்படுத்தியதாகக் கூறி, அந்த நிதியைத் திரும்பக் கொடுக்கும்படி ஆளுநர் ஆம் ஆத்மி கட்சிக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

அரசு நிதி ரூ.97 கோடியை கட்சி விளம்பரத்துக்குப் பயன்படுத்தியதா ஆம் ஆத்மி?! - நடந்தது என்ன?

அரசு நிதி ரூ.97 கோடியை கட்சி விளம்பரத்துக்குப் பயன்படுத்தியதாகக் கூறி, அந்த நிதியைத் திரும்பக் கொடுக்கும்படி ஆளுநர் ஆம் ஆத்மி கட்சிக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

Published:Updated:
கெஜ்ரிவாலுடன் சக்சேனா
News
கெஜ்ரிவாலுடன் சக்சேனா

டெல்லியில் ஆம் ஆத்மி அரசுக்கும், ஆளுநருக்கும் எப்போதும் மோதல் இருந்துகொண்டேயிருக்கிறது. கடந்த சில மாதங்களாக இந்த மோதல் அதிகரித்திருக்கிறது. டெல்லியில் அமல்படுத்தப்பட்ட புதிய மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி சிபிஐ, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் டெல்லி ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தனர். டெல்லியைச் சேர்ந்த அமைச்சர் ஜெயின் இன்னும் சிறையில்தான் இருக்கிறார். அதோடு அமைச்சர் சிசோடியாவுக்கு எதிராகவும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. டெல்லியில் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாக தொடர்ந்து ஆளுநருக்கும், முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் இடையே மோதல் இருந்துவருகிறது.

கெஜ்ரிவால்
கெஜ்ரிவால்

டெல்லி மாநகராட்சியை பாஜக தொடர்ச்சியாக 15 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்தது. ஆனால் சமீபத்தில் நடந்த தேர்தலில் பாஜக தோல்வியைத் தழுவியது. ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்றது. இந்த நிலையில் ஆளுநர் சக்சேனா டெல்லியில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராகப் புதிய குற்றசாட்டை முன்வைத்திருக்கிறார். அதாவது, டெல்லி அரசு நிதி 97 கோடி ரூபாயை ஆம் ஆத்மி அரசு தவறுதலாகப் பயன்படுத்தி கட்சியை வளர்த்ததாக ஆளுநர் குற்றம்சாட்டியிருக்கிறார் . அதோடு, ஆம் ஆத்மி கட்சியின் விளம்பரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட ரூ.97 கோடியை வசூலிக்கும்படி மாநிலத் தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் உத்தரவிட்டிருக்கிறார்.

அரசு விளம்பர விதிகளை மீறிச் செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அந்த உத்தரவில் ஆளுநர் குறிப்பிட்டிருக்கிறார்.ஆம் ஆத்மி கட்சி இது குறித்து வெளியிட்டிருக்கும் செய்தியில், ``ஆளுநர் பழிவாங்கும் நோக்கத்தோடு செயல்படுகிறார்” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

இதற்கு முன்பு காதி மற்றும் கிராம தொழில் பிரிவில் ஆளுநர் சக்சேனா இருந்தபோது அந்தத் துறையில் ஊழல் நடந்ததையும் அந்தக் கட்சி சுட்டிக்காட்டியிருக்கிறது. ஆளுநரின் புதிய குற்றச்சாட்டு இரு தரப்பினருக்கும் இடையிலான மோதலை மேலும் அதிகரித்திருக்கிறது.