Published:Updated:

உள்ளாட்சி ரேஸ்: இரு பிரிவாக அதிமுக; அமைச்சரின் உறுதி! - திண்டுக்கல் மாநகராட்சி கள நிலவரம்

திண்டுக்கல் மாநகராட்சி

கடந்த 2014-இல் திண்டுக்கல் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டபோது அப்போதிருந்த நகராட்சி சேர்மன், மேயராகவும், பிறர் அந்தந்த வார்டு கவுன்சிலராகவும் தேர்வாகினர். இதனால் திண்டுக்கல் மாநகராட்சிக்கு முதல்முறையாக மேயர், தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளார். 

உள்ளாட்சி ரேஸ்: இரு பிரிவாக அதிமுக; அமைச்சரின் உறுதி! - திண்டுக்கல் மாநகராட்சி கள நிலவரம்

கடந்த 2014-இல் திண்டுக்கல் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டபோது அப்போதிருந்த நகராட்சி சேர்மன், மேயராகவும், பிறர் அந்தந்த வார்டு கவுன்சிலராகவும் தேர்வாகினர். இதனால் திண்டுக்கல் மாநகராட்சிக்கு முதல்முறையாக மேயர், தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளார். 

Published:Updated:
திண்டுக்கல் மாநகராட்சி

திண்டுக்கல் மாநகராட்சி

தமிழகத்தில், மதுரை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து போதுமான வளர்ச்சியை அடைந்தது. ஆனால் தமிழகத்தில் 11-வது மாநகராட்சியாக 2014-ல் திண்டுக்கல் தரம் உயர்த்தப்பட்ட போதும், தற்போது வரை எவ்வித வளர்ச்சியும் அடையவில்லை. கடந்த 8 ஆண்டுகளாகியும் நகராட்சி தரத்திலேயே திண்டுக்கல் இருந்து வருகிறது. தண்ணீர், சாலை, சாக்கடை கட்டமைப்பு, பூங்கா என மக்களின் அடிப்படை வசதிகளை கூட போதிய அளவில் செய்து கொடுக்கப்படாமல் உள்ளது.

அமைச்சர் ஐ.பெரியசாமி
அமைச்சர் ஐ.பெரியசாமி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திண்டுக்கல் மாவட்டம் அதிமுகவின் கோட்டையாக இருந்ததாக கூறப்பட்ட காலத்தில் தான், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போதே திண்டுக்கல்லில் முக்கிய அமைச்சர்கள் இருந்தபோதிலும், திண்டுக்கல் மாநகராட்சி கண்டுகொள்ளப்படாமலே இருந்து வந்தது.

திண்டுக்கல் மாநகராட்சியில் சொத்து வரி, வீட்டு வரி ஆகியவற்றின் மூலம் தான் அதிக வருவாய் கிடைக்கிறது. மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள், தண்ணீர் வரி உள்ளிட்டவைகளிலும், தொழிற்சாலைகள் மூலம் கிடைக்கும் வருவாய் என்பது மிகவும் குறைவானது. இதனால் மாநகராட்சிக்கு 60 கோடிக்கு கடன் உள்ளது. 35 கோடி வரை வரி வசூல் பாக்கி இருக்கிறது.

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் மிகவும் குறைவான வருவாய் பெறக் கூடிய மாநகராட்சி என்ற பெயர் திண்டுக்கல்லுக்கு உள்ளது. ஆனால் திண்டுக்கல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட காலத்தில், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டட பிற மாநகராட்சிகள் தற்போது நல்ல வளர்ச்சியை அடைந்து வருகிறது. ஆனால் திண்டுக்கல் மாநகராட்சியில் ஒப்பந்ததாரர்களுக்கு முறையாக பணபட்டுவாடா செய்யப்படாததால், சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கான பணிகள் கூட தேக்கமடைந்துள்ளன.

திமுக வேட்பாளர்கள்
திமுக வேட்பாளர்கள்

கடந்த 2014-இல் திண்டுக்கல் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டபோது அப்போதிருந்த நகராட்சி சேர்மன், மேயராகவும், பிறர் அந்தந்த வார்டு கவுன்சிலராகவும் தேர்வாகினர். இதனால் திண்டுக்கல் மாநகராட்சிக்கு முதல்முறையாக மேயர், தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளார்.

இந்திராணி
இந்திராணி

திண்டுக்கல் மாநகராட்சியில் 48 கவுன்சிலர் பதவிகளுக்கு மொத்தம் 275 பேர் போட்டியிடுகின்றனர். திண்டுக்கல்லில் உள்ள ஆத்தூர் தொகுதி எம்.எல்.ஏ-வும், கூட்டுறவுத்துறை அமைச்சரின் சொந்த ஊரான திண்டுக்கல்லில், மாநகராட்சியை திமுக கைப்பற்ற வேண்டும் என்ற உறுதியுடன் அமைச்சர் செயல்பட்டு வருகிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அமைச்சரின் மருமகள் மேயர் பதவிக்கு குறிவைத்து காத்திருந்த நிலையில், அமைச்சர் தனது மகளுக்கு சீட் வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை அரசியலில் ஈடுபடாமல் மில் தொழிலில் ஈடுபட்டிருந்த இந்திராணி என்பவருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது திண்டுக்கல் திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் இன்னும் மேயர் வேட்பாளர் இறுதி செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே திண்டுக்கல் நகராட்சியின் முன்னாள் சேர்மன் மருமகள், 6 ஆவது வார்டில் போட்டியிடும் சரண்யாவுக்கு மேயர் பதவி வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. துணைமேயர் பதவிக்கு திண்டுக்கல் நகரச் செயலாளர் ராஜப்பா பெயர் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

பொன்முத்து
பொன்முத்து

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் மேயர் மருதராஜ் மகள் பொன்முத்து 11 -வது வார்டில் போட்டியிட்டு மேயர் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளாராம். முன்னாள் அமைச்சர் சீனிவாசன் மகன் ராஜ்மோகன் துணைமேயர் வேட்பாளராகவும் ரேசில் இருக்கிறார்கள். தற்போது மருதராஜ் மட்டுமே அனைத்து செலவுகளை ஏற்க வேண்டும் என சீனிவாசன் கூறியதால், இருதரப்பாக பிரிந்து வேலை செய்யும் நிலை அதிமுக-வில் ஏற்பட்டுள்ளது. சீனிவாசன், தனது ஆதரவாளரான பெண் ஒருவரை மேயராக்கி, தனது மகனை துணைமேயராக்குவேன் எனக் கூறி வருகிறார். மருதராஜ் தனது மகளை மேயராக்கி, 8 ஆவது வார்டில் போட்டியிடும் தனது மகன் வீரமார்பனை துணைமேயராக்குவேன் என முட்டிக்கொண்டுள்ளாராம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கான உடன்படிக்கை ஏற்படுத்துவதற்காக பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும், இறுதியான முடிவுகள் எட்டப்படாததால் திண்டுக்கல் மாநகராட்சியில் அதிமுக இரு பிரிவாக செயல்பட்டு வருகிறது. இது திமுகவுக்கு சாதகமாகிவிடும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

இதற்கிடையே திமுக, அதிமுக மூத்த அரசியல்வாதிகள் மட்டுமில்லாது சேகர் ரெட்டி வரை தொடர்பில் இருக்கும் கோடீஸ்வரர் சர்வேயர் ரெத்தினம் 22 வயதான தனது இளையமகன் வெங்கடேஷை 17 ஆவது வார்டில் சுயேச்சையாக களம் இறக்கியுள்ளார். எந்த கட்சி அதிக இடங்களை பிடிக்கிறதோ அதற்கேற்றவாறு கொடுக்க வேண்டியதை கொடுத்து துணைமேயர் பதவியை தனது மகனுக்கு வாங்கி கொடுத்துவிட வேண்டும் என்பது அவரது திட்டமாக இருக்கிறதாம்.

சுயேட்சை வேட்பாளர்
சுயேட்சை வேட்பாளர்

திண்டுக்கல் மாநகராட்சி மேயர், துணைமேயர் பதவிகளுக்கு கடுமையான போட்டி நிலவியுள்ளது. பொதுவாக உள்ளாட்சி தேர்தலில் உள்ளூரில் செல்வாக்காக உள்ளவர், வேட்பாளர் சார்ந்த சமூகம் இதை வைத்தே வெற்றி தோல்வியை சொல்லிவிடக் கூடிய நிலை இருக்கிறது. மேலும் வைட்டமின் ப -வும் முக்கிய பங்கு வகிக்கிறது. கூட்டணி வாக்குகள் பிரிவதும், திமுக எதிர்ப்பு வாக்குகளை ஒரே இடத்தில் சேர்க்க முடியாமல் போனதும் அதிமுகவுக்கு மைனஸ். தனிப்பட்ட செல்வாக்கில் அதிமுக-வில் சிலர் வெற்றிப்பெற்றாலும், மாநகரை கைபற்றும் அளவுக்கு வலுவாக இல்லை. தற்போதைய நிலையில் திண்டுக்கல்லில் திமுக-வே முன்னிலையில் இருக்கிறதாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism