Published:Updated:

தமிழக அரசியலில் ஈழ அரசியல் மூக்கை நுழைக்கக் கூடாது! - ஆவேச அமீர்

அமீர்
பிரீமியம் ஸ்டோரி
அமீர்

‘கழகங்கள் இல்லாத ஆட்சி மாற்றம்’ என்று சொல்வது ஏமாற்று வேலை!

தமிழக அரசியலில் ஈழ அரசியல் மூக்கை நுழைக்கக் கூடாது! - ஆவேச அமீர்

‘கழகங்கள் இல்லாத ஆட்சி மாற்றம்’ என்று சொல்வது ஏமாற்று வேலை!

Published:Updated:
அமீர்
பிரீமியம் ஸ்டோரி
அமீர்
இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், ஈழ ஆதரவாளர், அரசியல் ஆர்வலர்... என அமீருக்குப் பல முகங்கள்! அண்மையில், ‘800’ திரைப்படச் சர்ச்சையில், தமிழீழ ஆதரவாளர் களோடு இணைந்து ‘விஜய் சேதுபதி இந்தப் படத்தில்நடிக்க வேண்டாம்’ என்று காத்திரமாகக் குரல் எழுப்பினார். இன்னும் அந்தச் சர்ச்சைகள் தீராத நிலையில், அமீரை நேரில் சந்தித்தேன்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“இந்திய கிரிக்கெட் அணியிலேயே, ஒரு தமிழர் நுழைந்து சாதிக்க முடியாத இன்றையச் சூழலில், இலங்கையின் மலையகத் தமிழரான முத்தையா முரளிதரனின் சாதனையைப் படம் எடுக்கவிடாமல் தடுப்பது நியாயம்தானா?’’

“தமிழர் மட்டுமல்ல... இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகமே இங்கே கிரிக்கெட்டில் நுழைய முடியாது என்பதுதான் உண்மை. அதற்கான காரணம், இங்கே இருக்கக்கூடிய மேலாதிக்க சாதி மனநிலை. ஆனால், இந்த அரசியலையும், முத்தையா முரளிதரனின் அரசியலையும் ஒன்றாகப் பார்க்க முடியாது. தோனியின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுத்தார்கள். தமிழர் அல்லாத அவரது படத்தை நாமும் கொண்டாடினோம். காரணம், தோனி எந்த அரசியல் நிழலிலும் இல்லை. ஆனால், முத்தையா முரளிதரன் இப்போதும் தவறான ஓர் அரசியல் நிழலில் நின்றுகொண்டிருப்பவர். அவரைப் பற்றித் தமிழ் நடிகர் ஒருவரைவைத்து, தமிழிலேயே படம் எடுப்பதுதான் பிரச்னை. ‘எங்கள் கையைக்கொண்டே, எங்கள் கண்ணைக் குத்தாதீர்கள்’ என்றுதான் நாங்கள் சொல்கிறோம்!’’

தமிழக அரசியலில் ஈழ அரசியல் மூக்கை நுழைக்கக் கூடாது! - ஆவேச அமீர்

“இலங்கையில், அடித்தட்டு நிலையிலுள்ள மலையகத் தமிழர் குடும்பத்திலிருந்து வந்து கிரிக்கெட் உலகில், உச்சம்தொட்ட சாதனையாளராக முத்தையா முரளிதரனை நீங்கள் பார்க்கவில்லையா?’’

“சரி... அந்தப் படத்தில் மலையகத் தமிழர்கள், ஈழத் தமிழர்கள் எப்படியெல்லாம் யாரால் பாதிக்கப்பட்டுவருகிறார்கள் என்பதைச் சொல்வாரா? விளையாட்டில் ஏன் அரசியல் என்கிறீர்கள்... ‘தமிழ்நாட்டில் வந்து இலங்கை கிரிக்கெட் அணி ஆடக் கூடாது’ என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சட்டமன்றத்திலேயே தடை கொண்டுவந்தாரே... விளையாட்டிலும் இங்கே அரசியல் இருக்கிறது என்பது புரிகிறதுதானே!

30 வருடப் போராட்டத்தை, சர்வதேச உதவியோடு முடிவுக்குக் கொண்டுவந்துவிட்ட திருப்தியில் தன் நிலத்தைத் தொட்டுக் கும்பிடுகிறார் ராஜபக்‌ஷே. அதே தினத்தில், ‘இன்றைக்குத்தான் நான் நிம்மதியாகத் தூங்குவேன்’ என்கிறார் முத்தையா முரளிதரன். இவர் யாரென்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்!’’

“இதே குற்றச்சாட்டை முன்வைத்து சில வருடங்களுக்கு முன்னர் எதிர்க்கப்பட்ட ‘லைகா’ நிறுவனம் தற்போதும் தமிழில் படம் தயாரித்துவருகிறதே..?’’

“சுபாஷ்கரனை நியாயமானவர் என்று நான் சொல்லவில்லை. ஆனால், ‘நான் ராஜபக்‌ஷே ஆதரவாளர் இல்லை; ஈழத்துக்கு ஆதரவானவன்தான்’ என்று பொதுவெளியிலேயே சுபாஷ்கரன் வெளிப்படையாகச் சொல்கிறாரே... 2009-ல் இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலைக்குத் தீர்வு கேட்டு இன்னும் நாங்கள் ஐ.நா மன்றத்தில் காத்திருக்கிறோம். இந்தச் சூழலில், முத்தையாவின் சாதனையை உயர்த்திப் படம் எடுக்கிறோம்’ என்று சொல்வதன் பின்னணியிலுள்ள அரசியலைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.”

