Published:Updated:

வைத்திலிங்கம் ஏரியா... ஒரத்தநாட்டில் கூட்டம் நடத்தத் தயங்கினாரா ஆர்.காமராஜ்?!

ஆர்.காமராஜ் - வைத்திலிங்கம்

ஆர்.காமராஜ் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்துக்கு பெரிய அளவில் திரண்ட கூட்டத்தைக் கண்டு வைத்திலிங்கம் தரப்பு மிரண்டுபோனது. ஆனால் இதுல ஒன்றை ஒரத்தநாட்டில் நடத்தி அவங்க கெத்தைக் காட்டியிருக்கலாம் என அப்போதே முணுமுணுத்தனர்.

வைத்திலிங்கம் ஏரியா... ஒரத்தநாட்டில் கூட்டம் நடத்தத் தயங்கினாரா ஆர்.காமராஜ்?!

ஆர்.காமராஜ் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்துக்கு பெரிய அளவில் திரண்ட கூட்டத்தைக் கண்டு வைத்திலிங்கம் தரப்பு மிரண்டுபோனது. ஆனால் இதுல ஒன்றை ஒரத்தநாட்டில் நடத்தி அவங்க கெத்தைக் காட்டியிருக்கலாம் என அப்போதே முணுமுணுத்தனர்.

Published:Updated:
ஆர்.காமராஜ் - வைத்திலிங்கம்

அ.தி.மு.க-வில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் நடத்தப்பட்டுவரும் நிலையில் ஓ.பி.எஸ் பக்கம் சென்ற வைத்திலிங்கத்தின் சொந்தத் தொகுதியில் கூட்டம் நடத்துவதைத் தவிர்த்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ். வைத்திலிங்கம், சசிகலா சந்திப்புக்குப் பிறகு வைத்திலிங்கத்தின் செல்வாக்கு அவர் தொகுதியில் உயர்ந்திருப்பதாலேயே கூட்டத்தை நடத்தவில்லை என வைத்தி ஆதரவாளர்கள் பேசிவருகின்றனர்.

சசிகலா - வைத்திலிங்கம்
சசிகலா - வைத்திலிங்கம்

அ.தி.மு.க சார்பில் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் நடத்தப்பட்டுவருகிறது. தஞ்சாவூரில் வடக்கு மாவட்டத்திலுள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் பொதுக்கூட்டங்கள் நடக்கின்றன. தெற்கு மாவட்டத்தில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை என இரண்டு தொகுதிகளில் மட்டும் கூட்டம் நடைபெறும் என கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`ஓ.பி.எஸ் அணியில் இருக்கும் வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ., அத்துடன் அவருடைய சொந்தத் தொகுதியும்கூட. இதனால் ஒரத்தநாட்டில் பெரிய அளவில் தொண்டர்களைத் திரட்டி கூட்டம் நடத்துவது சிரமம் என்பதால் அதைத் தவிர்ப்பதற்காக இரண்டு சட்டமன்றத் தொகுதிகளை ஒன்றாக உள்ளடக்கி தஞ்சாவூரில் மட்டும் கூட்டத்தை நடத்துகின்றனர் எடப்பாடி அணியினர்.

சோழமண்டலத் தளபதியான வைத்திலிங்கத்தின் கூடாரத்தைக் காலி செய்துவிட்டோம் எனப் பேசுபவர்கள் ஒரத்தநாட்டிலும கூட்டத்தை நடத்தவேண்டியதுதானே...’ என வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பிவருகின்றனர். இது குறித்து அ.தி.மு.க வட்டாரத்தைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம். ``மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழகம் முழுவதுமுள்ள ஒவ்வோர் ஒன்றியத்திலும் தலைமைக் கழக பேச்சாளர்கள் தலைமையில் அண்ணா பிறந்தநாள்விழா பொதுக்கூட்டத்தை நடத்துவார்.

அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் கூட்டத்தை நடத்த நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். தஞ்சாவூர் தெற்கில் மட்டும் நான்கு சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில் இரண்டு தொகுதிகளைச் சேர்த்து கூட்டத்தை நடத்துகின்றனர். முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வைகைசெல்வன் இதில் கலந்துகொள்கின்றனர்.

தஞ்சாவூரில் ஆர்.காமராஜ் நடத்திய ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூரில் ஆர்.காமராஜ் நடத்திய ஆர்ப்பாட்டம்

ஒற்றைத் தலைமை பிரச்னை எழுந்த பிறகு டெல்டா அ.தி.மு.க-வில் ஆளுமைமிக்கவராக அறியப்பட்ட வைத்திலிங்கம் ஓ.பி.எஸ் அணிக்குச் சென்றார். வைத்திலிங்கத்தின் வலதுகரமாக அறியப்பட்ட காந்தி உள்ளிட்ட பலரும் எடப்பாடி முகாமுக்குத்கு தாவி வைத்திலிங்கத்துக்கு அதிர்ச்சி கொடுத்தனர். பின்னர் வைத்திலிங்கமே பலருக்கு போன் செய்து, `எங்க பக்கம் வந்துருங்க’ என்று சொல்லிக் கேட்டும் யாரும் போகவில்லை.

இந்த நிலையிலும் அவரோட சொந்தத் தொகுதியான ஒரத்தநாட்டில் அவருக்கான செல்வாக்கு குறையவில்லை. அவர் கண்ணசைத்தால் அந்தக் காரியத்தைச் செய்வதற்கு இன்னும் பலர் தயாராக இருக்கிறார்கள். விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு என முன்னாள் அமைச்சர் ஆர்,காமராஜ் தலைமையில் தஞ்சாவூர் ரயிலடியில் இரண்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர் எடப்பாடி தரப்பினர். ஆர்.காமராஜுக்கு சோழமண்டல தளபதி பட்டத்தையும் கொடுத்தனர். தற்போது ஆர்,காமராஜ் டெல்டாவைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்.

முன்னாள் அமைச்சர் காமராஜ்
முன்னாள் அமைச்சர் காமராஜ்

ஆர்.காமராஜ் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்துக்கு பெரிய அளவில் திரண்ட கூட்டத்தைக் கண்டு வைத்திலிங்கம் தரப்பு மிரண்டுபோனது. ஆனால் இதில் ஒன்றை ஒரத்தநாட்டில் நடத்தி அவர்களின் கெத்தைக் காட்டியிருக்கலாம் என அப்போதே முணுமுணுத்தனர் அவரின் ஆதரவாளர்கள். இன்றைக்கு தனியா இருக்குற மாதிரி தெரியும். ஆனால் கிளைமாக்ஸில் `நான்தான் மாஸா ஜெயிப்பேன்’ என்று சமீபத்தில் ஒரத்தநாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வைத்திலிங்கம் பேசியிருக்கிறார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு சசிகலா- வைத்திலிங்கம் சந்திப்பும் நடந்தது. இந்தச் சூழலில் ஒரத்தநாட்டில் கூட்டத்தை நடத்த ஆர்.காமராஜ் விரும்பாமல் தவிர்த்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தின்போது வைத்திலிங்கத்துக்கு எதிராக கர்ஜித்தார் ஆர்.காமராஜ் தற்போது அவருக்கு எதிராக அடக்கி வாசிக்கத் தொடங்கியிருக்கிறார். அதனால்தான் ஒரத்தநாட்டில் கூட்டத்தை நடத்தவில்லை” என்றனர்.

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

இது குறித்து எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ``அண்ணா பிறந்தநாளில் ஒரத்தநாட்டில் உள்ள அண்ணாசிலைக்கு வைத்திலிங்கம் தரப்பினர் ஆளே இல்லாததால் மாலை அணிவிக்கவில்லை. நாங்க நூறு பேருக்கு மேல் பேரணியாகச் சென்று மாலை அணிவித்தோம். வைத்திலிங்கம் பொறுப்பாளராக இருக்கும்போதே நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து ஒரே கூட்டமாக நடத்தியிருக்கிறார். மாவட்டச் செயலாளர் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் இரண்டு தொகுதிகளுக்கும் ஒரே கூட்டமாக நடத்துகிறோமே தவிர வைத்திலிங்கத்தின் சொந்தத் தொகுதி என்பதால் இல்லை” என்றனர்.