Published:Updated:

``அசைவம் சாப்பிட்டுவிட்டு கோயிலுக்குச் சென்றேனா?” - பாஜக குற்றச்சாட்டும், சித்தராமையா பதிலும்

சித்தராமையா ( Twitter/@siddaramaiah )

``முக்கியப் பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப இது போன்று கடவுளை முன்வைத்து அரசியல் செய்கிறார்கள்.” - சித்தராமையா

``அசைவம் சாப்பிட்டுவிட்டு கோயிலுக்குச் சென்றேனா?” - பாஜக குற்றச்சாட்டும், சித்தராமையா பதிலும்

``முக்கியப் பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப இது போன்று கடவுளை முன்வைத்து அரசியல் செய்கிறார்கள்.” - சித்தராமையா

Published:Updated:
சித்தராமையா ( Twitter/@siddaramaiah )

ஆகஸ்ட் 18-ம் தேதி குடகுக்குச் சென்ற சித்தராமையா, கொட்லிப்பேட்டையில் உள்ள பசவேஸ்வரா கோயிலுக்கு அசைவ உணவு சாப்பிட்டுவிட்டுச் சென்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பாஜக தரப்பு கடுமையாகக் கண்டனம் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக பா.ஜ.க-வின் மூத்த எம்.எல்.ஏ பசங்கவுடா பாட்டீல் யத்னால், ``தேர்தல் வருவதால் கோயிலுக்குச் செல்வதுபோல நாடகம் நடத்துகிறார் சித்தராமையா. அவருக்கு தைரியம் இருந்தால் பன்றி இறைச்சி சாப்பிட்டுவிட்டு பள்ளிவாசலுக்குச் செல்ல சொல்லுங்கள் பார்க்கலாம்... ” என விமர்சித்திருந்தார்.

சித்தராமையா
சித்தராமையா

பா.ஜ.க-வின் விமர்சனத்துக்கு பதிலளித்த கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா, ”இறைச்சி சாப்பிடுவது பிரச்னையா... அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட உணவுப் பழக்கம். நான் இறைச்சி மற்றும் சைவ உணவு இரண்டையும் சாப்பிடுகிறேன். அது எனது பழக்கம். சிலர் இறைச்சி சாப்பிடுவதில்லை. ஆனால் அதைச் சாப்பிடுபவர்களை நான் எதிர்க்கவில்லை. அது அவர்களின் உணவுப் பழக்கம். சிலர் இறைச்சி சாப்பிட்டுவிட்டு கோயிலுக்குச் செல்கிறார்கள். பலர் சாப்பிடாமல் செல்கிறார்கள். பல இடங்களில் தெய்வங்களுக்கு இறைச்சி பிரசாதமாக வழங்கப்படுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உண்மையைச் சொன்னால் அன்று கோழிக்கறி வீட்டில் இருந்தாலும், இறைச்சி சாப்பிடாமல் மூங்கில் கறி மற்றும் அக்கி ரொட்டியை மட்டுமே சாப்பிட்டுவிட்டுத்தான் கோயிலுக்குச் சென்றேன்.

பாஜக
பாஜக

முக்கியப் பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப இது போன்று கடவுளை முன்வைத்து அரசியல் செய்கிறார்கள். அதற்காகச் சர்ச்சைகளைத் தொடர்ந்து உருவாக்க முயல்கிறார்கள். ஏனென்றால், பா.ஜ.க-வுக்கு அதைவிட வேறு வேலை இல்லை” எனத் தெரிவித்தார்.