Published:Updated:

உதவியாளர்களை அடித்தாரா அமைச்சர்?! -பின்னணித் தகவல்

தமிழக சட்டப்பேரவை
தமிழக சட்டப்பேரவை

தென் தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர், தனது உதவியாளர்கள் இருவரை அறைந்ததாக வெளியான செய்தி காட்டுத்தீபோலப் பரவிக்கொண்டிருக்கிறது.

என்ன நடந்தது? என்று திமுக வட்டாரத்தில் விசாரித்தோம். ``திமுக ஆட்சி அமைந்ததும், லஞ்ச ஒழிப்புத்துறை முதன்முதலில் முன்னாள் அமைச்சர் ஒருவர்மீது வழக்கு பதிவு செய்து, ரெய்டு நடத்தியது. அந்த அமைச்சர் முன்பு வகித்த துறைக்கு, தற்போது தென் தமிழகத்தின் வறட்சி மாவட்டத்தைச் சேர்ந்த `மன்னர்’ ஒருவர் அமைச்சராக இருக்கிறார். அதிமுக-விலிருந்து திமுக-வுக்கு வந்து அமைச்சரான எட்டுப் பேரில் இவரும் ஒருவர். முக்கியமான துறை இவருக்குக் கொடுக்கப்பட்டபோதே சீனியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தபோதும் துறையில் எவ்விதக் குற்றச்சாட்டுக்கும் இடமளிக்காமல் செயலாற்றிவருகிறார். பி.எஸ்.ஓ என்ற தனிப் பாதுகாப்பு அலுவலர் ஒருவரும், உதவியாளர் ஒருவரும் அமைச்சருக்கு நிழலாகச் செல்லக்கூடியவர்கள். இருவரும் அமைச்சரின் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள். அமைச்சர் பெயரைச் சொல்லி, அவருக்கே தெரியாமல் சிலபல காரியங்களில் ஈடுபட்டார்களாம் இருவரும். இதைக் கேள்விப்பட்ட அமைச்சர் ஆத்திரத்தில் அடித்துவிட்டார் எனக் கூறப்படுகிறது. இது ஒரு செய்தி.

சட்டமன்றம்
சட்டமன்றம்

இதேபோல், இன்னொரு செய்தியும் உலாவருகிறது. அதாவது, சட்டசபையிலிருந்து அமைச்சர் வெளியே வந்திருக்கிறார். அப்போது அலுவலக உதவியாளர் மட்டுமே அங்கு இருந்திருக்கிறார். பி.எஸ்.ஓ-வையும், தனிப்பட்ட உதவியாளரையும் காணோம். இருவரையும் அங்குமிங்கும் தேடி அலுத்துப்போன அமைச்சர், தானே காரை எடுத்துக்கொண்டு சென்றுவிடலாம் என காரை நோக்கிச் சென்றிருக்கிறார். அப்போது அடித்துப்பிடித்து இருவரும் ஓடி வந்திருக்கிறார்கள். கோட்டையில் எதுவும் சொல்லாமல், நேராக வீட்டுக்குச் சென்றதும் இருவரையும் கோபத்தில் அடித்திருக்கிறார். ‘இருவரும் என் கண்முன்னே நிற்கக் கூடாது. திரும்பி இங்கு வரவும் கூடாது’ என்று கோபத்தில் கத்தி துரத்திவிட்டுவிட்டாராம் அந்த மன்னர் அமைச்சர்” என்று முடித்தனர்.

சட்டப்பேரவை சர்ச்சை:  துரைமுருகன் விளக்கம்... எடப்பாடி தரப்பு சொல்லும் காரணம்! - திமுக Vs அதிமுக!
அடுத்த கட்டுரைக்கு