Election bannerElection banner
Published:Updated:

கொரோனாவால் மரணித்தவரின் உடல் கிடக்கும்போது உற்சாகமாகக் கையசைத்தாரா மோடி?! - உண்மை என்ன? #Factcheck

மோடி
மோடி

சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா தினம் தினம் ஓர் புதிய உச்சத்தைத் தொட்டுவருகிறது.

கொரொனா வைரஸால் மரணித்தவரின் உடல் ஆம்புலன்ஸ் அருகே கிடக்கும்போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உற்சாகமாகக் கையசைக்கும் படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டுவருகிறது.

சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா தினம் தினம் ஓர் உச்சத்தைத் தொட்டுவருகிறது.

மோடி
மோடி

இதன் காரணமாக நரேந்திர மோடி அரசு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகிவருகிறது. அவருக்கு எதிராக தினம் ஒரு ஹேஷ்டேக் சமூக ஊடகங்ளில் டிரெண்டாகிவருகிறது. இப்படியான சூழலில் இந்தப் புகைப்படத்தைப் பலர் பகிர்ந்து, நீரோ மன்னனுடன் மோடியை ஒப்பிட்டுவருகின்றனர்.

இந்தியாவின் இந்தநிலைக்கு மோடி அரசின் தவறான செயல்பாடுகளே காரணம் என்றும், இந்தச்ச் சூழலை மத்திய அரசு சரியாகக் கையாளாமல் விட்டுவிட்டு, இப்போது அனைத்து பொறுப்புகளையும் துறந்து மாநில அரசுகளிடம் அனைத்து பொறுப்புகளையும் திணிப்பது நியாயமில்லை என்றும் இணையவாசிகள் கடுமையாகக் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.

இப்படியான சூழலில்தான் இந்தப் புகைப்படம் வைரலாகிவருகிறது.

இந்தப் புகைப்படம் மார்ப் செய்யப்பட்டது. வெவ்வேறு இடங்களில் எடுத்த இரண்டு புகைப்படங்களை போட்டாஷாப் செய்து, ஒன்றாக இணைத்து இந்தப் புகைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

மோடி
மோடி

முதல் புகைப்படம் மேற்கு வங்கத் தேர்தல் பிரசாரத்தின்போது மார்ச் மாதத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. அந்தப் புகைப்படம் டெலிகிராஃப் நாளிதழில் வெளியாகியுள்ளது.

புகைப்படம்
புகைப்படம்

மற்றொரு புகைப்படம் வேறோர் இடத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் எடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு காலகட்டங்களில் பலர் இதைப் பகிர்ந்திருக்கிறார்கள். இரண்டையும் இணைத்துத்தான் இப்போது பலர் பகிர்ந்துவருகின்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு