Published:Updated:

ஒன் பை டூ: ‘தி.மு.க கொடுக்கும் ஆக்சிஜனிலேயே காங்கிரஸ் உயிர் வாழ்கிறது!’என்ற அண்ணாமலையின் கருத்து?

கரு.நாகராஜன், கு.செல்வப்பெருந்தகை
பிரீமியம் ஸ்டோரி
கரு.நாகராஜன், கு.செல்வப்பெருந்தகை

அண்ணாமலைக்கு அரசியல் பாலபாடம் தெரியவில்லை.

ஒன் பை டூ: ‘தி.மு.க கொடுக்கும் ஆக்சிஜனிலேயே காங்கிரஸ் உயிர் வாழ்கிறது!’என்ற அண்ணாமலையின் கருத்து?

அண்ணாமலைக்கு அரசியல் பாலபாடம் தெரியவில்லை.

Published:Updated:
கரு.நாகராஜன், கு.செல்வப்பெருந்தகை
பிரீமியம் ஸ்டோரி
கரு.நாகராஜன், கு.செல்வப்பெருந்தகை

கரு.நாகராஜன், பொதுச்செயலாளர், தமிழக பா.ஜ.க

“அண்ணாமலை சொன்னது முற்றிலும் சரியே. தேசிய அளவில் பார்த்தால், கட்சிக்கு ஒரு தலைவரைக்கூட நியமிக்க முடியவில்லை. பல மாநிலங்களில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் கட்சியைவிட்டே சென்றுவிட்டனர். இருக்கும் நிர்வாகிகளும் தலைமையை எதிர்த்து கடிதம் எழுதுகிறார்கள். குடியரசுத் தலைவர் வேட்பாளரைக்கூடத் தேர்வுசெய்ய முடியவில்லை அந்தக் கட்சியால். தமிழ்நாடு அளவில் பார்த்தோமேயானால், மூன்றாண்டுகள் முடிந்தும் மாநிலத் தலைவரை மாற்ற முடியாமல், கே.எஸ்.அழகிரிக்கு எக்ஸ்டென்ஷன் கொடுத்துவருகிறார்கள். மக்களுக்காக எந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-வும், எம்.பி-யும் பேசுவதே கிடையாது. விருதுநகர் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி-க்களின் தொகுதிகளில் ‘எம்.பி-யைப் பார்த்தே பல ஆண்டுகள் ஆகிவிட்டன’ என்கிறார்கள். தி.மு.க-வுடன் கூட்டணியில் இருப்பதால், மக்கள் பிரச்னைக்காக ஒரு போராட்டத்தைக்கூட காங்கிரஸ் நடத்தவில்லை. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தன்னை நம்புவதைவிட, தி.மு.க-வைத்தான் அதிகமாக நம்புகிறது. தி.மு.க தயவில்தான் 18 சீட்கள் ஜெயித்தனர். 2024 எம்.பி தேர்தலுக்கு, ‘முன்புபோல சீட்களை எதிர்பார்க்க வேண்டாம்’ என்று தி.மு.க தலைமை இப்போதே சொல்லிவிட்டதாகத் தெரிகிறது. அப்படியிருந்தும், கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாத குறையாக எவ்வளவு அசிங்கப்படுத்தினாலும் தி.மு.க-வுடன் ஒட்டிக்கொண்டிருப்பார்களே தவிர, வெளியேற மாட்டார்கள். தமிழ்நாடு பா.ஜ.க உள்ளாட்சித் தேர்தலில் தனித்துக் களம் கண்டதுபோல, காங்கிரஸ் தனித்து நின்றால்தான் அதன் செல்வாக்கு தெரியும். அதுவரை காங்கிரஸ் பலவீனமான கட்சிதான்!”

ஒன் பை டூ: ‘தி.மு.க கொடுக்கும் ஆக்சிஜனிலேயே காங்கிரஸ் உயிர் வாழ்கிறது!’என்ற அண்ணாமலையின் கருத்து?
ஒன் பை டூ: ‘தி.மு.க கொடுக்கும் ஆக்சிஜனிலேயே காங்கிரஸ் உயிர் வாழ்கிறது!’என்ற அண்ணாமலையின் கருத்து?

கு.செல்வப்பெருந்தகை, சட்டமன்றக்குழுத் தலைவர், காங்கிரஸ்

“அண்ணாமலையின் கருத்தை முற்றிலும் மறுக்கிறேன். எத்தனையோ அரசியல் கட்சிகள் நாட்டில் இருக்கின்றன. ஆனால், மக்களை மத, இன, சாதிரீதியாகப் பிரித்து, பிளவுபடுத்த நினைக்கிற ஒரே கட்சி பா.ஜ.க-தான். அதற்குப் பல முன்னுதாரணங்களைச் சொல்லலாம். காங்கிரஸ் இந்த நாட்டு விடுதலைக்காகப் போராடிய கட்சி. சீட்டுக்காகவும் நோட்டுக்காகவும் அலைகிற பா.ஜ.க-வுக்கு, காங்கிரஸ் உள்விவகாரங்களில் தலையிட உரிமையில்லை. எந்த ஒரு கட்சிக்கும், இன்னொரு கட்சி ஆக்சிஜன் கொடுக்கத் தேவையில்லை. தி.மு.க கூட்டணியில் இருந்தபோதிலும், எங்களது சொந்தச் செல்வாக்கில்தான் 18 சீட்களை வென்றோம். 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரஸும் தி.மு.க-வும் தனித்தனியாகத்தான் போட்டியிட்டன. அதன் பிறகு காங்கிரஸ் பேரியக்கம் காணாமல் போய்விட்டதா... கூட்டணி என்பது, உங்கள் வாக்கு எங்களுக்கு. எங்கள் வாக்கு உங்களுக்கு என்கிற ஒப்பந்தம் மட்டும்தான். வாக்கு சதவிகிதம் ஒன்றா, நாற்பதா என்பது பொருட்டல்ல. அந்த ஒரு சதவிகித வாக்கை முடிவுசெய்கிற இடத்தில் ஒரு சாதாரணக் கட்சி இருந்தால்கூட, அதைச் சேர்த்துக்கொள்வதுதான் கூட்டணி. ‘பா.ஜ.க இல்லை யென்றால், நாங்கள் ஆட்சி அமைத்திருப்போம்’ என்று அ.தி.மு.க சொன்னதைவைத்து, பா.ஜ.க-தான் தன்னைச் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அண்ணா மலைக்கு அரசியல் பாலபாடம் தெரியவில்லை. என்னுடன் பொதுவெளியில் ஒன் டு ஒன் விவாதத்துக்கு வந்தால், நானே அவருக்கு அரசியல் பாடத்தைக் கற்பிக்கிறேன்!”