Published:Updated:

`மாலை, சால்வை வேண்டாம்; வண்டியில ஏறுங்க..!’ - கட்சி நிர்வாகிகளைத் தவிர்க்கிறாரா ராஜேந்திர பாலாஜி?

ராஜேந்திர பாலாஜி
News
ராஜேந்திர பாலாஜி

`ஏன் திருச்சி நிர்வாகிகளைச் சந்திக்க மறுக்க வேண்டும்?’ என்கிற கேள்விதான் தற்போது திருச்சி அ.தி.மு.க-வில் பேசுபொருளாக மாறியிருக்கிறது

திருச்சி சிறை வளாகத்திலிருந்து வெளியில் வந்த ராஜேந்திர பாலாஜிக்கு அவரின் ஆதரவாளர்கள் சால்வை அணிவித்தபோது, ``ஏங்க அதெல்லாம் வேணாங்க. வண்டியில ஏறுங்க போவோம்’’ எனக் கடுகடுத்தபடியே காரில் அமர்ந்து சென்றாராம். கடைசிவரையிலும் திருச்சி அ.தி.மு.க நிர்வாகிகளை ராஜேந்திர பாலாஜி சந்திக்கவில்லை என்கிறார்கள்.

ஹோட்டல்
ஹோட்டல்

கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவினில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி 3.1 கோடி ரூபாயை மோசடி செய்ததாக ரவீந்திரன் என்பவர் அளித்த புகாரில் விருதுநகர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். இது மட்டுமல்லாமல் மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது மேலும் புகார்கள் பதிவாகின.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த நிலையில், தலைமறைவான ராஜேந்திர பாலாஜியைத் தேடிவந்த தனிப்படையினர், கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் அவரைக் கைதுசெய்தனர். ஸ்ரீவில்லிப்புத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், மதுரை மத்தியச் சிறைக்கு ராஜேந்திர பாலாஜி அழைத்துவரப்பட்டார்.

ஹோட்டலிருந்து வெளியே வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
ஹோட்டலிருந்து வெளியே வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பின்னர் நிர்வாகக் காரணங்களுக்காகத் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேந்திர பாலாஜி கைதுசெய்யப்பட்ட விதம் மற்றும் அவரின் வழக்கறிஞர் இல்லத்தில் தமிழகக் காவல்துறை நடத்திய சோதனை குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ``மோசடிப் புகார் தொடர்பாக இதுவரை ராஜேந்திர பாலாஜிக்கு தமிழக காவல்துறை சம்மன் எதுவும் வழங்கவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முன்ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணை செய்யும் முன்னரே அவரைக் கைதுசெய்தது நீதிமன்ற அவமதிப்பாகும்” எனவும் வாதிட்டார். இதைத் தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி நான்கு வார இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், `விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். பாஸ்போர்ட்டை சம்பந்தப்பட்ட நீதித்துறை நடுவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

ராஜேந்திர பாலாஜி கைது
ராஜேந்திர பாலாஜி கைது

விருதுநகரைவிட்டு வெளியே செல்லக் கூடாது’ என்கிற ஒருசில நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் திருச்சி மத்தியச் சிறையிலிருந்து இன்று காலை 7:25 மணியளவில் வெளியே வந்தார் ராஜேந்திர பாலாஜி. அப்போது அவரின் ஆதரவாளர்களான ராஜவர்மனும் மற்றும் சிலரும் சிறை வாசலில் காத்திருந்தனர்.

முன்னாள் அமைச்சர்
முன்னாள் அமைச்சர்

சிறை வளாகத்திலிருந்து வெளியில் வந்த அவருக்கு நிர்வாகிகள் மாலை, சால்வை அணிவித்தனர். `அதெல்லாம் வேணாங்க. வண்டியில ஏறுங்க போவோம்' என்று காரில் ஏறி அமர்ந்திருக்கிறார் ராஜேந்திர பாலாஜி. அப்போது அவரது முகம் இறுக்கமாகவே காணப்பட்டதாம்.

அங்கிருந்து நேராகத் திருச்சி மன்னார்புரம் பகுதியிலுள்ள தனியார் ஹோட்டலுக்குச் சென்று, சிறிது நேரம் ஓய்வு எடுத்த பிறகு காலை உணவு சாப்பிடுகிறார் என்கிற தகவல் திருச்சி அ.தி.மு.க-வினருக்குத் தெரிந்ததும் அங்கு கூட்டம் கூடியது. அங்கிருந்து அவர் ஒன்பதரை மணி அளவில் விருதுநகர் மாவட்டத்துக்குக் காரில் ஏறிப் புறப்பட்டார். அப்போது கட்சியினரைப் பார்த்துக் கும்பிட்டபடியே, `அண்ணே வரட்டுமாண்ணே’ என்று மட்டும் சொல்லியபடி கிளம்பினார். எப்போதும் சிரித்த முகத்துடன் பவனிவரும் ராஜேந்திர பாலாஜியின் முகம் கடுகடுத்தபடியே இருந்தது என்கின்றனர் அவரின் ஆதரவாளர்கள்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

திருச்சி அ.தி.மு.க-வினரைப் புறக்கணிக்க என்ன காரணம் என்று விசாரித்தோம். ``சிறையிலிருந்த ராஜேந்திர பாலாஜி வழக்கறிஞரைத் தவிர கட்சி நிர்வாகிகளைச் சந்திப்பதைத் தவிர்த்துவந்தார். குறிப்பாக, முன்னாள் திருச்சி அமைச்சர்களான வெல்லமண்டி நடராஜன், ப.குமார் உள்ளிட்டோர் அவரைச் சந்திக்கப் பலமுறை முயன்றனர். வழக்கறிஞர் அணியினர் தரப்பில் சிறையில் பார்க்க மனு போட்டிருக்கிறார்கள். ஆனால் அவர் மறுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். ஏன், எதற்காகத் திருச்சியிலுள்ள நிர்வாகிகளைச் சந்திக்க மறுக்க வேண்டும் என்கிற கேள்விதான் தற்போது திருச்சி அ.தி.மு.க-வில் பேசுபொருளாக மாறியிருக்கிறது” என்கிறார்கள்