Published:Updated:

“விஜயகாந்த் மனிதர்... ரஜினி வியாபாரி... கமல் மனசாட்சியற்றவர்!”

எம்ஜிஆர் நம்பி
பிரீமியம் ஸ்டோரி
எம்ஜிஆர் நம்பி

- வெளுத்துக்கட்டும் எம்ஜிஆர் நம்பி

“விஜயகாந்த் மனிதர்... ரஜினி வியாபாரி... கமல் மனசாட்சியற்றவர்!”

- வெளுத்துக்கட்டும் எம்ஜிஆர் நம்பி

Published:Updated:
எம்ஜிஆர் நம்பி
பிரீமியம் ஸ்டோரி
எம்ஜிஆர் நம்பி
கோடம்பாக்கத்திலிருந்து கோட்டைக்கு வண்டியேறும் எல்லோருமே, ‘நானும் எம்.ஜி.ஆர் வாரிசுதான்’ என்று வடிவேலு பாணியில் கிளம்ப... கறுப்பு, சிவப்பு, பச்சை, ரோஸ் எம்.ஜி.ஆர்-களால் தமிழக அரசியலே ட்ராஃபிக் ஜாமில் சிக்கித் தவிக்கிறது. இந்தநிலையில், ‘அம்மா பேரவை’யின் மாநில துணைச்செயலாளராக இருந்தவரும், ‘அனைத்திந்திய எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்றக் கழக’ பொதுச்செயலாளரும், திரைப்பட இயக்குநருமான எம்ஜிஆர் நம்பியைச் சந்தித்தோம்...
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘எம்.ஜி.ஆருக்கும் உங்களுக்குமான தொடர்பு என்ன?’’

‘‘சிறு வயதிலிருந்தே நான் எம்.ஜி.ஆர் ரசிகன். அ.தி.மு.க-வில் இருந்த நான், 1973-ல் திண்டுக்கல் இடைத்தேர்தலின்போது தி.மு.க-வினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டேன். ஜெயலலிதா இறந்த பிறகு, கட்சியைவிட்டு வெளியேறி ‘அனைத்திந்திய எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்றக் கழக’த்தை ஆரம்பித்தேன். எம்.ஜி.ஆர் போன்று மக்களுக்கான நல்லாட்சியை வழங்க வேண்டும் என்பதுதான் என் நோக்கம்!’’

விஜயகாந்த், கமல், ரஜினி
விஜயகாந்த், கமல், ரஜினி

‘‘ஏற்கெனவே திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்திருக்கும் நடிகர்களும் ‘எம்.ஜி.ஆர் ஆட்சி கொடுப்பேன்’ என்கிறார்களே..?’’

‘‘எம்.ஜி.ஆர் என்ற பெயரைப் பயன்படுத்த, அ.தி.மு.க-வின் ஒன்றரைக் கோடி தொண்டர்களுக்குத்தான் உரிமை இருக்கிறது.

15 வருடங்களுக்கு முன்பே விஜயகாந்த், ‘கறுப்பு எம்.ஜி.ஆர்’ என்ற அடைமொழியோடு அரசியலுக்குள் வந்தார். கொடைவள்ளலாக இருந்த அவர் நல்ல மனிதர். அவருக்கு எம்.ஜி.ஆர் பெயரை உச்சரிக்கத் தகுதி இருக்கிறது. ஆனால், ‘நான் எம்.ஜி.ஆர் ஆட்சி அமைப்பேன்’ என்கிறார் ரஜினி; ‘மடியில் தவழ்ந்தவன்’ என்கிறார் கமல். இவர்களுக்கெல்லாம் எம்.ஜி.ஆர் பெயரை உச்சரிக்கவே தகுதி கிடையாது!’’

‘‘ரஜினிகாந்த் ஏன் எம்.ஜி.ஆர் பெயரைப் பயன்படுத்தக் கூடாது?’’

‘‘தான் சம்பாதித்த சொத்துகளையெல்லாம் தமிழக மக்களுக்கே வாரிவழங்கியவர் எம்.ஜி.ஆர். ஆனால், ரஜினியோ தமிழ்நாட்டைத் தவிர்த்து, வெளி மாநிலங்களில் பினாமி பெயர்களில் பிசினஸ் செய்துகொண்டிருப்பவர். அந்தவகையில் ரஜினி ஒரு வியாபாரிதான்.

எம்.ஜி.ஆர் வீட்டுக்குச் செல்பவர்கள், சாப்பிடாமல் வெளியே வர முடியாது என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால், தன் மகள் கல்யாணத்தின்போது ரசிகர்களுக்கு விருந்து வைக்கப்போவதாகச் சொல்லிவிட்டு ஏமாற்றியவர்தான் ரஜினி.

அது மட்டுமல்ல... சிஸ்டம் சரியில்லை என்று சொல்கிற ரஜினிகாந்தின் சிஸ்டமே சரியில்லையே! அவரது கல்யாண மண்டபத்துக்கான சொத்து வரி ஆறு லட்சம் ரூபாயைக்கூட கட்ட முடியவில்லை என்று கோர்ட்டுக்குப் போகிறார். கோர்ட் கண்டித்த பிறகும், ‘தவணை முறையில் கட்டலாமா’ என்றெல்லாம் கேட்கிறார். அசிங்கமாக இல்லையா? ரஜினியின் மனைவி நடத்திவரும் ஆஸ்ரம் ஸ்கூலில் வாடகை பாக்கி, அங்கிருக்கும் ஊழியர்களுக்குச் சம்பள பாக்கி என்றெல்லாம் புகார் வருகிறது. இவர் சிஸ்டத்தை மாற்றுவேன் என்றால், அதை யார் நம்புவார்கள்?’’

‘‘தமிழருவி மணியன் போன்ற அரசியல் அனுபவம் மிகுந்தவர்களின் வழிகாட்டுதலில்தானே அரசியலுக்குள் வருகிறார் ரஜினி?’’

‘‘தமிழருவி மணியனுக்கு ‘தமிழருவி’ என்ற அடைமொழியைக் கொடுத்தவர் பெருந்தலைவர் காமராஜர். இவர் ‘ரஜினி, எம்.ஜி.ஆர் ஆட்சி தருவார்’ என்று சொல்கிறார். காந்தி பெயரில் இயக்கம் நடத்திக்கொண்டும், காமராஜர் தந்த பட்டத்தைப் பெயரில் வைத்துக்கொண்டும் இருப்பவர், ‘ரஜினி, காமராஜர் ஆட்சியைத் தருவார்’ என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்?’’

எம்ஜிஆர் நம்பி
எம்ஜிஆர் நம்பி

‘‘அ.தி.மு.க தலைமை ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ்., ‘ரஜினியோடு கூட்டணி அமையலாம்’ என்கிறாரே?’’

‘‘ஓ.பி.எஸ் ஒரு சந்தர்ப்பவாதி. தர்மயுத்தம் நடத்தியபோது, ‘10 சதவிகித உண்மைகளைத்தான் வெளியே சொல்லியிருக்கிறேன்’ என்றார். ஆனால், இன்றுவரை விசாரணை கமிஷன் முன்னர் ஆஜராகவேயில்லை. மீதமுள்ள 90 சதவிகித உண்மைகளெல்லாம் என்னவாகின? ‘எடப்பாடி ஆட்சியை ஊழல் ஆட்சி’ என்றார். பின்னர் துணை முதல்வர் ஆனதும் அமைதியாகிவிட்டார். இப்படிப்பட்ட சந்தர்ப்பவாதி சொல்வதை யெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை!’’

‘‘சரி... எம்.ஜி.ஆர் பெயரை கமல்ஹாசன் பயன்படுத்திக்கொள்வதில் உங்களுக்கு என்ன பிரச்னை?’’

‘‘கமல்ஹாசன், ‘அரசியலில் நேர்மைதான் எங்கள் திட்டம்’ என்று சொல்கிறார். நேர்மைக்கும் அவருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ராயப்பேட்டை பெனிஃபிட் ஃபண்ட் நிறுவனத்தில் 16 கோடி ரூபாயைக் கடனாகப் பெற்று, ‘மருதநாயகம்’ படத்துக்கு பூஜை போட்டார். ஆனால், அந்தப் படம் எடுக்கப்படவே இல்லை. சில வருடங்களில் அந்த நிதி நிறுவனமே திவாலாகிவிட்டது. இங்கிலாந்து ராணியை அழைத்து வந்து பூஜை போட்ட வகையில், ஒரு கோடி ரூபாய் செலவாகியிருந்தாலும், மீதமுள்ள பணத்தையாவது அந்த நிதி நிறுவனத்துக்குச் செலுத்தினாரா கமல்? அடித்தட்டு மக்கள் சிறுகச் சிறுகச் சீட்டுப் பணம் செலுத்தி நடந்துகொண்டிருந்த அந்த நிறுவனம் திவாலாகிப்போனதற்கு கமலும் ஒரு காரணம்தானே!

இன்றைக்கு ‘வருமான வரியை ஒழுங்காகக் கட்டும் ஒரு சில நடிகர்களில் நானும் ஒருவன்’ என்கிறார் கமல். சம்பளப் பணமாக எவ்வளவு தொகையைக் கணக்கு காட்டி, வருமான வரி கட்டுகிறீர்கள் என்பதெல்லாம் எல்லோருக்குமே தெரிந்த ரகசியம்தானே! மனசாட்சியே இல்லாத இவர்தான், ‘நேர்மை’யைப் பற்றிப் பேசி காமெடி செய்கிறார்.

இன்றைக்கு இருக்கிற தலைவர்களில் எம்.ஜி.ஆர் ஆட்சியை அமைக்கும் தகுதி, எடப்பாடி பழனிசாமிக்கு ஓரளவு இருக்கிறது. மற்றபடி அரசியலுக்காக எம்.ஜி.ஆர் பெயரைத் தவறாகப் பயன்படுத்துகிறவர்களுக்கு எதிராக, வருகிற தேர்தலில் எங்கள் கட்சி பிரசாரம் செய்யும்!’’