“சமீபகாலமாக ‘தமிழ்த் தேசியம்’ என்ற பெயரில், இளைஞர்களை மிகை உணர்ச்சியாளர்களாக மாற்றியதுதான் தமிழ்த் தேசிய அரசியலின் சாதனையா?’’

“எல்லாக் காலகட்டத்திலேயுமே உணர்ச்சி அரசியல் இருந்துதான் வருகிறது. சுதந்திரப் போராட்டமே உணர்ச்சியின் அடிப்படையில் எழுந்த போராட்டம்தானே... அடி வாங்குகிறவன் கோபமாகத்தான் பேசுவான். அதேசமயம் அதற்கும் ஒரு வரம்பு இருக்கிறது; நாகரிகம் இருக்கிறது!”

தமிழக அரசியலில் ஈழ அரசியல் மூக்கை நுழைக்கக் கூடாது! - ஆவேச அமீர்

“கல்வி சார்ந்த இட ஒதுக்கீட்டு உரிமைகள் பறி போய்க்கொண்டிருக்கும் இந்தச் சூழலில், ஒரு சினிமாவை இவ்வளவு பெரிய பிரச்னையாக்குவதன் பின்னணி அரசியல் என்ன?’’

“நியாயமான கேள்வி. தமிழ்நாட்டின் அடையாளமாக இருக்கக்கூடிய அண்ணா பல்கலைக்கழகப் பிரச்னை, மருத்துவப் படிப்பில் மறுக்கப்படும் இட ஒதுக்கீடு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 % இட ஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்னைகளைத் தாண்டி ‘800’ படத்தைப் பற்றி இவ்வளவு விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லைதான். நான்கூட இட ஒதுக்கீடு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுத்துத்தான் பேசுகிறேன். ஆனால், ஊடகங்கள் ‘800’ படத்தைப் பற்றிய செய்தியை மட்டும் பெரிதுபடுத்துகிறார்கள். இதன் பின்னணியில் ‘டி.ஆர்.பி’ எனும் அரசியல்தான் இருக்கிறது.’’

“ `தமிழ்நாட்டு அரசியலில், தி.மு.க-வுக்கு எதிராக ஈழ விவகாரத்தை முன்னிறுத்தி, திட்டமிட்டு அரசியல் செய்யும் போக்கு தமிழ்த் தேசியவாதிகளிடத்தில் இருக்கிறது’ என்ற குற்றச்சாட்டை எப்படி மறுப்பீர்கள்?’’

“நான் அரசியல் ஞானி கிடையாது. ஒரு சாமானியனாக என் அரசியல் பார்வையில் ஈழ அரசியலையும், தமிழக அரசியலையும் ஒன்றுபடுத்திப் பார்ப்பது என்றைக்குமே தமிழக மக்களுக்குப் பயனளிக்காது. தொப்புள்கொடி உறவுகளுக்கு அநீதி நிகழும்போது, அதைக் கைகட்டி வேடிக்கை பார்க்கும் சமூகமாக நாம் இருக்கக் கூடாது. அதேநேரம், ஈழ அரசியல் வந்து நமது தமிழக அரசியலுக்குள் மூக்கை நுழைப்பது தேவையற்றது!’’

“இந்தக் கருத்து குறித்து உங்கள் நண்பர் சீமானோடு விவாதித்திருக்கிறீர்களா?’’

“இருவரும் பலமுறை நேரிலேயே விவாதித்திருக்கிறோம். பல நேரங்களில் அவரோடு கைகோத்து நிற்பவன் நான். முரண்படுகிற விஷயங்களில் முரண்பட்டுத்தான் நிற்பேன். அதுதான், இன்னும்கூட நாங்கள் ஒரே அணியாக இணைந்து பயணிக்காததற்குக் காரணம். தி.மு.க. - அ.தி.மு.க ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகள் மீதும் ஊழல், வாரிசு அரசியல், மத்திய அரசின் கைப்பாவையாக இருப்பது போன்ற குற்றச்சாட்டுகளை நானும் முன்வைக்கிறேன். ஆனாலும், இந்த இரண்டு கட்சிகளால் தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையுமே ஏற்படவில்லை என்று சொல்வதும், ‘கழகங்கள் இல்லாத ஆட்சி மாற்றம்’ என்று சொல்வதும் ஏமாற்று வேலை!’’

“ `பா.ஜ.க-வுக்கு எதிராகப் பேசும் திரைப் பிரபலங்களுக்கு பா.ஜ.க அழுத்தம் கொடுக்கிறது’ என்கிறார் பீட்டர் அல்போன்ஸ். பா.ஜ.க-வுக்கு எதிராகத் தொடர்ந்து பேசிவருகிறீர்களே..?’’

“எனக்கு நேரடியாக எந்த அழுத்தமும் இதுவரை வரவில்லை. அப்படி நேரடியாக எனக்கு அழுத்தம் கொடுத்தால், அவர்களது ரேஞ்சுக்கே இன்னும் மோசமாக எதிர்ப்பேன் என்று அவர்களுக்கும் தெரியும். அதனால் மறைமுகமாக அழுத்தம் கொடுக்கிறார்கள். ‘ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளோடு அமீருக்குத் தொடர்பு’ என்று தொலைக்காட்சியில்கூட செய்தி போடுகிறார்கள். இந்த காமெடிகளையெல்லாம் பார்த்துச் சிரித்துக்கொண்டிருக்கிறேன்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism