Published:Updated:

`முகக்கவசம் கிடைக்கலைனு யாரும் சொல்லக் கூடாது' - தி.மு.க-வினரைக் களமிறக்கிய ஐ.பி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பாதுகாப்புப் பொருள்கள் வழங்கும் ஐ.பெரியசாமி.
பாதுகாப்புப் பொருள்கள் வழங்கும் ஐ.பெரியசாமி.

கொரோனா தொற்று பாதித்துள்ள மாவட்டங்களில் முக்கிய இடத்தில் இருக்கிறது திண்டுக்கல். இந்தப் பகுதியில் தி.மு.க-வினர் பாதுகாப்பு பொருள்களை வழங்கி வருகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் மாநிலத்தில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. மாவட்டத்தில் நேற்றுவரை 45 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மாவட்டத்தில் கையுறை, முகக்கவசம் உள்ளிட்டவை கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாகச் சானிடைசர் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. அத்தியாவசிய பொருள்கள் வாங்க வீட்டைவிட்டு வெளியே வரும் பொதுமக்களில் பலர் முகக்கவசம் அணிவதில்லை.

பொருள்கள் வழங்கும் ஐ.பெரியசாமி
பொருள்கள் வழங்கும் ஐ.பெரியசாமி

இந்நிலையில், ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு, திண்டுக்கல்லில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்தது. மாவட்ட நிர்வாகமும் தேவையான நடவடிக்கைகளில் இறங்கியது. ஆனாலும், அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான உதவி சென்று சேர்வதில் சிக்கல் நீடித்தது. பல பகுதிகளில் அரசு மருத்துவமனைகளில் முறையான பாதுகாப்புக் கவசங்கள் மருத்துவப் பணியாளர்களுக்குக் கிடைக்கவில்லை. இந்நிலையில், தொகுதி மக்களுக்கான பாதுகாப்பு பொருள்கள் வழங்கும் பணியில் தி.மு.க-வினரை ஈடுபடுத்தி வருகிறார் தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி.

இதனால் தி.மு.க-வினர் உழவர் சந்தை, மார்க்கெட் எனப் பொதுமக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் இலவசமாக வழங்கி வருகிறார்கள். இந்நிலையில், திண்டுக்கல் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினரான ஐ.பெரியசாமி, கடந்த சில நாள்களாகத் தொகுதி முழுக்க வலம் வருகிறார். தனது சொந்தப் பணத்தில் தொகுதி மக்களுக்குத் தேவையான பாதுகாப்புப் பொருள்களை அளித்து வருகிறார். இதுவரை 30 லட்ச ரூபாய் வரை செலவு செய்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

பொருள்களை வழங்கும் ஐ.பெரியசாமி
பொருள்களை வழங்கும் ஐ.பெரியசாமி

நேற்று, ரெட்டியார் சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குச் சென்றவர், அங்குள்ள 24 கிராம ஊராட்சிகளுக்கு முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்ட 5 லட்சம் மதிப்பிலான பாதுகாப்புப் பொருள்களை, ஊராட்சி தலைவர்களிடம் வழங்கினார். இன்று ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குச் சென்றவர், 22 கிராம ஊராட்சிகளில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு 5 லட்ச ரூபாய் மதிப்பிலான முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்ட பொருள்களை ஊராட்சி தலைவர்களிடம் வழங்கினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது பேசியவர், ``மாநிலம் முழுவதும் கழகத் தோழர்கள், மக்களுக்காகப் பணியாற்றும்படி தி.மு.க தலைவர் தளபதி உத்தரவிட்டுள்ளார். கொரோனா தொற்று ஆரம்பித்தவுடனே மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு கவசங்களை முதலில் நாம்தான் வழங்கினோம்.

பொதுமக்களுக்கு முகக்கவசம் கொடுக்கும் தி.மு.க-வினர்.
பொதுமக்களுக்கு முகக்கவசம் கொடுக்கும் தி.மு.க-வினர்.

ஊராட்சிமன்றத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அவரவர் பகுதிகளில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள். முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு போய் மக்களுக்குக் கொடுங்கள்.

பயன்படுத்த வலியுறுத்துங்கள். இன்னும் பொருள்கள் தேவையென்றால் சொல்லுங்கள். வாங்கித் தருகிறேன். கிருமி நாசினி மூலம் கைகழுவி அதன் பிறகு சாப்பிடுமாறு, மக்களை வலியுறுத்துங்கள். தூய்மைப் பணியாளர்கள் இரவு பகல் பார்க்காமல் உழைக்கிறார்கள். சுகாதாரத்துறை, காவல்துறை, அரசு அதிகாரிகள் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள். அதேபோல், நீங்களும் கிராமம், கிராமமாகச் சென்று மக்களை சந்தித்து இந்தப் பொருள்களை வழங்க வேண்டும்'' என்றார்.

பொருள்கள் வழங்கும் ஐ.பி.செந்தில்குமார்
பொருள்கள் வழங்கும் ஐ.பி.செந்தில்குமார்

ஐ.பெரியசாமி, ஒவ்வொரு பகுதியாகச் சென்று பாதுகாப்புப் பணிகளைப் பார்வையிட்டு, உதவிகள் வழங்கி வருவதால் தி.மு.க-வினர் பலரும் முகக்கவசம், சானிடைசர், ஆதரவற்றவர்களுக்கு உணவு என உதவிக்கரம் நீட்டத் தொடங்கிவிட்டார்கள்.

பழநி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், தனி நபராகப் பழநி தொகுதியில் காரில் வலம் வருகிறார். நகராட்சி ஆணையர், வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி தலைவர்களைச் சந்தித்து சொந்தப் பணத்தில் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி வருகிறார். பழநியில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி வருகிறார்.

தி.மு.க கொறடா சக்கரபாணி
தி.மு.க கொறடா சக்கரபாணி

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க சட்டமன்ற கொறடாவுமான சக்கரபாணி ஒட்டன்சத்திரம் தொகுதியில் 10 லட்ச ரூபாய்க்கும் மேல் சொந்தப் பணத்தில் மக்களுக்குத் தேவையான பாதுகாப்பு பொருள்களை வழங்கி வருகிறார். திண்டுக்கல் எம்.பி வேலுச்சாமி, மருத்துவமனை பணியாளர்களுக்குத் தேவையான பாதுகாப்புப் பொருள்களை வழங்கினார்.

திண்டுக்கல் எம்.பி.வேலுச்சாமி
திண்டுக்கல் எம்.பி.வேலுச்சாமி

ஐ.பெரியசாமி தொடங்கி வைத்த பணியை, தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் மாவட்டம் முழுவதும் செய்து வருகிறார்கள். இதனால் பல பகுதிகளில் ஆளும்கட்சி தொண்டர்கள் கூடத் தி.மு.க-வினரின் செயலைப் பாராட்டி வருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு